கூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி?
இணைய உலகில் தேடல் என்றாலே அது கூகுள் தான். அது போலவே இணைய உலாவி என்றால் அது கூகுள் குரோம் தான். ஒரு தடவை கூகுள் குரோமில் உள்நுழைந்து வைத்தால் கூகுளின் அத்தனை சேவைகளையும் ஒரே சொடுக்கில் அணுக முடியும். நீங்கள் கூகுள் குரோம் பாவனையாளரா? கூகுள் குரோம் வாயிலாக கூகுள் தேடு பொறியில் தேடல் முடிவுகளை புதிய திரையில் (Tab) திறக்க முடியவில்லையா? நீங்கள் தேடல் முடிவுகளை எடுத்த அதே திரையிலேயே (Tab) இணைய இணைப்புகள் திறக்கின்றனவா? ஆங்கிலத்தில் சொல்வதானால் ' how to open google search results in a new tab?' இதோ உங்களுக்கான தீர்வு! கீழ்வரும் இணைப்பை உங்கள் முகவரிப் பட்டையில் திறவுங்கள்: https://www.google.com/preferences இப்போது உங்களுக்கு கீழ்வரும் அமைப்பிலான திரை கிடைக்கும். இந்தத் திரையில் 'Where Results Open' என்பதை ( முடிவுகள் திறக்கப்படும் இடம்) என்னும் தெரிவுக்கு செல்லுங்கள். அதில் ' Open each selected result in a new browser window' ( தேர்ந்தெடுத்த ஒவ்வொரு முடிவ...