பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் துவங்கப்போவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் நடிகரும் மய்யம் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

பிக்பாஸ் இரண்டாவது பருவத்தின் போட்டியாளர்கள் யார், துவங்கும் திகதி என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. 



இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் பத்தாவது விருது வழங்கும் விழா (10th annual vijay awards 2018) எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதன்போது பிக்பாஸ் இரண்டாம் பருவம் துவங்கும் திகதி குறித்த உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இது ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் முடித்து வைக்கப்படவுள்ள நிகழ்ச்சிகள் எவை என தெரியவில்லை. கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு விஜய் தொலைக்காட்சியிலேயே பகலிலும் நள்ளிரவிலும் ஒளிபரப்பானது. இம்முறையும் அது போவே நடக்குமா அல்லது புதிய தொலைக்காட்சியான விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுமா எனத் தெரியவில்லை. முழுமையான தகவல்கள் விரைவில்...

பதினைந்து பிரபலங்கள்

அறுபது ஒளிப்பதிவுக் கருவிகள் 

நூறு நாட்கள்

ஒரே வீட்டில்

நல்லவர் யார்? கெட்டவர் யார்?

பிக்பாஸ்

இரண்டாம் பருவம்

விரைவில்...

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்தமிழ்2 #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #BiggBossTamilSeason2 #KamalHassan #VijayTV ##VijaySuperTV ##VijayAwards #10thAnnualVijayAwards

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018