Posts

Showing posts with the label வாசிப்பு

செயற்கை நுண்ணறிவு வாசிப்பை என்ன செய்யும்?

Image
செயற்கை நுண்ணறிவு வாசிப்பை என்ன செய்யும் என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக பலருக்கு செயற்கை நுண்ணறிவு என்ன செய்யும் என்பதே தெரிந்திருக்கவில்லை. ஆகவே நமது கட்டுரைக்குத் தேவையான அளவு அந்தப் பக்கம் கொஞ்சம் போய் வரலாம். தொழிநுட்ப ரீதியாக விளக்காமல் எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டதை வைத்து விளக்குகிறேன். அது உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ள உதவி புரியலாம்.  நமது பள்ளிக் கல்வி பாலர் பாடசாலையில் ஆரம்பித்து, பாடசாலை, கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் என்று சென்று சிலநேரங்களில் உயர் படிப்பு வரை போகிறது. நாம் ஒவ்வொரு படிப்பும் தரும் அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்துசென்று விடுகிறோம். திடீரென்று முதலாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு கேள்வியைக் கேட்டால் நமக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அதற்காக நாம் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் எப்போதோ கற்ற ஒன்றை நாம் அப்படியே நினைவில் வைத்திருப்பதில்லை. உணவு எப்படி வயிற்றுக்குள் சென்று சத்துக்களை மட்டும் உடலுக்கு அளித்துவிட்டு மிகுதி கழிவாக வெளியேறி விடுகிறதோ கல்வியும் அப்படித்தான்.  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ந...

'அந்திமழை' இணைய இதழில் வெளியான 'இனிப்பில் வாழ்பவன்' கட்டுரையை முன்வைத்து...

Image
இனிப்பில் வாழ்பவன் - அந்திமழை இணையத்தளம்   'அந்திமழை' இணைய இதழில் வெளியான 'இனிப்பில் வாழ்பவன்' கட்டுரையை முன்வைத்து...  கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஒரு படம். அதற்கு 'கேப்சன்' என்று சொல்லக்கூடிய ஒரு விளக்கம். ரவி பேலட் வரைந்திருந்த அந்த படத்திற்கு 'இனிப்புத் தீவிரவாதி' என்று விளக்கம் தரப்பட்டிருந்தது. ஆம். தீவிரவாதிதான். பாரா ஒரு தீவிரவாதி. எதில்? தான் நம்பும் அனைத்திலும். எழுத்தில் ஒரு தீவிரவாதி. எதையும் எழுதக்கூடிய தீவிரவாதி. கூட்டம், பாராட்டு என்று எதன் பின்னாலும் போகாத ஒரு தீவிரவாதி. வாசகர்களை மட்டுமே நம்பும் தீவிரவாதி. இறுதியாக உலகமே தேடக்கூடிய இனிப்புத் தீவிரவாதி.  ஒரு பக்கம் அட இந்த மனிதர் எப்படி இவ்வளவு இனிப்பை உண்கிறார் என்ற ஆச்சரியம். மறுபுறம் இத்தனை வகை இனிப்பும் இந்த மனிதருக்கு எப்படி கிடைக்கிறது என்ற ஆச்சரியம். அதிலும் ஆச்சரியம், அதை எப்படி ருசிக்க வேண்டும் என நாலு பக்கம் நீளமாக ரசித்து எழுதும் பதிவு. அந்த பதிவை வாசித்துவிட்டு நாமும் ஒரு இனிப்பை சுவைக்கலாம் என்று போனால் நமது முகத்திற்காகவே தயாரிக்கப்பட்டதுபோல ஒன்றைத் தருவார்கள். தண்டச்செலவு அல்...

