பாசமிகு பாரதியே...
பாசமிகு பாரதியே கவி எழுத காத்திருக்கும் என் எழுதுகோலுக்கு என்ன வந்ததோ....! உமக்காக எழுத ஏடு எடுத்தவுடன் கண்ணீரையல்லவா காணிக்கை கேட்கிறது பாரதியே ... வார்த்தைகளில் வசியம் கொடுத்து நீடுதுயில் நீக்கிய நிதர்சன கவிஞனே பாடுபொருளுக்கு விடுதலையை வேள்வியாக்கிய அக்கினிக் குஞ்சே சுதந்திர தாகத்தில் சுழன்று தவித்தபோது எழுத்தால் படை நடத்திச் சென்றவன் நீ போரிடும் உலகை வேரோடு சாய்த்தவன் விடுதலை உணர்வை விவேகத்தோடு தூண்டியவன் அன்னிய ஆட்சியை முற்றிலும் அழித்து ஆனந்த சுதந்திரத்தை அன்றே கொண்டாடிய தீர்க்கதரிசியே புதுமை இந்தியாவை படைக்கப் புறப்பட்ட புரட்சிப் புயலே வில்லாளனைப்பாடிய சொல்லாளனே சாவை கூட துச்சம் என்று உம் சரித்திரமும் சொன்னதடா மண்ணைப் போற்றி வாழும் வரைக்கும் உந்தன் பெருமை சேரும் மானம் காத்து நின்ற மறத்தை மனமுவந்து காப்போமே எட்டுத்திக்கும் சொல்லும் மட்டும் வெற்றி வாகை சூடுவோம் தாயின் மணிக்கொடியை பட்டொளி வீசச்செய்த தமிழன்னையின் தலைமகனே நீ விதைத்துச் சென்றது ஒரு தலைம...