Posts

Showing posts from August, 2017

சிகரம் பணிக்கூற்று - 2017.07.01 - 2018.05.31

Image
 சிகரம் திருவள்ளுவராண்டு 2048 ஆனி 17, 2017.07.01 - சனிக்கிழமை. மகுட வாசகம் தமிழ் கூறும் நல்லுலகு! தூரநோக்கு தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்! எமது இலட்சிய நோக்கு * தமிழர் வரலாறு, பழந்தமிழ் நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தல், காட்சிப்படுத்தல் மற்றும் எண்ணிமமாக்கல். * தமிழில் உலகின் மிகப்பெரிய எண்ணிம நூலகத்தையும் தரவு மையத்தையும் உருவாக்குதலும்  உலகின் முதற்தர தமிழ்ச் செய்திச் சேவையாகத்  தொழிற்படுதலும். * உலகின் மொழிகள் அனைத்திலும் தலை சிறந்த படைப்புகள் அனைத்தையும் தமிழில் வழங்குதலும் கடந்தகால மற்றும் தற்கால தமிழ்ப் படைப்புக்களை எண்ணிமமாக்கலும்  படைப்பாளிகளை ஊக்குவித்தல், கௌரவித்தல். * அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதல் மற்றும் சகோதர மொழிக

பிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா!

Image
பிக்பாஸ் நிகழ்ச்சி தனது ஒன்பதாவது வாரத்தையும் நிறைவு செய்துள்ளது. இந்த வாரம் வீட்டுக்குள் பெரிதாக எந்த சிக்கல்களும் இல்லாதிருப்பது கண்டு மனம் நொந்த பிக்பாஸ் கமல் மூலமாக குடும்ப உறுப்பினர்களிடையே பிளவை உண்டு பண்ணினார். குடும்ப உறுப்பினர்களின் மீதான புகார்களை வழக்காடு மன்றத்தின் மூலமாக விசாரிப்பதாக ஒரு பணியைக் கொடுத்து சிக்கல்களை சிறிது இல்லத்திற்குள் அனுப்பி விட்டார். முழுமையான விளைவுகள் திங்கள் ( 28 ) அத்தியாயம் முதல் தெரிய வரும்.                                                *************************** பதிவை முழுமையாக வாசிக்க ' சிகரம் ' இணையத்தளத்துக்குப் பிரவேசியுங்கள் :  பிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா!  

என்ன மச்சான்? சொல்லு மச்சி! - 02

Image
என்ன மச்சான்? சொல்லு மச்சி! என்னத்த சொல்ல? நானே ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சில இருந்து வெளில போன கவலைல இருக்கேன்... ஏன், ஜூலியும் தானே வெளிய போனாங்க? ஆமா. ஆனா ஓவியாவுக்காக கவலைப்படறவங்கள்ல ஒரு சிலர் கூட ஜூலிக்காக வருத்தப்படறதில்ல... இது தப்பில்லையா? எது தப்பு? ஜூலி பண்ணது தான் தப்பு. ஓவியா சரியாத்தான் இருந்தாங்க. ஜூலி இந்த நிகழ்ச்சி நடக்குற அந்த நூறு நாள் மட்டுமே தன்னோட வாழ்க்கையை தீர்மானிக்கப் போகுதுன்னு தப்பா நெனச்சிக்கிட்டதுனால தப்பு பண்ணிட்டாங்க. அதையே பெருசு படுத்திப் பேசுறது தப்பில்லையா? ஜூலி ஒன்னும் சின்னப் பொண்ணு கெடையாதுல்ல? ஆமா. ஆனா அந்த பதினாறு பேருக்குள்ள நடக்குற விசயங்களை மட்டும் வச்சி அவங்கள எடை போடுறது நியாயமா? பேஸ்புக்ல போய்ப் பாரு புரியும். ஓவியாவுக்காக இளைஞர்கள் அப்படியே உருகுறாங்க. அதே பேஸ்புக்ல தான் ஜூலியை கீழ்த்தரமா விமர்சிச்சும் எழுதறாங்க. ஜூலி பண்ணது தப்பே இல்லங்குறியா? நா அப்படி சொல்லல பின்ன? நம்ம எல்லோருக்கும் ஓவியாவை ஏன் பிடிக்குது? ஏன்னா அவங்க எதைப் பத்தியும் கவலைப்படறதில்ல, அன்பா இருக்காங்க, சந்தோசமா இருக்காங்க. மிகச்சரி.