வாசிப்பும் பகிர்வும் - 03 | அக்னிச் சிறகுகள் - அப்துல் கலாம் | வாசிப்பு அனுபவக் குறிப்புகள்

Image
அப்துல் கலாம் இன்றளவும் நம்மால் வியந்து பார்க்கப்படும் ஒருவர். பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் என்றாலும் தன்னடக்கம் மிக்கவர். இனிமையாக பழகும் ஒருவர். கரையோரக் கிராமமொன்றில் பிறந்து ஏவுகணை நாயகனாகி நாட்டையும் ஆண்ட ஒருவர். இத்தனை வெற்றிகளைக் குவித்த ஒருவர் வியந்து பார்க்கப்படுவதில் தவறேதுமில்லை.  அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள். இந்த நூல் பற்றித்தான் இன்று பேச வேண்டும். உண்மையில் இது ஒரு சுயசரிதை. ஆனால் அந்த வகைக்குள் மாத்திரம் இதனை அடக்கிவிட முடியாது. விஞ்ஞானிகள் வாசிக்க வேண்டிய நூல் இது. மனிதர்களை அறிந்து கொள்ள விரும்பும் மக்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. சுயமுன்னேற்றம் வேண்டுவோர் வாசிக்க வேண்டிய நூல் இது. சாதிக்கத் துடிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. இப்படி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற, அனைவரும் தமது வாழ்வில் ஒருமுறையேனும் கட்டாயம் வாசித்துவிட வேண்டிய நூல் இது.  மத நல்லிணக்கம் தொடர்பில் நாம் இன்று அதிகம் பேசுகிறோம். அப்துல் கலாம் தனது புத்தகத்தில் இப்படி கூறுகிறார். "கோயிலை சுற்றிலும் பெருந்திரளாக வந்து கொண்டிருக்கும் பக்தர்களையும் கடலில் அவர்கள் புனித நீராடுதலையும் வைதிக ...

சௌம்யாவின் BOYZ சிறுகதையை முன்வைத்து...

Image
சௌம்யா ராகவன் டுவிட்டரில் அறிமுகமானவர். பின்னர் பேஸ்புக்கிலும். அவரது களிற்றடி சிறுகதைத் தொகுப்பை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்க சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. ஆனால் சௌம்யாவின் வலைத்தளத்தில் வெளியாகும் கதைகளை அவ்வப்போது வாசித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒன்றுபோல் மற்றொன்று இல்லை.  BOYZ சிறுகதை என்ன சொல்கிறது? உறவு முறைச் சிக்கல் ஒன்றின் ஒரு பக்கத்தை இந்தக் கதை பேசியிருக்கிறது.  முக்கிய குறிப்பு: சிறுகதையை வாசிக்காதவர்கள் அதனை வாசித்துவிட்டு வருவது சிறப்பு.  இணைப்பு: https://www.arattaigirl.com/2024/08/boyz.html   ***  தமிழ்ச்செல்வி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சுபாஷூடன் திருமணமாகிறது. சுபாஷூக்கு அப்போதே 37 வயது. தமிழின் அம்மா பத்மா. ஒரு சமயம் வீட்டு வாசலில் இட்லிக் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தாள். அப்போது கடைக்கு வாடிக்கையாக வந்து சென்றவர்களில் தான் இந்த சுபாஷ் அறிமுகம் ஆகிறார். மனநிலை சரியில்லாத கணவன் காரணமாக அவ்வப்போது வீட்டுக்கு உதவிகள் செய்து வரும் சுபாஷை தன் வீட்டில் வாடகைக்கு குடிவைக்கிறாள் பத்மா.  ஒரு கட்டத்தில் ...

