Posts

Showing posts from January, 2017

கில்லி முதல் பைரவா வரை...

Image
நடிகர் விஜய்யின் ( இளைய தளபதி என்று சொல்ல எந்த அவசியமும் நேரவில்லை இதுவரைக்கும் ) கில்லி திரைப்படம் நேற்று ( 2017.01.29) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இறுதியாக அண்மையில் ( 2017 ஜனவரி ) பைரவா திரைப்படம் வெளியாகியிருந்தது. 2004 கில்லிக்கும் 2017 பைரவாவுக்கும் இடையில் 21 திரைப்படங்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளன. இவற்றில் கில்லிக்கு அடுத்து மதுர, திருப்பாச்சி, சுக்ரன், சிவகாசி மற்றும் நண்பன் ஆகிய ஐந்து திரைப்படங்கள் மட்டுமே எனது ரசனைக்கான தெரிவு. கில்லியும் இந்த ஐந்து திரைப்படங்களும் கூட மிகைப்படுத்தப்பட்ட கற்பனை, வணிக நோக்கு மற்றும் இன்னபிற அம்சங்கள் கொண்டவையாக இருந்தாலும் நடிகர் விஜய்யின் இயல்பான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திழுத்தன என்றே சொல்லலாம். இவை தவிர வேறெந்தத் திரைப்படங்களிலும் நல்ல கதையம்சமோ அல்லது நடிகர் விஜய்யின் குறிப்பிடத்தக்க நடிப்போ இல்லை என்பதே உண்மை. இயக்குனர்களே விஜய்யின் நடிப்புத் திறன் வீழ்ச்சியடைந்தமைக்கு முக்கிய காரணம். தமிழில் வெளிவரும் திரைப்படங்களில் ஒன்றிரண்டு தவிர எல்லாமே வணிக நோ…

வாட்ஸப் தந்த தமிழ் கூறும் நல்லுலகம்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். வாட்ஸப்! இன்று தொடுதிரைக் கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் இணையவழிக் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கு பெரும்பாலும் வாட்ஸப்பையே பயன்படுத்துகின்றனர். வைபர், பேஸ்புக் மெசேன்ஜர், இமோ என பலப்பல செயலிகள் இருந்தாலும் அவற்றுள் வாட்ஸப்புக்கு என தனி இடம் உண்டு. எளிமை, வசதி குறைந்த கைப்பேசியிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளமை போன்ற பல காரணிகள் மக்கள் இதனை விரும்பக் காரணமாக அமைகின்றன. குரல் பதிவு, புகைப்படங்கள், ஆவணங்கள், குரல் மற்றும் காணொளி அழைப்பு (Video Call ) மற்றும் குறுஞ்செய்திகள் என அனைத்தையும் இதனூடாக பரிமாறிக் கொள்ள முடிகிறது. வாட்ஸப் ஒரு பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் சில நேரங்களில் பயனுள்ள விடயங்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவுகின்றது. 

'தமிழ் கூறும் நல்லுலகம்' என்னும் வாட்ஸப் குழு தமிழ் விரும்பும் நலன்விரும்பிகளுடன் இணைந்து செயற்படும் ஒரு குழுவாகும். இக்குழு கடந்த ஒரு மாதகாலமளவில் செயற்பட்டு வருகிறது. இக்குழுவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. பல்வேறு துறை சார்ந்தவர்களும் …

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்! - 02

ஏறு தழுவும் உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் இப்போராட்டம் ஏறு தழுவும் உரிமை மீட்புக்காக மட்டுமல்லாது காவிரி மேலாண்மை வாரியம், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் நீராதாரத்தை சிதைத்தல், சுவாதி படுகொலை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பன்முகம் கொண்ட போராட்டமாக தொடர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. போராட்டக்காரர்கள் மத்தியில் இவை தொடர்பான கருத்துக்கள் பரவலாக இருந்தாலும் ஏறு தழுவும் உரிமையை மீட்டுவிட்டால் போராட்டம் முழுமையடைந்துவிடும் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இடம்பெற்று வரும் இந்த ஏறு தழுவுதல் உரிமை மீட்புக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் கூட இளைஞர்களிடையே பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வாடிவாசல் திறந்து ஏறு தழுவுதல் இடம்பெற்றால் போராட்டம் நிறைவுக்கு வரும் என ஒரு பகுதியினர் கூறுகின்றனர். அவசரச் சட்டம் போதாது, நிரந்தரத் தீர்வு வரும் வரை போராட…

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்!

