சிகரம் பாரதி செய்தி மடல் - 27/06/2018

'சிகரம் பாரதி' வலைத்தளம் 27/06/2018 இன்று ஒரு லட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை சாத்தியமாக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

கடந்த 07/03/2018 அன்று 'சிகரம் பாரதி' வலைத்தளத்துக்கு கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களுக்கான அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் 08/03/2018 அன்றைய நிலவரப்படி 57,200 பக்கப்பார்வைகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இன்று 111 நாட்களில் 43,000 பக்கப்பார்வைகளைப் பெற்று மொத்தமாக 100,200 பக்கப் பார்வைகளை 'சிகரம் பாரதி' வலைத்தளம் கடந்துள்ளது. இதன்படி ஒரு நாளுக்கான சராசரி பக்கப் பார்வைகள் 387 ஆகவும் ஒரு மாதத்துக்கான சராசரி பக்கப் பார்வைகள் 10,750 ஆகவும் அமைந்துள்ளது. 



எண்ணிக்கைகள் எதையும் தீர்மானிப்பதில்லை. ஒரு லட்சம் பக்கப் பார்வைகளைப் பெற்றதால் பெரிய பிரபலமாகிவிட்டதாக அர்த்தமும் இல்லை. எனக்கும் எண்ணிக்கைகளில் நம்பிக்கை இல்லை. என்றாலும் மனதின் ஓரத்தில் சிறிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. 

எனது பாடசாலை நண்பர்கள், வலைத்தள நண்பர்கள், இணையத்தள நண்பர்கள், வாட்ஸப் நண்பர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், வேலைத்தள நண்பர்கள் மற்றும் ஏனைய நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் சிகரம் பாரதியின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். எம்மோடு தொடந்தும் இணைந்திருங்கள். 

சிகரம் வலைத்தளம் மற்றும் இணையத்தளத்தில் இலக்கியம், விளையாட்டு, அறிவியல், பல்சுவை சார்ந்த பல்வேறு பதிவுகள் வெளியாகின்றன. அவற்றுக்கு உங்கள் ஆதரவைத் தருவதோடு உங்கள் படைப்புகளையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பதுவே எமது தலையாய நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்ற எம்மோடு இணையுங்கள். வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!

#சிகரம்பாரதி #தமிழ் #வலைத்தளம் #பிளாக்கர் #தமிழ்இணையம் #SigaramBharathi #Tamil #Blogger #Blogs #TamilWeb #SIGARAMCO #சிகரம் 

சிகரம் பாரதி செய்தி மடல் - 27/06/2018 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!