பாஸ் என்கிற பிக்பாஸ் - 003

ஹாய் மச்சி!

ஹாய்டா! என்ன விசேஷம்?

எல்லாம் விசேஷம் தான். உனக்கு விஷயம் தெரியாதா?

தெரில மச்சி, என்ன நடக்குது?

நாம ஏற்கனவே யூகிச்சிருந்த மாதிரி பிக்பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஜூன் 17ஆம் திகதி துவங்கும்ன்னு விஜய் டிவி அறிவிச்சிருச்சு!



அடடே! ரொம்ப சந்தோஷம்.

ஆமா மச்சி. 

அப்போ எல்லாருக்கும் கொண்டாட்டம் தான். 

இல்லாம? பிக்பாஸ்னா சும்மாவா?

இன்னும் விஷயம் இருக்கு போல?

ஆமா மச்சி, பிக்பாஸ்ல இப்போ புதுசா அஞ்சு வெளியாகியிருக்கு. 

அஞ்சு ட்ரைலரா?? நா இன்னும் பாக்கலைடா...

உடனே விஜய் டிவி பேஸ்புக் பக்கத்துல போய்ப் பாரு. 

எல்லாமே செமயா இருக்குடா...




அது மட்டும் இல்ல, போட்டியாளர்கள் யார் யார்னு விஜய் டிவி அறிவிக்காட்டாலும் நம்பகமான இணையத்தளங்கள்ல நாம ஏற்கனவே சொன்ன நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி மற்றும் நடிகர்கள் நடிகர்கள் பரத் மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோரோட பேர்கள் தான் திரும்பவும் குறிப்பிட்டிருக்காங்க. 

அப்போ ஏறக்குறைய செய்தி உண்மைதான். 

ஆமா மச்சி, அவங்க சொன்ன மாதிரி ஜூன் பதினேழு பிக்பாஸ் துவங்கும்ன்னு விஜய் டிவி அறிவிச்சிருக்குல்ல? 

ம்ம்... அதையும் பார்க்கத்தானே போறோம்?

அது மட்டுமில்ல, பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டீவில திங்கள் முதல் ஞாயிறு வரை எல்லா நாளும் இரவு 09 மணிக்குத்தான் ஒளிபரப்பாகப் போகுது. 

போன முறை திங்கள் - வெள்ளி இரவு 08.30க்கும் சனி - ஞாயிறு இரவு 09 மணிக்கும் தானே போட்டாங்க?

ம்ம், எதுக்கு குழப்பம்னு ஒரே நேரத்தை முடிவு பண்ணிட்டாங்க போல?

நமக்கும் அது வசதி தான். 

போன முறை மாதிரி விஜய் டீவில இந்த முறையும் ஏதும் மாற்றங்கள் இருக்குமோ?

என்ன, அந்த லோகோ மாத்தினதை சொல்றியா?

ம்ம், பிக்பாஸ் முதல் பருவத்துக்காக விஜய் டிவி லோகோ, விளம்பர அமைப்பு எல்லாம் மாத்தினாங்க இல்ல?

இந்த முறையும் அந்த மாதிரி நடக்கும்னு சொல்ல முடியாது. ஆனா வாய்ப்புகள் இருக்கு. 

நாள் நெருங்க நெருங்க ஆர்வம் அதிகமாயிட்டே இருக்கு.

உனக்கு மட்டுமா? நம்ம எல்லாருக்கும் தான். 

சரி, பார்க்கலாம். 



சரி மச்சி, சந்திப்போம்!

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்தமிழ்2 #விஜய்தொலைக்காட்சி #சிகரம் #BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #VivoBiggBossTamil2 #BiggbossTamil2 #VijayTV #VijayTelivision #KamalHassan #Maiam #SIGARAM #SIGARAMCO

Comments

  1. ஹா ஹா ஹா பின்ன் அடுத்தவங்களை 24 மணி நேரமும் புதினம் பார்க்கிறதெனில் ஆருக்குத்தான் பிடிக்காது.. ஆர்வத்தோடுதான் எல்லோரும் வெயிட்டிங்..:) :)) முக்கியமா பவர்ஸ்டார் அங்கிளுக்காகவே மீ வெயிட்டிங்:)) ஹையோ ஹையோ.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. பார்க்கலாம்... என்னதான் நடக்கிறதென்று...

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!