Posts

Showing posts with the label வலைப்பூங்கா

சிகரம் வலைப்பூங்கா - 04

Image
உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான நினைவுகள் சுற்றிப்பிடித்து விழுங்க ஆரம்பிக்கும். இதனைச் சமநிலை குலையாமல் எழுதும் போதே சுயபுனைவுக்கான வடிவம் கூடிவருகிறது. இவற்றை சுயசரிதையாக வெறுமே கருத முடிவதில்லை. ஊகங்களாகக் கடந்து செல்ல வேண்டியவற்றைக் கூட சம்பவங்களாக எழுதி ஆசிரியரால் இட்டு நிரப்படப்படுகிறது. புனைவுக்கான முடிச்சுகளுடன் கச்சிதமாக முடிக்கப்படுகின்றன. முழுமையாக வாசிக்க...   திருக்குறள் கதைகள் - அறத்துப்பால் - 255. சரஸ்வதியின் சந்தேகம் "மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் ப...

சிகரம் வலைப்பூங்கா - 03

Image
வலைப்பதிவு : கலையும் மௌனம்  பதிவு : அப்பெல்லாம் எப்படி தெரியுமா?  அப்பெல்லாம் எப்படி தெரியுமா ? அந்தகாலத்துல நாங்கெல்லாம்.., அது ஒரு காலம்யா.. என்றெல்லாம் சிலாகித்து பெரியவர்கள் தங்களுடைய "அந்தநாள்" விசயங்களை சொல்லக் கேட்டிருப்போம்.  முழுமையாக வாசிக்க Photo Credit : Google / moneyhomeblog.com வலைப்பதிவு : காளிகபாலி  பதிவு : வாசம் வீசும் நேரம்   "வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம்..." "வாசமில்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது......" வாசம், வாசனை, நறுமணம், மணம் என்றதும் உங்களுக்குச் சட்டென்று மனதில்தோன்றும் வாசம் எது?  முழுமையாக வாசிக்க வலைப்பதிவு : திண்டுக்கல் தனபாலன்  பதிவு : நல்லவர் யார்...? கெட்டவர் யார்...?  திருவள்ளுவரின் குறளும் அதற்குப் பொருத்தமான பாடல்களும் அடங்கிய பதிவு  முழுமையாகப் படிக்க வலைப்பதிவு : எங்கள் Blog  பதிவு : திங்கக்கிழமை : மோர் ரசம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி - மோர் ரசம் மோர் ரசம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். இந்த வ...

சிகரம் வலைப்பூங்கா - 02

Image
வலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் தனது கவிதைகளுடன் திரையிசைப் பாடல்களும் ஒலிபரப்பான ' கவிதையும் கானமும் ' நிகழ்ச்சியை எழுத்து வடிவில் நமக்குப் படைத்தளித்திருக்கிறார். அவர் தனது 'நிழல் உலகம்' என்னும் கவிதையில் இப்படிக் கூறுகிறார்.  இளைப்பாறுதல்களும் எல்லை மீறுதல்களும் மலிந்து கிடக்கும் இவ்வுலகில் பொய் முகத்துடனும் புனை பெயருடனும் ஒரு வேளை நீயுமிருக்கலாம் என்ற எண்ணம் வரும் போது மட்டும் ஒரு கணம் நின்று - பின் துடிக்கிறது இதயம் இப்படியாக அவரது பல கவிதைகளை ' கவிதையும் கானமும் ' பதிவில் எழுத்து வடிவில் மட்டுமல்லாது ஒலி வடிவிலும் கேட்டு மகிழலாம்.  ஒரு படைப்பை படைப்பாளனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் வாசகனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வாசகனின் பார்வை பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும். எழுத்தாளன் சிந்திக்காத கோணத்தையெல்லாம் வாசகன் சிந்தித்து அறிவான். எழுத்தாளன் ஒரு படைப்பை ஒரு தடவை தான் எழுதுகிறான்....

சிகரம் வலைப்பூங்கா - 01

Image
வணக்கம் நண்பர்களே! தமிழ் இணைய உலகில் ஆயிரமாயிரம் அருமையான தமிழ்ப் பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் எங்கள் கண்ணில் பட்ட சில நல்ல பதிவுகளை சிகரம் வலைப்பூங்காவில் தொகுத்து வழங்க எண்ணியுள்ளோம். உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். 'சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி' என்னும் மகுட வாசகத்தைத் தாங்கி படைப்புகளை வழங்கி வருகிறது ' ஒரு ஊழியனின் குரல் ' வலைத்தளம். அந்த வலையில் இருந்து இன்று நம் வாசிப்புக்கு தீனி போடப் போவது ' சமரசம் ' சிறுகதை. நம் வாழ்க்கையில் நாம் பல விடயங்களுக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் சில நேரங்களில் சமரசங்களால் ஆனதாகவே மாறி விடுகிறது. அப்படி ஒரு நாதஸ்வர கலைஞர் சமரசம் செய்து கொள்ள வேண்டியேற்படும் சூழலை அற்புதமாக தனது கதையில் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை - சமரசம் . 'எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோர்த்தபடி' பயணித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவு தான் நமது ' முத்த...