ஜல்லிக்கட்டு எனத் தற்போது பரவலாக அழைக்கப்படும் ஏறு தழுவுதல் என்னும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கான தடையை நீக்கக் கோரி செல்லினங்களான கைப்பேசிகளிலேயே தினமும் மூழ்கிக் கிடக்கும் இக்கால இளைஞர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். மூன்றாவது நாளாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. பெருகிவரும் மக்கள் ஆதரவின் காரணமாக திரைத்துறையினர் , அரசியல் வாதிகள் மற்றும் பலரும் ஏறு தழுவுதலுக்கு சட்டரீதியான அனுமதி கோரி தமது ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இரவு பகல், வெயில் பனி என எதனையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. மாணவர்கள், பெண்கள், தாய்மார்கள் , குழந்தைகள், பெரியவர்கள் என அத்தனை மக்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சிறு தீப்பொறியாக தொடங்கியது இப்போராட்டம். தீப்பொறி என்ன செய்யும் என எண்ணிய அதிகார வர்க்கம் கொழுந்துவிட்டெரியும் சுடரைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது. 
2004 ஆம் ஆண்டு விலங்குகள் நல தன்னார்வ அமைப்பாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளு…

சிகரம் பாரதி - 0005 - சில குறிப்புக்கள்!

001. இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டுனரின் விபரங்களை பயணியின் கவனத்திற்கு காட்சிப்படுத்துதல் மற்றும் பயணச்சீட்டு வழங்குதல் ஆகியன இவற்றுள் முக்கியமானவை. 
002. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியின் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் நல்லாட்சி தொடர்வதை மக்களே விரும்பவில்லை என்பதையே சூழ்நிலைகள் உணர்த்தி நிற்கின்றன. இதனை விட சர்வாதிகார ஆட்சியில் நன்றாக இருந்தோம் என மக்களே வாய்விட்டுக் கூறி வருகின்றனர். நல்லாட்சி மக்களாட்சியாகுமா?

003. ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திரைத்துறையினர் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் மக்களின் இப்போராட்டத்திற்கு தொடர்ச்சியாக தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

004. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல மக்களில் ஒரு பிரிவினர…

வர்லாம் வா... வர்லாம் வா... பைரவா!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். பைரவா பாத்துட்டீங்களா? சிலர் திரையரங்கில் பார்த்திருப்பீர்கள். பலர் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். நானும் உங்களில் பலரைப் போல் 'தமிழ் ராக்கர்ஸ்' இன் உபயத்தில் இணையத்தினூடே பார்த்து ரசித்தேன். இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரைக்கதை இணையத்தில் வெளியாகிவிடுகிறது. ஏன் சில நேரங்களில் திரைப்படமே வெளியாகிவிடுவதுமுண்டு. திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டு அத்திரைப்படம் முடிந்து ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியே வருவதற்குள்ளாகவே திரைப்படம் குறித்து தமது கருத்தினை இணையத்தளங்களூடாகவும் சமூக வலைத்தளங்களூடாகவும் வெளிட்டுவிடுகின்றனர். முதல் நாள் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் இணையத்தில் திரைப்படம் வெளியாகிவிடுகிறது. இந்தச் சூழலில் திரைக்கதையும் படக்குழுவும் சரியான பாதையில் பயணித்தால் மட்டுமே மக்களை திரையரங்கின் பக்கம் ஈர்க்க முடியும். 

