உச்சக் கட்டத்தில் ஐ.பி.எல் - அரையிறுதியில் பலப்பரீட்சை!

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா 2018 பதினோராம் பருவம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதற்கட்டப் போட்டிகளான 56 போட்டிகளும் நிறைவுக்கு வந்துள்ளன. தற்போது அரையிறுதிக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதலில் முதற்கட்டப் போட்டிகளின் பின்னரான புள்ளிப்பட்டியலைப் பார்த்துவிட்டு வருவோம். 

01 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 18 புள்ளிகள் - சராசரி +0.284

02 - சென்னை சூப்பர் கிங்ஸ் - 18 புள்ளிகள் - சராசரி +0.253

03 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 16 புள்ளிகள் - சராசரி -0.070

04 - ராஜஸ்தான் ராயல்ஸ் - 14 புள்ளிகள் - சராசரி -0.250

05 - மும்பை இந்தியன்ஸ் - 12 புள்ளிகள் - சராசரி +0.317

06 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 12 புள்ளிகள்  +0.129

07 - கிங்ஸ் இலவன் பஞ்சாப் - 12 புள்ளிகள் -0.502

08 - டெல்லி டேர்டெவில்ஸ் - 10 புள்ளிகள் -0.222

முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகளும் அரையிறுதிக்குத் தேர்வு பெற்றுள்ளன. அரையிறுதி கடுமையான போட்டிக்களமாக அமையவிருக்கிறது. சன் ரைசர்ஸ், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளுக்கே இறுதிப் போட்டிக்குள் நுழையும் பெரும்பான்மை இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது.

சென்னையும் சன் ரைசர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 



அரையிறுதிப் போட்டி அட்டவணை இதோ: 

நேரடித் தகுதிப் போட்டி (Qualifier 1): 
22.05.2018
சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 
வான்கடே, மும்பை 
இரவு 07 மணி 
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தேர்வு பெறும். தோல்வியுறும் அணி வெளியேற்றுநர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதி இறுதிப்போட்டிக்குச் செல்லும்.



வெளியேற்றுநர் போட்டி (Eliminator):
23.05.2018
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் 
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 
இரவு 07 மணி 
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடித் தகுதிப் போட்டியில் (Qualifier 1) தோல்வியுற்ற அணியுடன் மற்றுமொரு தகுதிப் போட்டியில் மோதி இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டும்.



தகுதிப் போட்டி 02 (Qualifier 2):
25.05.2018
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 
இரவு 07 மணி 
நேரடித் தகுதிப் போட்டி(Qualifier 1)யில் தோல்வி அடைந்த அணியும் வெளியேற்றுநர் போட்டி(Eliminator)யில் வெற்றி பெற்ற அணியும் இப்போட்டியில் மோதும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடித் தகுதிப் போட்டி(Qualifier 1)யில் வெற்றி பெற்ற அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கும். 

மாபெரும் இறுதிப்போட்டி 
GRAND FINAL 
27.05.2018
வான்கடே, மும்பை 
இரவு 07 மணி 
நேரடித் தேர்வாளர் போட்டி(Qualifier 1)யில் வெற்றி பெற்ற அணியும் தேர்வாளர் போட்டி 02 (Qualifier 2)யில் வெற்றி பெற்ற அணியும் மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றப் போராடும். 

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவில் சென்னை தான் விளையாடிய ஒன்பது தொடர்களிலும் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. இம்முறை வெற்றிக்கிண்ணத்தை சென்னை கைப்பற்றுமா? மீள் வருகையை வெற்றியாக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

#ஐபிஎல் #ஐபிஎல்2018 #IPL #IPL2018 #VIVOIPL #VIVOIPL2018 #CSK #SRH #KKR #RR #MSD #MSDHONI #SIGARAM #SIGARAMCO #சிகரம் #சிகரம்பாரதி 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!