ஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்?
ஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் இடம்பெறுகின்றன. இதில் 56 போட்டிகள் முதல் சுற்றுப் போட்டிகள் ஆகும். ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளை தலா இவ்விரு தடவைகள் எதிர்த்தாட வேண்டும். ஒரு அணிக்கு முதல் சுற்றில் 14 போட்டிகள் இடம்பெறும்.
தற்போது மே 08 ஆம் திகதி போட்டியின் பின்னர் அனைத்து அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. இன்னும் நான்கு போட்டிகளே எஞ்சியிருக்கும் நிலையில் அரையிறுதிக்குத் தேர்வாகப் போகும் அந்த நான்கு அணிகள் எது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.
தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை முறையே கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடனும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 புள்ளிகளுடனும் கைப்பற்றியுள்ளன.
ஐந்தாமிடத்தில் மும்பை 08 புள்ளிகள், ஆறாம் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 08 புள்ளிகள், ஏழாம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 06 புள்ளிகள் மற்றும் எட்டாம் இடத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் 06 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.
முதலிடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் ஒரு போட்டியிலும் இரண்டாமிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகி விடும். பதினெட்டுப் புள்ளிகளைப் பெறும் அணிக்கு அரையிறுதி நிச்சயம். காரணம் பதினெட்டுப் புள்ளிகளைத் தாண்டும் சூழல் இப்போது எந்த அணிக்கும் இல்லை.
தரப்படுத்தலில் இறுதி இடங்களில் உள்ள அணிகள் கூட இனிவரும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. முதலிரு அணிகளைத் தவிர மற்றைய எல்லா அணிகளும் தங்களது வெற்றியைத் தக்கவைக்க மிகக் கடுமையாகப் போராட வேண்டும்.
பொறுத்திருந்து பார்ப்போம் அரையிறுதிக்குத் தேர்வாகப் போவது யார் என்று...
#IPL #IPL2018 #VIVOIPL #ஐபிஎல் #ஐபிஎல்2018 #IPL2018PLAYOFF #SIGARAM #சிகரம் #சிகரம்பாரதி
பொறுத்திருந்து பார்ப்போம் அரையிறுதிக்குத் தேர்வாகப் போவது யார் என்று...
#IPL #IPL2018 #VIVOIPL #ஐபிஎல் #ஐபிஎல்2018 #IPL2018PLAYOFF #SIGARAM #சிகரம் #சிகரம்பாரதி
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்