பைரவா. பரதனின் கதை-வசனம்-இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நடித்து விஜயா புரொடக்க்ஷன்ஸ் வெளியிட்டிருக்கும் திரைப்படம். முதல் …

தமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! தமிழ்ப் புத்தாண்டாம் தைத்திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன். வள்ளுவராண்டு 2048 பிறந்துள்ள இந்நன்னாளில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து வாழ்வில் புதிய இன்பங்கள் பிறக்கட்டும். 
உண்மையான தமிழ்ப்புத்தாண்டு தை யா அல்லது சித்திரை யா என்னும் விவாதங்கள் இன்னும் முடிவுறாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம் முன்னோர்களும் அறிஞர்களும் ஆராய்ந்து நமக்குக் கூறிய அடிப்படையில் தைத்திருநாளே நம் புத்தாண்டு எனக்கொண்டு தொடர்ந்திடுமாறு 'சிகரம்' நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது. நம் புத்தாண்டில் புதிய விடயங்களைத் தொடங்கிடுங்கள். ஆடம்பரங்களைத் தவிர்த்து புத்தாண்டைக் கொண்டாடிடுங்கள். 
புதிய மாற்றங்கள் இப்புத்தாண்டில் நிகழட்டும்! அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சிகரம் பாரதி - 0004

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். நாடும் வீடும் சுகம் தானே? ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஜனநாயக முறையில் தேர்தலில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கும் இன்னபிற மக்கள் சபைகளுக்கும் காலம்காலமாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயக முறை எனப்படுகிற தேர்தல் தொடங்கி அத்தனையிலும் இப்போது ஊழல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்று நம்மோடு கூட இருக்கிறவர்களே நாளை மக்கள் பிரதிநிதிகளாய் ஆனபின் ஊழலின் பிரதிநிதிகளாய் ஆகி விடுவதேனோ? எங்கெங்கு காணினும் ஊழலடா என்னும் அளவுக்கு நம் மத்தியில் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. நாமும் ஊழலைத் திட்டிக் கொண்டே ஊழல் வாதிகளுக்கு தினம் தினம் துணைபோய்க் கொண்டுதானிருக்கிறோம். வரப்போகும் முழுமையான நவீன மின்னணு உலகத்திலேனும் ஊழல் இல்லாது போகுமா? 
பொங்கல் தினத்தன்று காலை சன் தொலைக்காட்சியில் 'பணம் வரமா சாபமா' என்னும் தலைப்பில் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. இந்திய அரசின் ரூ 500 மற்றும் 1000 நாணயத்தாள்களின் மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பு இன்னமும் சீராகாத சூழலில் பொருத்தமான தலைப்பாக உள்ளது. கலைஞர் தொ…

சிகரம் பாரதி - 0003

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். மீண்டும் ஒரு வாட்ஸப் பதிவுடன் சந்திக்கிறேன். வாட்ஸப் கேலி கிண்டல்களை மட்டுமல்லாது சிந்தனைக்குரிய விடயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. வேறு எந்த செயலியை விடவும் வாட்ஸப் பிரபலமாக இருக்கிறது. காரணம் குறைந்த வசதிகளையுடைய கைப்பேசியில் கூட வாட்ஸப்பை பாவிக்கக் கூடியதாக உள்ளது தான். இதன் எதிர்காலத்தை மிகச் சரியாகக் கவனித்து பேஸ்புக் உரிய காலத்தில் வளைத்துப் போட்டுக்கொண்டது. வாழ்க வாட்ஸப்! வாழ்க பேஸ்புக்!
# இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....
மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் .
அத்தருணத்தில் ரயில் வருகிறது....
தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு அருகே ட்ராக் (பாதை) மாற்றும் கருவி இருக்கிறது....
நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லணும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென…

சிகரம் பாரதி - 0002

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த வாட்ஸாப்பைக் கண்டுபிடித்தாலும் பிடித்தார்கள் எங்கும் எதிலும் ஒரே கேலியும் கிண்டலும்தான். சில நேரம் ஒரே விடயத்தை பலர் ஒரே நேரத்தில் நமக்கு அனுப்பினால் சிரிப்புக்கு பதில் கோபமே வரும். என்னதான் இருந்தாலும் வாட்ஸாப் சிரிப்புக்கு நிகரேதும் இல்லை. அதில் ஒன்று உங்களுக்காக இங்கே. சிரிப்பு வராவிட்டால் நிறுவனம் பொறுப்பல்ல. 
# இலங்கை அரசின் அடுத்த அதிரடி திட்டம்: அத்தனையும் இலவசம்!
இலவச 4G சிம் – ஜனவரி 15-ம் திகதி முதல் BSNL புது 4G சிம் இலங்கையில் வெளி வர இருக்கின்றது…
சிம் விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே. அழைப்பு நேரம்  2500 ரூபாய் இலவசம். ஒரு நாளைக்கு 1000 குறுஞ்செய்தி  இலவசமாக வழங்கப்படும்.
ஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர் அழைப்பு ஒலி  இலவசம். ஆறு மாதம் இணையப் பாவனை இலவசம். கிட்டதட்ட 1200 GB இலவசமாக வழங்கப்படுகிறது.
ரோமிங் கட்டணம் கிடையாது. தேசிய அடையாள அட்டை அவசியம். ஆனால்………………
சமிக்ஞைக் கோபுரம் மட்டும் நீங்கதான் நட்டுக்கணும். கோபப்படாதீங்க. எனக்கும் இப்படித்தான் அனுப்பினாங்க…. #
என்ன வாசகர்களே, சிரிப்பு வருதா இல்ல கோவம் வருதா? எது வந்தாலும் இதை அப்படியே உங்கள் வாட்ஸா…

சிகரம் பாரதி - 0001

வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்களுடன் இணைந்து நானும் 2017 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். 
மூன்றாவது முறையாக ஒரு தொடர் பதிவின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளேன். 2012 இல் உலக அழிவு குறித்துப் பரவலாகப் பேசப்பட்ட நேரத்தில் 46 தொடர் பதிவுகளை இட திட்டமிட்டு இறுதியில் 41 பதிவுகளையே இட முடிந்தது. கடந்த வருடம் ( 2016 ) நீண்ட நாட்களாக கவனிக்கப்படாதிருந்த வலைத்தளத்தை தூசு தட்டி மெருகேற்றவும் எனது எழுத்தை மேம்படுத்திக் கொள்ளவும் 50 தொடர் பதிவுகளை வெளியிடத் தீர்மானித்தேன். வாசகர்கள் அருளால் 50 பதிவுகளையும் குறைவின்றி வெளியிட்டாயிற்று. இம்முறை மூன்றாவது தடவையாக வருடத் தொடக்கத்திலேயே களம் இறங்கியிருக்கிறேன். மனதில் தோன்றும் சிறுசிறு எண்ணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இப்பதிவின் நோக்கம். பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவோ அல்லது தரவரிசையை உயர்த்திக் கொள்வதற்காகவோ இத்தொடர் பதிவை எழுத வரவில்லை. மனதின் எண்ணங்களுக்கு எழுத்தால் வடிவம் கொடுப்பது ஒன்ற…

வருக வருக 2017ஆம் ஆண்டே!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இனிய ஆங்கிலப் புத்தாண்டு 2017 இற்கான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஞாயிறு தினத்தில் , ஒரு விடுமுறை நாளில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிவிட்டு களைத்துப் போயிருப்பீர்கள். இன, மத, மொழி, சாதி வேறுபாடின்றி அனைவரும் இந்த ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்போம். பல சபதங்களையும் உறுதி மொழிகளையும் எடுத்திருப்போம். பல புதிய விடயங்களைத் துவங்கியிருப்போம். நல்லது.
ஆனால் நாம் நமது தமிழர் புத்தாண்டான தைத்திருநாளை இத்தனை கோலாகலத்துடன் வரவேற்போமா? நமது புதிய எண்ணங்களை தைத்திருநாளில் ஆரம்பிக்க எண்ணுவோமா? இல்லை. மற்ற எல்லா நாட்களையும் போல தைத்திருநாளையும் ஒரு சாதாரண நாளாகக் கருதி கடந்து போவோம். ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழியாக இருக்கலாம். அதனால் நாமும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கலாம். ஆனால் நமது தாய்தமிழ்க் கலாச்சாரத்தை மறப்பது , உதறித்தள்ளுவது நியாயமாகுமா? 
தைத்திருநாளே நமது புத்தாண்டு தினமாகும். அதனை கொண்டாட வேண்டியது நமது கடமை. பணத்தையும் நேரத்தையும் வாரி இறைக்காமல் பயனுள்ள வகையில் தமிழர் புத்தாண்டைக் கொண்டாடி நமது தமிழ்க் …