வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01


இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html


வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02 


வானவல்லி! நண்பர் வெற்றிவேல் முதன்முதலில் எனக்கு அறிமுகமான வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த தொடர். 


ஒரு பத்துப் பதினைந்து அத்தியாயங்கள் வலைத்தளத்தில் வந்திருக்கும் என நினைக்கிறேன். 


பின்னர் அதனை இடைநிறுத்திவிட்டு புத்தகமாகவே வெளியிட தீர்மானித்தார் வெற்றி. 


https://iravinpunnagai.blogspot.com/2013/12/1.html 


வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்த போதே பாரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தை மட்டுமேனும் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். 


ஆனால் வலைத்தளத்தில் வாசித்த போது எஞ்சியிருந்த எதிர்பார்ப்பே நாவலை வாசிக்க உதவியது என்றாலும் மறுப்பதற்கில்லை. 


அதே போல், நான் உட்பட பலரினதும் விருப்ப நாவலாக / புதினமாக இருப்பது பொன்னியின் செல்வன். 





அந்த நாவலின் சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் சற்றும் குறையாமல் எனக்குத் தந்திருந்தது வானவல்லி. 


அத்துடன் வானவல்லி வலைத்தளத்தில் வந்த போது, ராமர் பாலம் கட்ட அணில் உதவியதாகக் கூறப்படுவது போல, என்னால் ஆன உதவிகளை செய்திருந்தேன். 


அது மட்டுமல்ல, வானவல்லியை இந்தியாவுக்கு சென்று திரும்பிய உறவினர் ஒருவர் மூலமாகவே நான் இலங்கைக்கு தருவித்திருந்தேன். 


அதில் வெற்றி தனது உதவியை நல்கியிருந்தார் என்பதை நன்றியுடன் நான் கூற வேண்டும். 


இருந்த போதிலும், வெற்றி என்னிடம் கேட்டது ஒன்றுதான். வானவல்லி குறித்த முழுமையான விமர்சனம். அதை என்னால் வழங்க முடியாது போய்விட்டது. 


ஆனால் என்னால் இயன்ற வாசிப்பு அனுபவத்தை வெற்றியுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். 


அதனை தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருந்த போதும் எனக்கு காலம் ஒத்துழைக்கவில்லை. 


அத்துடன் அப்போது எனது விடுபட்டுப் போயிருந்த வானவல்லி, 5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பணியை செய்திருக்கிறது. 


இனி தொடர்ச்சியாக வானவல்லி வாசிப்பு பதிவுகளை பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். 


புத்தக வாசிப்பு என்பது வாழ்க்கைக்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்று. புத்தக வாசிப்பு மாத்திரமே நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். 


ஆகவே, வானவல்லியின் துணையுடன் மீண்டும் எனது வாசிப்பை மீட்டெடுக்கப் போகிறேன். 


வாருங்கள் நண்பர்களே... வானவல்லியுடன் ஒரு உலாப் போகலாம்...!

Comments