சம்பவம் நடந்தது
ஆம்
சம்பவம் நடந்தது...
சம்பவத்தை சுற்றி
கோடுகளும்
பாதுகாப்பு வலயமும்
அதனை பாதுகாக்க
சிலரும்...
'என்ன நடந்தது?'
'சம்பவம்'
'எப்போது?'
'7 மணிக்கு'
'இரவா, பகலா?
யார்
யாரோடு
யாருக்காக
ஏன் எதற்கு?'
கேள்விக் கணைகள்
சுற்றியிருந்தவர்களை
துளைத்தன.
![]() |
Image copyrights reserved to respective owners only |
காவல்துறையின் கேள்விகளை
நீதிமன்றங்களும்
மீண்டும் மீண்டும்
கேட்டன.
வருடங்கள் ஓடின,
சாட்சியாளர்களின்
எண்ணிக்கை குறைந்தது.
இறுதியாக
நீதிபதி என்னைக்
கேட்டார்
'என்ன நடந்தது?'
'ஒன்னுமில்லீங்க?'
'நீதிமன்றத்தின்
பொன்னான நேரத்தை
வீணாக்கி விட்டீர்கள்,
இரண்டாயிரத்து ஐநூறு
அபராதம்!
நீதி கிடைத்தது
ஆனாலும்
சம்பவமும் நடந்தது,
நீதியும் கிடைத்தது
சம்பவம் நடந்தது
யாருக்கோ,
நீதி கிடைத்தது யாருக்கோ.
ஆம்!
சம்பவம் நடந்தது!
மர்மம்...!
ReplyDeleteநிச்சயமாக... என்ன நடந்தது என்றே தெரியவில்லை....
Delete