வாசிப்பும் நானும் - சில குறிப்புகள்

Image
வாசிப்பு என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் தேடிப்பார்க்கின்ற போது பலர் வாசிப்பு ஆர்வம் அற்றவர்கள் போலவே இருக்கின்றார்கள். இதற்கு என்ன காரணம்? நூலகங்கள் பல இருந்தாலும் அவற்றை நாடுவோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? முதல் காரணமாக நான் கருதுவது பலருக்கு தமக்கு பொருத்தமான புத்தகங்களை கண்டடைய முடியாமல் போகின்றது. தமது வாசிப்பு தேடலைப் பூர்த்தி செய்யும் புத்தகத்தை அவர்களால் கண்டடைய முடிவதில்லை. நூற்றுக்கணக்கான நூல்களை வாசித்துள்ள எனக்கே பல சமயங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. அடுத்தது மாணவப் பருவத்தில் வாசிப்பு அநாவசியமான ஒன்றாக பார்க்கப்படுவது. கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த பாடம் தொடர்பில் நூலகத்தில் ஏதேனும் தேடிக் கொண்டு வா என்று சொல்வதில்லை. நூலக ஆசிரியரே நூலகத்திற்கு மாணவர்களை அழைக்காத நிலையே பல பாடசாலைகளிலும் காணப்படுகின்றது. இந்த பின்னணியில் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்கள், நூலகமும் நூல்களும் அப்போதைய ஆய்வுத் தேவைக்கு மாத்திரம் தான் என் முடிவு செய்து விடுகின்றனர். ஒரு சிலரே தமது துறை சார்ந்தேனும் நூல்களை வாசிக்கின்றனர்.  எ...

வாசிப்பும் பகிர்வும் - 03 | வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்| வாசிப்பு அனுபவக் குறிப்புகள்

Image
பா. ராகவன் எழுதிய உக்ரையீனா புத்தகம் பற்றிய எனது எண்ணங்களை கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.  இன்று நாம் பார்க்கவிருக்கும் புத்தகம் - வாசிப்பது எப்படி?  நூலாசிரியர் - செல்வேந்திரன் தலைப்பைப் பார்த்ததும் இதற்கெல்லாம் ஒரு புத்தகம் தேவையா என்ற எண்ணம் நமக்குள் எழலாம். ஆனால் அதற்கான தேவை இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.  82 பக்க கட்டுரைகளை மட்டும் கொண்ட ஒரு புத்தகம் இது. ஒருசில மணிநேரத்திற்குள் இதனை வாசித்துவிட முடியும்.  ஆனால் ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை நாம் உணர்ந்து வாசிப்பது அவசியம்.  நாம் வாசிப்பு என்ற உடனேயே புத்தக வாசிப்பை மாத்திரமே கருத்திற்கொள்வோம். ஆனால் நாளிதழ் வாசிப்பதும் வாசிப்பின் ஒரு அங்கம் என்பதையும், புத்தகம் வாசிப்பவர்கள் நாளிதழ்களை வாசிக்கப் பழக வேண்டும் என்பதையும் செல்வேந்திரன் வலியுறுத்துகிறார்.  உயிருள்ள பாடப்புத்தகம் என நாளிதழ்களை அழைக்கும் செல்வேந்திரன், அந்த நாளிதழ்களை எப்படி வாசிப்பது என நமக்கு கற்றுத்தருகிறார்.  ஆசிரியர் நமக்கு ஒரு கோரிக்கையை முன்னுரையில் முன்வைக்கிறார். இந்த புத்தகத்தை முழுதாகப் படி...

வாசிப்பும் பகிர்வும் -02 - உக்ரையீனா - பா ராகவன்

Image
வாசிப்பு என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. ஏன் எனக்குப் பிடித்தமானதும் கூட. சிறுவயதில் இருந்தே நூல்களும் நூலகங்களும் எனக்குப் பிடித்தவையாக இருந்திருக்கின்றன. வாசிப்பின் தொடர்ச்சியாக பாடசாலைக் காலத்தில் கையெழுத்து சஞ்சிகையும் தொடர்ந்து வந்த காலத்தில் வலைப்பதிவுகளும் பின்னர் ஒரு சில இணையத்தளங்களும் என என் முயற்சிகள் விரிவடைந்து சென்றிருக்கின்றன. ஆனாலும் புத்தகம் வெளியிட நினைத்தாலும் இதுவரை அந்த எண்ணம் ஈடேறவில்லை. இருந்தாலும் இடைநடுவில் சிலகாலம் வாசிப்பை விட்டு நான் பிரிந்திருக்க நேரிட்டது. அதற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக வாசிக்கிறேன். ஆனால் உரிய காலத்திற்குக் காத்திருந்ததன் விளைவாக இந்த ஆண்டு வாசிப்பு மாரத்தான் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பங்குபற்றுகிறேன்.  எனது முதல் வாசிப்பு பதிவாக எழுத்தாளர் பா. ராகவன் Pa Raghavan எழுதிய உக்ரையீனாவை பதிவு செய்ய விரும்புகிறேன். அளவில் சிறியதாக இருந்தாலும் விடயத்தில் பெரியதாக இருக்கிறது இந்த நூல். உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே தற்போது மூண்டுள்ள இந்த போர், ஏன், எதற்கு என்பதை விரிவாக ஆராய்கிறது உக்...

