நீ - நான் - காதல் - 04
கருவிழியிரண்டு கண்கொட்டாமல் பார்க்குதென்னை பலப் பல கனவுகள் காண்கின்றேன் கயல்விழிகளில் ஒரு பார்வைக்குள் ஓராயிரம் பிரிவுகள் வெட்கப் பார்வை மோகப் பார்வை அன்புப் பார்வை என இன்னும் பல எத்தனை தடவை எப்படிப் பார்த்தாலும் அத்தனையிலும் தெரிவது அகத்தினில் தேங்கிக்கிடக்கும் கற்கண்டு உள்ளத்தாள் கன்னியவள் காதல்!