Sunday, 22 December 2013

முக நூல் முத்துக்கள் பத்து - 04

01. ♦என் தாத்தா பூமியை தோண்டிய போது

அவருக்கு நிறைய தங்கம் கிடைத்ததாம்

♦என் அப்பா பூமியை தோண்டிய போது


அவருக்கு நிறைய தண்ணீர் கிடைத்ததாம்

♦நான் பூமியை தோண்டிய போது

எனக்கு நிறைய கண்ணிவெடிகள் கிடைத்தது

♦என் மகன் பூமியை தோண்டும்போது அவனுக்கு

நிறைய எலும்புக்கூடுகள் கிடைக்கும்.....


02. கொழுப்புதான் இந்த கோவில் யானைக்கு..

எல்லோரையும் ஆசிர்வாதம் செய்துவிட்டு
உன்னைமட்டும் முத்தமிடுகிறது.. 

#சுட்டவை

03. வாழ்வில் நீ 
வெற்றி பெறும் போதெல்லாம்
உன் முதல் தோல்வி 
நினைவுக்கு வந்தால்
உன்னை வெல்ல யாராலும் முடியாது.

04. நீ
படிக்கிற அழகை
நினைத்து நினைத்து
எழுத முடியாமலே போய்விட்டது
உனக்கான கடிதத்தை
-பழநிபாரதி
(முத்தங்களின் பழக்கூடை)

05.
 Atshan Maddox's photo.

06. நீ
வெள்ளாடை
அணியும்
நாட்களெல்லாம்
வேண்டுமொரு
வங்கக்கடலின்
தாழ்வு மண்டலம்...


07.ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக
நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் ஒன்றேதான்-தினம்
கட்சிகள் செய்வது இன்றேதான்!
மக்கள் அவையே கூடுவதும்-உடன்
மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி முடிப்பதற்கா-வீண்
தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்கும்-எதையும்
ஆய்வதும் இல்லை பேருக்கும்
துக்கமே உண்டா துளிகூட-காணும்
தொடர்கதை ஆனது நாம்வாட
ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
ஏற்றம் பெறவா!? இவ்வாறே
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
புலவர் சா இராமாநுசம்

08.
Kirishna Thileepan's photo.

09. 'சே'வின் மோட்டார் சைக்கிள் டையறியிலிருந்து...
"ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இல்லை என்பதுதான் உண்மை. இவர் இல்லாவிட்டால் இன்னொருவர. பெயர்தான் மாறுமே ஒழிய அரசு அமைப்பு மாறாது. ஒடுக்குடமுறை மாறாது. இருந்தாலும் தேர்தல் என்றொரு சடங்கு நடத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. மக்களும் வேறு மாற்று இல்லாததால் இந்த ஏமாற்று நடைமுறையைத்தான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இவர் சரியில்லை என்று பட்டால் அவரைக் கொண்டு வருகிறார்கள். அவர் சரியில்லாது போனால் மீண்டும் இவர் அல்லது, இன்னொருவர்."

10.
ஆசிரியர் பக்கம்'s photo.
 


10 comments:

 1. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன். ஆன்ட்ராய்ட் மூலம் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

   Delete
 2. நன்று.... கடைசி செய்தி மனதைத் தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். முதியவர்கள் என்றாலே தங்கி வாழ்பவர்கள் என்று அடையாளப்படுத்தியுள்ள நிலையில் இவர்கள் தங்களால் வாழ்பவர்கள். நன்றி.

   Delete
 3. Replies
  1. வணக்கம் பகவான்ஜீ. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. முதல் கவிதை வலி தந்தது....சிறப்பான தொகுப்பு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் எழில். உங்கள் உற்சாகமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   Delete
 5. சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 6. சிறப்பாக உள்ளது.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்? #BB WEEK 01 NOMINATION

பிக் பாஸ் தமிழ்  பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01  18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...