Share it

Friday, 29 August 2014

பாசத்தில் பாரபட்சம் - சரியா?

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

நான் அண்மையில் வாசித்த ஒரு செய்தி. பெற்றோரின் பாரபட்ச பாசம் காரணமாக 6 வயது தங்கையைக் கத்தியால் குத்திக் கொன்ற 13 வயது அக்கா. தன்னை விட தன் தங்கை  மீது அக்காளின் மனதில் முளைவிட்ட வன்மத்தின் கோர விளைவு இது. 

இச்சம்பவத்திற்கு பெற்றோரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பெரும்பாலான பெற்றோர் செய்யும் தவறே இது. குழந்தைகள் வளர்ந்து கொஞ்சம் பெரியவர்களாகி விட்டால் அவர்கள் எல்லாவற்றையும் தாமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பருவத்தில் தாம் எப்படி இருந்தோம் என்பதை அந்தப் பெற்றோர் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

 

பெற்றோரின் பாசத்தின் மீதான எதிர்பார்ப்பு பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை இருந்து கொண்டே இருக்கும். இந்த வயதெல்லை ஆளுக்காள் மாறுபடலாம். அதனை கண்டறிந்து பாசம் காட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த வயதெல்லை இன்னும் அதிகமாகும். எல்லோருக்குமே தொட்டில் பருவத்தில் தாம் நடத்தப்பட்ட விதம் நினைவில் இருப்பதில்லை. அவர்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவர்கள் அவற்றை நினைவில் கொள்வார்கள். எனவே பிள்ளைகளின் மனம் பக்குவப்படும் வரை பாசத்தின் அளவு மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். 

புதிதாக ஒரு பிள்ளை பிறந்ததும் அந்தப்பிள்ளையையே அதிகம் கவனிப்பதும் மூத்த பிள்ளையை கண்டுகொள்ளாமல் விடுவதும் மிகத் தவறு. அப்படியானால் எல்லாப் பிள்ளைகளும் இந்த மாதிரி கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்களா என நீங்கள் கேட்கலாம். எல்லோரும் கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை. ஆனால் நீங்கள் காட்டும் பாரபட்சத்தை நினைவில் இருத்திக் கொள்கிறார்கள். சமயம் வரும்போது கோபமாகவோ, சண்டையாகவோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள். 

பாரபட்ச பாசமானது முதலில் ஏக்கமாகவும் பின்பு வன்மமாகவும் பிள்ளைகளின் மனதில் உருவெடுக்கிறது. இதுவே இக்கொலைக்கும் காரணமாகியிருக்கிறது. அனைத்துப் பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. நமது பிள்ளைகளை எப்படி வளர்த்தோம் என்பதை அளவிட்டுக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. பாரபட்ச பாசம் கொலையானதால் கதை வெளியாகியிருக்கிறது. இன்னும் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் வெளிவராத  எத்தனை எத்தனை கதைகள் இருக்குமோ யாரறிவார்?

பெற்றோர்களே இது உங்கள் தருணம். சிந்தித்து செயல்படுங்கள்.

நன்றி,
இப்படிக்கு

சிகரம்பாரதி.

Sunday, 24 August 2014

தேன்கிண்ணம் - பாட்டும் நானே...

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று உங்களோடு எனக்குப் பிடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பாடல்களின் பட்டியலைப் பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகிறேன். பாடல்களுக்கு விளக்கம் ஏதுமில்லை. ஆயினும் இப்பட்டியலில் உங்களுக்குப் பிடித்த பாடல்களை பின்னூட்டம் மூலம் கோடிட்டுக் காட்டுங்கள். உங்கள் பட்டியலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கொஞ்சம் வித்தியாசமான பதிவாக இருக்கட்டுமே?


பட்டியல் இதோ:

01. பாட்டும் நானே... [ திருவிளையாடல் ]

02.  உள்ளத்தில் நல்ல உள்ளம் [ கர்ணன் ]

03. நீயும் நானுமா? [ கெளரவம் ]

04. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... [ பாபு ]

05.கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா [ தெய்வ மகன் ]


06. வாழ நினைத்தால் வாழலாம் [ பலே பாண்டியா ]

07. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா... [ அவன்தான் மனிதன் ]

08. நான் பேச நினைப்பதெல்லாம் [ பாலும் பழமும் ]

09. பூங்காத்து திரும்புமா? [ முதல் மரியாதை ]

10. இசை கேட்டால் புவி அசைந்தாடும் [ தவப்புதல்வன் ]


அன்புடன்
சிகரம்பாரதி.

Wednesday, 20 August 2014

இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!

இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!

வணக்கம் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்களே! இப்பதிவு உங்களின் முக்கிய கவனத்திற்குற்பட வேண்டும் என விரும்புகிறேன். "சிகரம்" இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவுகளின் விபரங்களைத் திரட்ட மற்றும் ஆவணப்படுத்த எண்ணியுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது.


உங்கள்  அல்லது நீங்கள் அறிந்த இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளை பின்வரும் விபரங்களுடன் எமக்கு அனுப்பி வையுங்கள்.

