Share it

Saturday, 30 June 2018

பிக் பாஸுக்கு தடையில்லை! நீதிமன்றம் அறிவுப்பு!

பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவத்துக்கு கடந்த வாரம் முதலே சிக்கல்கள் ஆரம்பித்திருந்தன. தமிழ்நாடு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழகத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் படப்பிடிப்புக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 90%மானோர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். முதலாம் பருவத்திலும் இதே பிரச்சினை ஏற்பட்டிருந்த போதும் 'இந்த முறை மட்டும் விட்டிருங்க' என்பது போல பேசி முடித்திருக்கின்றனர். அனால் இம்முறையும் அது போலவே நடைபெற விஷயம் பெரிதாகியிருக்கிறது. 

பிக் பாஸ் படப்பிடிப்புக்கு இந்த இரண்டாம் பருவத்தில் மும்பை தொழிலாளர்கள் 90%மானோரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தைச் (FEFSI) சேர்ந்த தொழிலாளர்கள் 10%மானோரும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். பிக் பாஸ் படப்பிடிப்பு தொழிநுட்பங்கள் தமிழகத்திற்குப் புதிது என்பதால் பெப்சி சங்கம் தமிழகத் தொழிலாளர்கள் 50%மானோரை மட்டுமேனும் பயன்படுத்துமாறும் தொடரும் அடுத்தடுத்த பருவங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் பெப்சி சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் ஒளிபரப்பை இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்துமாறு விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு பெப்சி சங்கம் அறிவித்திருந்தது. மேலும் 100 பெப்சி சங்க தொழிலாளர்களுடன் பிக் பாஸ் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் உத்தியோக பூர்வ ஒளிபரப்பாளரான எண்டமோல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெப்சி சங்கம் பிக் பாஸ் படப்பிடிப்புக்கு எந்தவொரு தடையும் ஏற்படுத்தக் கூடாது என தடையுத்தரவு பெற்றிருக்கிறது. இனி இந்த விவகாரத்தில் பெப்சி சங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நீதிமன்றம் மூலமாகவே மேற்கொள்ள முடியும். இது பெப்சி சங்கத்துக்கு பின்னடைவைத் தருவதாக அமைந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் கூட பெப்சி சங்கத்தின் ஒரு உறுப்பினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #BiggBoss #BiggBossTamil #VijayTV #Mumtaz #Mamathi #KamalHassan #Elimination #Nomination #Eviction #BB2 #SIGARAMCO #சிகரம்

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்முன்னோட்ட காணொளி - 01முன்னோட்ட காணொளி - 02

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #BiggBoss #BiggBossTamil #VijayTV #Mumtaz #Mamathi #KamalHassan #Elimination #Nomination #Eviction #BB2 #SIGARAMCO #சிகரம்

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | வெளியேறப்போவது யார் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் நிறைவுக்கு வந்து விட்டது. பிக் பாஸ் இரண்டாம் பருவத்தில் பதினாறு போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஜூன் மாதம் பதினேழாம் திகதி இரண்டாம் பருவம் ஆரம்பமானது. இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் இரண்டாம் பருவத்தின் முதல் வாரத்தில் இருந்தே வீடு அதகளப்பட்டு வருகிறது. நித்யா - பாலாஜி இடையிலான பிரச்சினை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சக போட்டியாளர்களுக்கிடையிலும் அவ்வப்போது கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. பிக் பாஸ் கடந்த முறை போலல்லாது இம்முறை ஆரம்பத்தில் இருந்தே கடுமை காட்டி வருகிறார். 

பிக் பாஸ் முதலாம் வாரத்தில் வெளியேற்றம் இடம்பெறவில்லை. இரண்டாம் வார வெளியேற்றத்துக்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

மமதி, பொன்னம்பலம், அனந்த், மும்தாஜ் ஆகிய நால்வர் இந்த வார வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். வெளியேறப்போவது யாராக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணமுள்ளனர். 

'சிகரம்' வாசகர்களிடம் நாம் நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள் எனும் கேள்வியை முன்வைத்திருந்தோம். இதோ அக்கேள்விக்கான முடிவுகள்: 
மும்தாஜ் - 76 வாக்குகள் - 42.46%
பொன்னம்பலம் - 56 வாக்குகள் - 31.28% 
அனந்த் - 29 வாக்குகள் - 16.20%
மமதி - 18 வாக்குகள் - 10.06% நமது வாக்களிப்பு முடிவுகளின் படி மமதியே இந்த வாரம் வெளியேறவிருக்கிறார். அதே நேரம் அனந்த் வைத்தியநாதனுக்கும் நெருங்கிய வாய்ப்புகள் உள்ளமையை அவதானிக்க முடிகிறது. 

நமது 'சிகரம்' வாசகர்களுக்காக சில இணையத்தள வாக்களிப்பு முடிவுகளையும் இங்கே தொகுத்துள்ளோம். அந்த முடிவுகள் நமது முடிவுகளுடன்  ஒத்துப் போகின்றனவா? வாங்க பார்க்கலாம். 


பொன்னம்பலம் - 70,194 - 37.34% 
மும்தாஜ் - 65,471 - 34.47%
அனந்த் - 34,952 - 18.4% 
மமதி - 18,601 - 9.79% 


மும்தாஜ் - 190,166 - 38.04%
பொன்னம்பலம் - 147,641 - 29.53% 
அனந்த் - 97,380 - 19.48% 
மமதி - 64,726 - 12.95%


மும்தாஜ் - 50,927 - 38.49% 
பொன்னம்பலம் - 42,888 - 32.41% 
அனந்த் - 22,332 - 16.88% 
மமதி - 16,163 - 12.22 % 

கூகுள் தேடலில் முதல் மூன்று இணையத்தள முடிவுகளையும் இங்கே தொகுத்திருக்கிறோம். இந்த மூன்று இணையத்தள வாக்கெடுப்புகளிலும் சரி, நமது சிகரம் வாக்கெடுப்பிலும் சரி ஒரே மாதிரியான முடிவுகளே கிடைக்கப்பெற்றுள்ளன. 

மும்தாஜ் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளனர். அனந்த்தும் மமதியும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர். அனைத்து வாக்களிப்பிலும் மமதியே கடைசி இடத்தில் உள்ளார். ஆகவே மமதி வெளியேறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. மமதி இல்லாத பட்சத்தில் அனந்த் வெளியேற்றப்படலாம். அடுத்த வார வெளியேற்றத்திற்கும் அனந்த் இப்போதே நேரடியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மமதி இல்லாத பட்சத்தில் மும்தாஜ் வைஷ்ணவியுடன் கூட்டுச் சேரக் கூடும். மமதி தான் மும்தாஜை தூண்டி விடுகிறார் என்கிற குற்றச்சாட்டும் போட்டியாளர்களிடையே உள்ளது. மமதியை பல போட்டியாளர்கள் விரும்பவில்லை. 

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம், இரண்டாம் வாரத்தில் வெளியேறப்போவது யார்? மமதியா? அனந்த்தா? அல்லது நாம் எதிர்பாராத முடிவா? பொருத்திருந்து பார்ப்போம். 

இந்த பிக் பாஸ் இல்லத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் யார்? உங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்யலாமே? 
உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா YASHIKA
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் ANANTH
ரம்யா RAMYA
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker


#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #BiggBoss #BiggBossTamil #VijayTV #Mumtaz #Mamathi #KamalHassan #Elimination #Nomination #Eviction #BB2 #SIGARAMCO #சிகரம் 

சிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018

வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய பதிவுகளை வாசிக்கவும் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை மீண்டும் வாசிக்கவும் இத்தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

#101/2018
2018/06/02
சிகரம் செய்தி மடல் - 015 - சிகரம் பதிவுகள் 2018
https://www.sigaram.co/preview.php?n_id=327&code=Iw9eVEgJ 
பதிவு : சிகரம்
#SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
#சிகரம்


#102/2018/SIGARAMCO
2018/06/02
இராஜராஜர் பராக்...! 
https://www.sigaram.co/preview.php?n_id=328&code=42yL9Jq0
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO

#103/2018/SIGARAMCO
2018/06/03
சிகரம் டுவிட்டர் - 03 
http://sigaram.co/preview.php?n_id=329&code=YOSFqHhN 
பதிவு : சிகரம் 
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER

#104/2018/SIGARAMCO 
2018/06/23 
இருள் - சிறுகதை 
https://www.sigaram.co/preview.php?n_id=330&code=zL2JPjKd 
பதிவர் : பிரமிளா பிரதீபன்
#சிறுகதை #இருள் #பிரமிளாபிரதீபன் #பேஸ்புக் #தமிழ் #கற்பு #பெண் #உலகம் #பயணம் #ShortStory #PramilaPradeepan #FaceBook #Tamil #Girl #World #Travel #SIGARAMCO 
#சிகரம்
 
#105/2018/SIGARAMCO 
2018/06/23 
சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  
https://www.sigaram.co/preview.php?n_id=331&code=yrsx9Dl2 
'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே?
#சிகரம்

 

#106/2018/SIGARAMCO 
2018/06/23 
பதிவர் : கவின்மொழிவர்மன் 
#பெரியபுராணம்_சேக்கிழார் #கவின்மொழிவர்மன் #கண்ணப்பநாயனார் #கவிதை #தமிழ் #பக்தி #Kavinmozhivarman #Tamil #poem #Thamizh #KannappaNaayanaar #SIGARAMCO #சிகரம் 
#சிகரம்

#107/2018/SIGARAMCO 
2018/06/25 
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01  
https://www.sigaram.co/preview.php?n_id=333&code=iM6b2IBO
பதிவர் : சதீஷ் விவேகா
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம்
#சிகரம்

#108/2018/SIGARAMCO 
2018/06/28 
சிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்  
https://www.sigaram.co/preview.php?n_id=334&code=TIRVZDxY  
பதிவர் : தங்க. வேல்முருகன்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #தங்க_வேல்முருகன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Thanga_Velmurugan #Interview #Q&A #SIGARAM 
#சிகரம்

#109/2018/SIGARAMCO
2018/06/28 
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02  
https://www.sigaram.co/preview.php?n_id=335&code=b4hzgUix
பதிவர் : சதீஷ் விவேகா
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம்
#சிகரம்

#110/2018/SIGARAMCO 
2018/06/29 
சிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்   
https://www.sigaram.co/preview.php?n_id=336&code=sJIKfSpV
பதிவர் : மாரிராஜன்
#சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #மாரிராஜன் #நேர்காணல் #தமிழ் #கேள்வி_பதில் #Maariraajan #Interview #Q&A #SIGARAMCO
#சிகரம்

சிகரம் இணையத்தளத்தின் அண்மைய அலெக்ஸா மதிப்பெண்களின் நிலை பற்றிப் பார்ப்போம்.


முதலாவது தரவரிசை:
04/01/2018 - 12,513,910

இன்றைய அலெக்ஸா தரவரிசை:
12/04/2018 - 10,452,448
02/06/2018 - 19,175,025

இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

சிகரம் இணையத்தள அறிவிப்பு:
சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளுக்கு அப்படைப்பினை எழுதியவரே பொறுப்பாவார். படைப்பாளி சிகரம் இணையத்தளத்திற்கு வேறு தளங்களில் வெளியான படைப்பை தன் சுய விருப்பின் பேரில் வழங்கலாம். அது அவரது பொறுப்பாகும். சிகரம் இணையத்தளம் தானாக ஒரு படைப்பாளியின் படைப்பை வேறு தளங்களில் இருந்து எடுத்துப் பதிவிட்டால் அது பற்றிய முழுமையான குறிப்புகளை பதிவுடன் இணைத்து வழங்கும். படைப்பாளி முதன்முதலில் தான் சிகரம் இணையத்தளத்திற்கு வழங்கிய படைப்பை சிகரம் இணையத்தளத்தின் முன் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சிகரம் இணையத்தளத்தில் குறித்த படைப்பு வெளியிடப்பட்டமைக்கான குறிப்பை இணைத்து வெளியிட முடியும்.

சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளில் இணைக்கப்படும் மூன்றாம் தரப்பு புகைப்படங்களுக்கு சிகரம் இணையத்தளம் ஒரு போதும் உரிமை கொண்டாட மாட்டாது. சிகரம் இணையத்தள படைப்புகளை சிறப்புற வெளியிடும் நோக்கத்துக்காக மட்டுமே மூன்றாம் தரப்பு புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாம் தரப்பு புகைப்பட உரிமையாளர்கள் அல்லது இணையத்தளங்களுக்கு எமது நன்றிகள்.

https://www.sigaram.co/index.php | sigaramco@gmail.com | editor@sigaram.co

-சிகரம் 

Friday, 29 June 2018

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்பிக் பாஸ் தமிழ் 02
வாரம் 02 
நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் பிக் பாஸ். ஏங்க பெண்களை ஏழரை மணிக்கு எழுப்பி விட்டுட்டு ஆண்களை எட்டு மணிக்கு எழுப்பினா என்னங்க நியாயம்? அடுத்ததா பாட்டுப் போட்டப்போ பெண்கள் எல்லாம் உற்சாகமா ஆடுனாங்க. நடக்கட்டும்....ஜனனிக்கு மஹத் காலுக்கு நிறப்பூச்சு பூசி வீட்டுக் கொண்டிருந்தார். காலை உணவைத் தயாரிப்பதில் பாலாஜி, டேனி, பொன்னம்பலம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். காலை உணவு வேளையிலேயே பாலாஜி - நித்யா சண்டை ஆரம்பமானது. நித்யா காலை உணவை குப்பையில் கொட்டி விடுகிறார். மஹத் சாப்பாடை கொட்டாதீங்க என்கிறார். அது பிரச்சினையாக உருவாகிறது. பாலாஜி அல்லது நித்யா இருவரில் ஒருவரை வெளியேற்றினால் நல்லது. இல்லாவிட்டால் நூறு நாட்களும் இவர்களின் சண்டையை தான் நாம் பார்த்துக் கொண்டிருக்க நேரும். ஆண்கள் காலை உணவை எடுக்கின்றனர். பாலாஜி மீதே தவறு என்று பேசிக் கொள்கின்றனர். அந்த விடயம் தொடர்பில் போட்டியாளர்களுக்குள் பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. பாலாஜி பேசும் காட்சிகளில் வார்த்தைகளை வெட்ட வேண்டியதாய் இருக்கிறது. ஒரு பொது நிகழ்ச்சியில் இது ஆரோக்கியமானதல்ல. மும்தாஜும் வைஷ்ணவியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். எனது வாழ்க்கையில் எந்தவொரு கிசுகிசுவும் வந்ததில்லை என்று கூறுகிறார். பகல் சமையல் நடந்து கொண்டிருக்கிறது. யாஷிகா மும்தாஜ் கூறியதைப் பற்றி சமையல் அணியிடம் ரகசியப் புகாரளிக்கிறார். ஆண்கள் பெண்களை வேலை வாங்கியதைப் போல பெண்கள் ஆண்களை வேலை வாங்கவில்லை என்று தோன்றுகிறது. ஆண்கள் வேலைக்காரர்களாக இருக்கும் போதும் அதிகாரத் தோரணையோடு தான் இருக்கின்றனர். மும்தாஜை வேலை வாங்கினார்கள் ஆண்கள். ஆனால் அனந்த் அவ்வளவாக வேலை வாங்கப்படவில்லை. மதியம் இரண்டு மணிக்கு பிக் பாஸ் எல்லோரையும் கூப்பிட்டு கூட்டம் போடுகிறார். போட்டி முடிந்து விட்டதாம். நேற்றைப் போலவே யார் நன்றாக வேலை செய்யவில்லை என்று சொல்லுமாறு பெண் எஜமானர்களிடம் கேட்கிறார். டேனி ஏற்கனவே அடுத்த வார வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதால் அவரது பெயரை சொல்ல முடியாது என்கிறார். உடல் ரீதியான பிரச்சினை காரணமாக அனந்த் இன் பெயரை அடுத்த வார வெளியேற்றத்திற்கு பரிந்துரைப்பதாக பெண்கள் கூறுகின்றனர். ரித்விகா நல்ல எஜமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி அடுத்த வார வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றுகின்றனர். 

இத்துடன் இந்த வார போட்டிகள் முடிவடைகின்றன. புள்ளிகள் பற்றி பிக் பாஸ் கூறவில்லை. 3200 புள்ளிகளும் முழுமையாகக் கிடைத்திருக்கக் கூடும். ஆண்களை இரண்டு நாள் எஜமானர்களாக வைத்திருந்த பிக் பாஸ் பெண்களை ஒரு நாள் மட்டுமே எஜமானர்களாக இருக்க வைத்திருக்கிறார். இதுக்கு மேல விட்டா நமக்கு தான் ஆபத்துன்னு நெனச்சிருப்பார் போல. 

மாலை 03.45 மணி. யாஷிகா கட்டிலில் படுத்து அழுது கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா அவரை சமாதானப்படுத்துகிறார். பின்னர் சாரிக்கும் மஹத்தும் படுத்திருக்கும் கட்டிலில் யாஷிகாவும் படுத்து பேசிக் கொண்டிருக்கிறார். மாலையில் பெண்கள் சிலரும் ஆண்கள் சிலரும் குளியலறையில் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். மூன்றாம் வாரத்திற்கான பொருட் கொள்வனவுக்கான அறிவிப்பு வருகிறது. அதன் படி எஜமானர் - வேலைக்காரர் போட்டியில் ஆண்கள் அணி சிறப்பாக செயல்பட்டதால் அவர்களுக்கு 1600 புள்ளிகள் முழுமையாக வழங்கப்படுகின்றன. பெண்கள் அணி ஒழுங்காக செயல்படாததால் அவர்களுக்கு 200 புள்ளிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆக மூன்றாம் வாரத்திற்கான பொருட் கொள்வனவிற்கான மொத்தப் புள்ளிகள் 1800. மேலும் ஆண்கள் அணியே போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் ஆண்கள் மட்டுமே பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் என குண்டைத் தூக்கிப் போடுகிறார் பிக் பாஸ். சிறப்பு. நடத்துங்க. அதன் படி பொருட் கொள்வனவும் நடந்து முடிகிறது. 

சென்றாயன் ரித்விகா மற்றும் நித்யாவுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களை நக்கலடிக்கின்றனர். இரவில் போட்டியாளர்களுக்குள் சண்டை நடப்பதைப் போல நாடகமாடுகின்றனர். மும்தாஜை கலாய்க்கின்றனராம். டேனி முதலில் சிரித்துவிட மற்றவர்கள் எல்லோரும் சிரிக்கின்றனர். 

'ஒரு குடும்பத்தில் அக்கறையும் பொறுப்பும் இல்லாமல் நடந்து கொள்பவர்கள் ஆண்களா அல்லது பெண்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துகிறார் பிக் பாஸ். ஆண்களில் மூன்று பேரும் பெண்களில் மூன்று பேரும் பங்குபற்ற வேண்டும். போட்டியாளர்களில் ஒருவரே நடுவராக இருக்க வேண்டும். ரித்விகா, நித்யா, டேனி, பாலாஜி, வைஷ்ணவி, சென்றாயன் ஆகியோர் பேசினர். நடுவர் மஹத் ஆண்கள் அணி சிறப்பாக பேசியதாகக் கூறுகிறார். ஆனால் வெற்றியை பெண்கள் அணிக்கு வெற்றியை வழங்குவதாக கூறுகிறார். ஆண்களும் பெண்களும் இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடிய இந்த வாரப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினை இத்தோடு முடிவடையுமா அல்லது தொடருமா என்ற கேள்வியோடு விடைபெறுகிறார் பிக் பாஸ். எங்க பாஸ் பிரச்சினை முடியப் போகுது? அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே? அப்படியே முடிஞ்சாலும் விட்டுட்டு வேடிக்கை பாப்பீங்களா என்ன? சும்மா விளையாடாம அங்கிட்டு போங்க பிக் பாஸ்...


உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா ஆனந்த் YASHIKA ANAND
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL ANNIE POPE
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் வைத்தியநாதன் ANANTH VAIDYANATHAN
ரம்யா RAMYA NSK
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI CHARI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker


#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #நித்யா #பாலாஜி #BiggBoss #BiggbossTamil #VivoBiggBoss #VijayTV #Mumtaz #Nithya #Balaji #SIGARAMCO #சிகரம் 

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | உள்ளே யார்? வெளியே யார்?

பிக் பாஸ் தமிழ் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வார வெளியேற்றத்திற்கான வாக்களிப்பு இன்று நள்ளிரவுடன் முடிவடைய இருக்கிறது. ஆகவே விரைந்து உங்கள் வாக்குகளைத் தவறாது செலுத்துங்கள். உங்கள் அபிமான பிக் பாஸ் போட்டியாளரைக் காப்பாற்றுங்கள்! பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்? 


* உங்கள் வாக்குகள் நீங்கள் காப்பாற்ற நினைப்பவருக்கே வழங்கப்பட வேண்டும். 

* குறைவான வாக்குகளைப் பெறுபவர் வெளியேற்றப்படுவதுடன் அதிக வாக்குக்களைப் பெறுபவர் காப்பாற்றப்படுவார். 

* நீங்கள் ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கோ வாக்களிக்க முடியும். 


* ஒரு நாளில் ஒரு முறை தான் வாக்களிக்க முடியும். 

* திங்கட்கிழமை இரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை மட்டுமே உங்கள் வாக்குகள் பதிவு செய்யப்படும். 

* உத்தியோக பூர்வ வாக்களிப்புக்கு இணையத்தள இணைப்புகள் எதுவும் கிடையாது. இது கூகுளில் நேரடியாக வாக்களிக்கும் ஒரு முறை ஆகும். 


ஆகவே தாமதிக்காது இப்போதே உங்கள் வாக்குகளை கூகுளில் அல்லது தொலைபேசி வாயிலாகப் பதிவு செய்யுங்கள். 


பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் - 02 | வெளியேறப்போவது யார்? 


இந்த வாரம் வெளியேற்றத்திற்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபருக்கு 'BIGG BOSS VOTE' என்று கூகுளில் தேடுவதன் மூலமோ அல்லது அலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமோ வாக்களிக்கலாம். குறைவான வாக்குகளைப் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். 

வாக்களிப்பு முழு விவரம் இங்கே: 


'சிகரம்' இணையத்தள வாசகர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட வாக்களிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளோம். உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் எம்மோடு பகிந்து கொள்ள முடியும். இது உத்தியோக பூர்வ வாக்களிப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


சிகரத்தில் வாக்களிக்க: 


இந்த வெளியேற்றத்தை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள். இந்த பதினாறு போட்டியாளர்களில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார்? யாராச்சும் கேட்டார்களா? நாம கேப்போம். 

உங்க எண்ணங்களை இங்கே சொல்லுங்க: 
உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா ஆனந்த் YASHIKA ANAND
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL ANNIE POPE
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் வைத்தியநாதன் ANANTH VAIDYANATHAN
ரம்யா RAMYA NSK
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI CHARI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMakerவாழ்க பிக் பாஸ்! வளர்க பிக் பாஸ்!! 


#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்வாக்களிப்பு #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #BiggBossOnlineVote #BiggBossVote #VijayTV #KamalHassan #Maiam #Vishwaroopam2 #SIGARAMCO #சிகரம்

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts