பிக் பாஸ் தமிழ் 02 | நாள் 03 | வெங்காயப் போர் என்னவாயிற்று?
பிக்பாஸ் இன் மூன்றாம் நாள் 'சொடக்கு மேல சொடக்கு போடணும்' பாடலுடன் இனிதே துவங்கியது. முன்னோட்டக் காணொளிகளில் இருந்த பரபரப்பு இன்றைய நிகழ்ச்சியிலும் இருக்குமா என்கிற ஆர்வம் பார்வையாளர்களுக்குள் இருந்திருக்கும். காலை 11.45க்கு பிக்பாஸ் வைஷ்ணவியை தனது ரகசிய அறைக்கு வரவழைத்தார். இன்று பீலா பீலா (Feela peelaa) போட்டி நடக்கவிருக்கிறது அல்லவா? அதில் வைஷ்ணவி சொல்லப்போகும் கதை உண்மையா பொய்யா என பிக்பாஸ் வினவினார். வைஷ்ணவி உண்மைக்கதை எனக் கூறினார். சுவாரசியக் காட்சிகள் எதுவுமில்லாமல் பகல் ஒரு மணியானது.
பாலாஜி - நித்யா பிரிவு குறித்து அனந்த் பாலாஜியிடம் உரையாடுகிறார். மதியம் 01.30க்கு பீலா பீலா (Feela peelaa) போட்டி ஆரம்பமானது. போட்டியாளர்கள் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். நித்யா தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அடுத்து பாலாஜி தனது கதையைச் சொன்னார். இப்போட்டிக்கான மதிப்பெண்கள் 800 ஆகும். அதுக்கப்புறம்.... அதுக்கப்புறம் என்ன, விளம்பர இடைவேளை தான்...
பிற்பகல் மூன்று மணிக்கு வெங்காயப் போர் ஆரம்பமானது. கேரட் சமையலுக்கு வெங்காயம் சேர்க்கும் படி சமையலில் ஈடுபட்டிருந்த நித்யாவிடம் பாலாஜி கூறினார். நித்யா அதனை ஆட்சேபித்தார். மஹத் மற்றும் சில பெண் போட்டியாளர்களும் வெங்காயம் சேர்க்கும்படி பாலாஜியின் கருத்துக்கு வலு சேர்த்தனர். நித்யா பிடிவாதமாக கேரட்டுக்கு வெங்காயம் சேர்க்க முடியாது என்று மறுத்தார். அதனை அடுத்து பாலாஜி அவ்விடத்தை விட்டு அகன்றார். பாலாஜி முற்றத்தில் ஓரத்தில் சென்று அமர்ந்திருந்தார். அவரிடம் சமையல் அணித்தலைவி மும்தாஜ் வெங்காயப் பிரச்சினை குறித்து விவாதித்தார். பெண்கள் படுக்கை அறையில் வீட்டின் தலைவி ஜனனி சக பெண் போட்டியாளர்கள் இருவருடன் இது குறித்து உரையாடிக்கொண்டிருந்தார். இரவு வரை இப்பிரச்சினை நீண்டது.
மாலை ஆறு மணிக்கு அனைவரையும் வரவேற்பறைக்கு அழைத்த பிக்பாஸ் போட்டியில் இரு அணிகளும் சமநிலையில் இருப்பதால் அதற்கான 800 புள்ளிகளையும் முழுமையாக வழங்குவதாக அறிவித்தார். அதன் பின் பிக் பாஸ் இல்லத்தின் நடைமுறைகளை போட்டியாளர்கள் அனைவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என உறுதிபடத் தெரிவித்தார்.
இரவு ஏழு மணிக்கு சாப்பாட்டு மேசைக்கு அனைவரையும் வருமாறு நித்யா அழைப்பு விடுத்தார். கலந்துரையாடல் துவங்கியது. சமையல் அணியில் என்னென்ன சமையல் செய்ய வேண்டும் என யாரும் தன்னுடன் கலந்துரையாடுவதில்லை என நித்யா குற்றம் சாட்டினார். அக்குற்றச்சாட்டை மும்தாஜ் மறுத்தார். விவாதம் வாக்குவாதமாக மாறி பிரச்சினையானது. நித்யாவின் குற்றச்சாட்டு வெங்காயப் பிரச்சினையின் தொடர்ச்சியாகவே அமைந்திருந்தது. ஜனனி, நித்யா, மும்தாஜ், மஹத், அனந்த் ஆகியோர் கருத்துக்களை எடுத்துரைத்தவண்ணமிருந்தனர். பொன்னம்பலம் ஒரு ஓரமாகச் சென்று படுத்துக் கொண்டார்.
சாப்பாட்டு மேசை விவாதத்துக்குப் பின்னரும் போட்டியாளர்கள் அவரவர் குழுக்களாகப் பிரிந்து கலந்துரையாடலைத் தொடர்ந்தனர். பின்னர் கட்டிப்புடி வைத்தியத்தின் மூலம் மும்தாஜும் நித்யாவும் சமாதானமாகினர். ஆனாலும் குழுக் கலந்துரையாடல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. இரவு பத்து மணியாகியும் உரையாடல்கள் முடிந்தபாடில்லை. 10.15 மணிக்கு பாலாஜி தனியாக 'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்ற பழைய பாடலை தனிமையில் பாடிக் கொண்டிருந்தார்.
போட்டியாளர்களுக்கிடையேயான இந்த சண்டை இன்றோடு முடிந்து விடுமா, அல்லது இனி வரும் நாட்களிலும் தொடருமா என்ற கேள்வியோடு விடைபெற்றார் பிக்பாஸ். ஏன் பிக்பாஸ் உங்களுக்கு இந்தக் கொலைவெறி?
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பாலாஜி #மும்தாஜ் #நித்யா #விஜய்தொலைக்காட்சி #BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #Bhalajie #Mumtaz #Nithya #VijayTV #BBOnionWar #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்