வலைப்பதிவு முகவரி:
வலைப் பதிவர் பெயர்:
வலைப் பதிவின் பெயர்:
வலைப்பதிவு விளக்கம்:
ஆரம்பிக்கப்பட்ட திகதி:
சொந்த இடம்:
தற்போதைய வசிப்பிடம்:

அனைத்து விபரங்களையும் பின்னூட்டம் மூலமாகவோ , இவ்வலைத்தளத்தின் வலது பக்கப்பட்டியிலுள்ள "அஞ்சல் பெட்டி" ஊடாகவோ அல்லது மேல்பக்கப் பட்டியிலுள்ள "தொடர்புகளுக்கு" இல் உள்ள விபரங்களினூடாகவோ அனுப்ப முடியும். 31.08.2014 க்கு முன்னர் முடிந்தவர்கள் அனுப்பி வைக்கவும். ஆனால் இது இறுதித் திகதி அல்ல.


இம்முயற்சியில் இணைந்துகொள்ள / கைகோர்க்க விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

அனுப்பப்படும் மடல்கள் யாவும் "இலங்கைத் தமிழ் வலைப்பதிவுத் திரட்டி - சிகரம்" என தலைப்பிடப்படல் வேண்டும்.

அறியப்படாத / வெளிக்கொணரப்படாத இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் வரலாற்றுப் பக்கங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவோம்.

Monday, 18 August 2014

ஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [02]

               வணக்கம் வலைத்தள வாசகர்களே! மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நலமா? நான் நலம்.  நாம் நமது சமூக சூழலில் தினசரி பல விடயங்களை அவதானிக்கிறோம். அவற்றில் பலவற்றை பதிவுகளாகவோ கலந்துரையாடல்கள் மூலமோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சில விடயங்கள் பற்றி அதிகம் பேச - பகிர ஆர்வமில்லாதிருக்கும். ஆனாலும் சுருக்கமாகவேனும் சொல்ல நினைப்போம். அவ்வாறான விடயங்களை இலக்கமிட்டு பகிர்வதே இப்பதிவின் நோக்கம். வாருங்கள் பேசலாம்.

  ஒன்று: 
ஆகஸ்ட் 15. இந்திய சுதந்திர தினம். சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டிருக்கும். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். எல்லா அரசியல் கட்சிகளும் தெருக்கள் தோறும் கூட்டங்களை நடத்தியிருக்கும். என்னதான் "நான் இந்தியன்" என்று எல்லோரும் சொல்லிக்கொண்டாலும் இந்த நாளில் கூட பேதங்கள் எல்லாம் அப்படியே தானிருக்கும். சுதந்திரம் கூட இன , மத , வர்க்க ரீதியாகவே பாகுபடுத்தப் பட்டிருக்கும். உண்மையான தியாகிகள் மறக்கடிக்கப்பட்டு சுய தம்பட்டம் அடித்துக் கொள்வோர் தம்மை முன்னிலைப்படுத்தியிருப்பர் .


சுதந்திர தினத்திலேனும் ஒன்று சேர முடியாத நிலையில் உள்ளவர்களால் நாடு எப்படி முன்னேறும்? உங்கள் சிந்தனைக்கு...

இரண்டு: 
"சிகரம் வலை மின்-இதழ்" வெளியாகியிருக்கிறது. பதிவர்களை அல்லாமல் பதிவுகளை மட்டும் சஞ்சிகை வடிவில் வாராவாரம் வாசகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஓர் புதிய முயற்சி. பிரதி வெள்ளி தோறும் வெளியாகும் இவ்விதழில் வெளியீட்டுக் காலத்திற்கு உட்பட்ட காலப்பகுதியில் வெளியாகும் பதிவுகளை தொகுத்து அவற்றின் இணைப்புகளுடன் விருந்து படைக்கும் புத்தாக்க எண்ணம். எண்ணம் ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது. முழுமையான வெற்றிக்கு இன்னும் சில காலம் ஆகலாம். இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவையும் வேண்டுகிறேன். இதோ முதல் இரண்டு இதழ்களும் உங்களுக்காக....

சிகரம் வலை மின்-இதழ் - 001

சிகரம் வலை மின்-இதழ் - 002

மூன்று:
இந்த அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான அலப்பறைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நடிகர் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக மக்கள் கருத்துக் கணிப்பின் மூலம் தேர்வாகியுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. நல்ல படங்களை நடித்தால் போதும் என்று மட்டும் யாருமே நினைப்பதில்லை. போலியான புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு திரைப்படத்துறையை வணிக ரீதியாகவே எல்லோரும் அணுகுகின்றனர். பாடல்களோ அல்லது படங்களோ முன்னைய தரத்தில் இல்லை. இதற்கெல்லாம் யார் காரணம் என்று நான் உங்களிடம் கேட்கப்போவதில்லை. காரணம் நாம் தான். நாம் ரசிக்கிறோம். அவர்கள் தருகிறார்கள். மாற்றம் நம் ரசனையில் இருந்து தான் துவங்க வேண்டும். நீங்கள் தயாரா?


மீண்டும் சந்திக்கும் வரை,

அன்புடன்
சிகரம்பாரதி.

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts