ஐ.பி.எல் 2018 - சென்னை எதிர் ஹைதராபாத் - இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. இரண்டு மாதங்கள் - 60 போட்டிகள் - எட்டு அணிகள் என நம்மை மகிழ்வித்த இருபது-20 கிரிக்கெட் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தருணம் வந்து விட்டது. 



ஐபிஎல் 2018 இல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களையும் கைப்பற்றிய இரண்டு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்தப் போகின்றன. முதலாவது தகுதிகாண் போட்டியில் பரபரப்பான இறுதிக் கட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுநர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்த போட்டிக்குத் தேர்வானது. இரண்டாவது தகுதி காண் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தேர்வானது ஹைதராபாத்.

ஐபிஎல் 2018 இன் இறுதிப்போட்டி 2018.05.27 இன்று இரவு 07 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை அணி ஏழாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. சென்னை இரண்டு முறை ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளதுடன் சன் ரைசர்ஸ் இதுவரை ஒரு தடவை மட்டுமே கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.  

இரண்டு அணிகளில் யார் வென்றாலும் கிண்ணம் தமிழ்நாடு, சென்னைக்குத் தான் வரப்போகிறது. ஏனெனில் சென்னை அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் சன் டிவி ஆகிய இருவரினதும் தலைமையகங்கள் சென்னையில் தான் இருக்கின்றன. 

எட்டு அணிகளாகப் பிரிந்திருந்த ஐபிஎல் ரசிகர்கள் இப்போது இரண்டாகப் பிரிய வேண்டிய தருணம் இது. வெற்றி யாருக்கு? சென்னைக்கா? ஹைதராபாத்துக்கா? தோனிக்கா? தவானுக்கா? பார்த்துவிடலாம், இன்று இரவு...

#ஐபிஎல் #ஐபிஎல்2018 #ஐபிஎல்இறுதிப்போட்டி #ipl #ipl2018 #iplfinal #iplfinal2018 #vivoipl #CSKvSRH #MSD #MSDhoni

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!