பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன? எப்போது? எப்படி?

இதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார். விஜய் தொலைக்காட்சி இரண்டாம் முறையாகவும் ஒளிபரப்பக் காத்திருக்கிறது. 

விக்கிப்பீடியாவின் தகவலின் படி ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஞாயிறு முதல் 23 செப்டெம்பர் ஞாயிறு வரை 99 நாட்கள் ஒளிபரப்பாகவுள்ளது. 15 போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர். 60 ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்படவுள்ளன. 

கடந்த வருடம் 25 ஜூன் 2017 முதல் 30 செப்டெம்பர் 2017 வரை பிக் பாஸ் தமிழ் முதலாம் பருவம் ஒளிபரப்பானது. வாரநாட்களில் இரவு ஒன்பது மணி முதல் 10.30 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 08.30 மணி முதல் பத்து மணி வரையும் அன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள் தொகுத்து ஒளிபரப்பாக்கப்பட்டன.




அறிமுக நாளில் 14 போட்டியாளர்களும் அதன் பின்னர் இடை நடுவில் 05 போட்டியாளர்களும் அறிமுகமாயினர். இறுதியில் ஆரவ் வெற்றி வாகை சூடினார். இந்நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. 

ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய பருவம் தொடங்கும் போது வீட்டின் அமைப்பு புதிதாக மாற்றி அமைக்கப்படும். வீடு முழுவதும் குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்படும். இரண்டாம் பருவத்திற்கான வீட்டின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. 

கடந்த பிக் பாஸ் ஹிந்தி பதினோராம் பருவத்தில் குற்றம் இழைத்தவர்களை தங்க வைக்க சிறைக் கூடம் கட்டப்பட்டிருந்தது. மேலும் ஆரம்பம் முதலே ரகசிய அறையில் சிலர் தங்க வைக்கப்பட்டு போட்டியாளர்களுடன் போட்டியிட வைக்கப்பட்டு இருந்தனர். இது போன்ற விடயங்கள் தமிழிலும் இம்முறை அறிமுகப்படுத்தப்படலாம். 

எல்லாவற்றையும் முழுமையாக அறிந்து கொள்ள நீங்கள் இன்னும் நான்கு வாரங்கள் காத்திருக்க வேண்டும். பிக் பாஸ் தமிழ் பருவம் இரண்டு தொடர்பான அனைத்து தகவல்களையும் சிகரம் உங்களுக்கு உடனுக்குடன் வழங்கக் காத்திருக்கிறது. 

#பிக்பாஸ்2 #BiggBossTamil2 #BiggBoss2 #BiggBossSeason2 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #VivoBiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #பிக்பாஸ்தமிழ்2

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!