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03

Image
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 முதலில் வானதி பதிப்பகத்தாரின் பதிப்புரை ஒரு பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகிறது.  'இப்புதினத்தை வாசித்தவர்கள் வாசித்தவர்கள் ஓரளவு சங்ககாலத் தமிழர் வரலாற்றை அறிந்தவர்கள் ஆவார்கள்' என்ற அவர்களது ஒரு வரி போதும், நாவலின் பெறுமதியை உணர்த்துவதற்கு.  அடுத்து, வானவல்லி எழுதத் தொடங்கிய பிறகு தான் சங்க இலக்கியங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன்' என்று என்னுரையில் கூறுகிறார் வெற்றி.  அவரை புதிதாக அறிபவர்களும், இந்த புதினத்தை முதலாவதாக வாசிப்பவர்களும் இந்த கூற்றின் மேல் கொள்ளும் நம்பிக்கையை, புதினம் வாசித்து முடித்த பின்னர் தகர்த்தெறிந்து இருக்கிறார் அவர்.  அதுவே வானவல்லி புதினத்தின் வெற்றியும் கூட.  அத்துடன் என்...

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02

Image
வான வல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  வானவல்லி! நண்பர் வெற்றிவேல் முதன்முதலில் எனக்கு அறிமுகமான வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த தொடர்.  ஒரு பத்துப் பதினைந்து அத்தியாயங்கள் வலைத்தளத்தில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.  பின்னர் அதனை இடைநிறுத்திவிட்டு புத்தகமாகவே வெளியிட தீர்மானித்தார் வெற்றி.  https://iravinpunnagai.blogspot.com/2013/12/1.html   வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்த போதே பாரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தை மட்டுமேனும் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.  ஆனால் வலைத்தளத்தில் வாசித்த போது எஞ்சியிருந்த எதிர்பார்ப்பே நாவலை வாசிக்க உதவியது என்றாலும் மறுப்பதற்கில்லை.  அதே போல், நான் உட்பட பலரினதும் விருப்ப நாவலாக / புதினமாக இருப்பது பொன்னியின் செல்வன்.  அந்த நாவலின் சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் சற்றும் குறையாமல் எனக்குத் தந்திருந்தது வானவல்லி.  அத்துடன் வானவல்...

காரில் ஊர்சுற்றும் தம்பதி - புரியாத வரலாற்று தொடர் -இன்னும் சில...!

Image
சஞ்சிகை வாசிப்பு என்பது மாறுபட்ட ஒரு அனுபவம். பத்திரிகையைப் போல ஒரு கலவையான வாசிப்பு அனுபவத்தை சஞ்சிகைகள் வழங்கும். சஞ்சிகைகளிலும் பல வகைககள் உள்ளன. அவற்றுள் இன்று நான் பேசப் போவது ஜனரஞ்சக சஞ்சிகை ஒன்றைப் பற்றி. குங்குமம் சஞ்சிகையை PDF வடிவில் வாசிக்கக் கிடைத்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு வாசிப்பு அனுபவம். முதலில் tinpin stories எனும் மலையாள யூடியூப் சேனல் குறித்த அறிமுகம் பிடித்திருந்தது. தமது பயண அனுபவங்களை யூடியூப் வழியே சொல்லும் தம்பதிகளின் முயற்சி இது. இந்த யூடியூப் சேனல் மிக அருமையாக இருக்கிறது. எனக்கு மலையாளம் தெரியாது என்றாலும் ஓரளவுக்குப் புரிகிறது. இணைப்பு:  https://www.youtube.com/c/TinPinStories/featured அடுத்தது கே.என். சிவராமின் ஒரு வரலாற்று தொடர். அடி முடி எதுவும் புரியவில்லை. இது 135 ஆவது அத்தியாயம். இப்போது வாசித்தால் எப்படி புரியும்? ரத்த மகுடம் சரித்திர தொடரை தான் சொல்கிறேன். ஆனால் வாசிக்க நன்றாக இருக்கிறது. இனி தொடர்வோம். நண்பர் வெற்றிவேல் தனது இணையத்தளத்தில் எழுதும் கரிகாலன் தொடரையும் வாசிக்க வேண்டும். ஒருநாள் கல்லூரி முத...

வாசிப்பும் பகிர்வும் -01

Image
வணக்கம் நண்பர்களே!  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.  இன்று நான் வாசித்துக் கொண்டிருக்கும் சில புத்தகங்களை பற்றி சொல்ல நினைக்கிறேன்.  முதலாவது புத்தகம் அல்ல. எதிர்காலத்தில் புத்தகமாக வெளிவரும். நண்பன் வெற்றிவேல் எழுதும் 'கரிகாலன்' தொடர்.  Image rights reserved to respective owners only. நண்பனின் முதலாவது வெளியீடான 'வானவல்லி' மிக அருமையாக இருந்தது. அதற்கு சற்றும் குறையாமல் 'கரிகாலன்' சுவாரஸ்யமாக இருக்கிறது.  ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரஸ்யம் குன்றாமல் வாசிக்க சொல்லி ஈர்க்கிறது. விட்டால் நாள் முழுவதும் வாசித்துக் கொண்டே இருக்கலாம்.  வார்த்தை பிரயோகங்களில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றம் தேவை என நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் போன்றவற்றின் பாதிப்பாக இது இருக்கலாம்.  ஆனால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை என்றே சொல்ல வேண்டும். மிகுதியை பிறகு சொல்கிறேன்.  மற்றைய புத்தகங்கள் கோபிநாத் எழுதிய 'ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!' மற்றும் அப்துல் ரகுமானின் 'பூப்படைந்த சப்தம்' ஆகியன.  இந்த இரண்டு புத்தகங்களை பற்றியும் ...

வலை ஓலை - எழுத்தாணி - சொல்

Image
இணைய உலகில் தமிழை வளம்பெறச் செய்ததில் வலைத்தளங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டும் வலைத்தள சேவைகளை வழங்கினாலும், பிளாக்கரிலேயே அதிக அளவு வலைத்தளங்கள் உருவாகின.  தமிழ் வலைத் தளங்களுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டு வரலாறு இருக்கலாம் என நினைக்கிறேன். ஆரம்பகால வலைத்தள எழுத்தாளர்களுக்கே தமிழ் வலையுலகின் அத்தனை பெருமைகளும் சாரும் என்றே நான் சொல்வேன்.  காரணம், அவர்கள் அனைத்தையும் உருவாக்கினார்கள். வலைத்தள சேவைகள் தமிழில் கிடைக்க அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். பல வலைப்பதிவர்கள் தமிழில் உருவாக அவர்களே காரணமாய் அமைந்தார்கள். அவர்களில் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பலரும் நவீன எழுத்தாளர்களாய் உருவாகினர்.  தமிழ் வலைத்தளங்களை அப்போது நடத்திச் செல்வதில் இருந்த சிரமம் இப்போது இல்லை. வலைத்தளங்கள் தற்போது வெகுவாக முன்னேறிவிட்டன. எந்தவொரு சிரமமும் இல்லாமல் யுனிகோடில் தட்டச்சு செய்ய முடிகிறது.  அத்துடன், வலைத்திரட்டிகள் தமிழ் வலையுலகில் ஆற்றிய பங்கு மறக்க முடியாது. தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகியன அவற்றில் வெகு பிரபலமானவை....