Monday, 18 August 2014

ஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [02]

               வணக்கம் வலைத்தள வாசகர்களே! மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நலமா? நான் நலம்.  நாம் நமது சமூக சூழலில் தினசரி பல விடயங்களை அவதானிக்கிறோம். அவற்றில் பலவற்றை பதிவுகளாகவோ கலந்துரையாடல்கள் மூலமோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சில விடயங்கள் பற்றி அதிகம் பேச - பகிர ஆர்வமில்லாதிருக்கும். ஆனாலும் சுருக்கமாகவேனும் சொல்ல நினைப்போம். அவ்வாறான விடயங்களை இலக்கமிட்டு பகிர்வதே இப்பதிவின் நோக்கம். வாருங்கள் பேசலாம்.

  ஒன்று: 
ஆகஸ்ட் 15. இந்திய சுதந்திர தினம். சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டிருக்கும். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். எல்லா அரசியல் கட்சிகளும் தெருக்கள் தோறும் கூட்டங்களை நடத்தியிருக்கும். என்னதான் "நான் இந்தியன்" என்று எல்லோரும் சொல்லிக்கொண்டாலும் இந்த நாளில் கூட பேதங்கள் எல்லாம் அப்படியே தானிருக்கும். சுதந்திரம் கூட இன , மத , வர்க்க ரீதியாகவே பாகுபடுத்தப் பட்டிருக்கும். உண்மையான தியாகிகள் மறக்கடிக்கப்பட்டு சுய தம்பட்டம் அடித்துக் கொள்வோர் தம்மை முன்னிலைப்படுத்தியிருப்பர் .


சுதந்திர தினத்திலேனும் ஒன்று சேர முடியாத நிலையில் உள்ளவர்களால் நாடு எப்படி முன்னேறும்? உங்கள் சிந்தனைக்கு...

இரண்டு: 
"சிகரம் வலை மின்-இதழ்" வெளியாகியிருக்கிறது. பதிவர்களை அல்லாமல் பதிவுகளை மட்டும் சஞ்சிகை வடிவில் வாராவாரம் வாசகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஓர் புதிய முயற்சி. பிரதி வெள்ளி தோறும் வெளியாகும் இவ்விதழில் வெளியீட்டுக் காலத்திற்கு உட்பட்ட காலப்பகுதியில் வெளியாகும் பதிவுகளை தொகுத்து அவற்றின் இணைப்புகளுடன் விருந்து படைக்கும் புத்தாக்க எண்ணம். எண்ணம் ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது. முழுமையான வெற்றிக்கு இன்னும் சில காலம் ஆகலாம். இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவையும் வேண்டுகிறேன். இதோ முதல் இரண்டு இதழ்களும் உங்களுக்காக....

சிகரம் வலை மின்-இதழ் - 001

சிகரம் வலை மின்-இதழ் - 002

மூன்று:
இந்த அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான அலப்பறைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நடிகர் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக மக்கள் கருத்துக் கணிப்பின் மூலம் தேர்வாகியுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. நல்ல படங்களை நடித்தால் போதும் என்று மட்டும் யாருமே நினைப்பதில்லை. போலியான புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு திரைப்படத்துறையை வணிக ரீதியாகவே எல்லோரும் அணுகுகின்றனர். பாடல்களோ அல்லது படங்களோ முன்னைய தரத்தில் இல்லை. இதற்கெல்லாம் யார் காரணம் என்று நான் உங்களிடம் கேட்கப்போவதில்லை. காரணம் நாம் தான். நாம் ரசிக்கிறோம். அவர்கள் தருகிறார்கள். மாற்றம் நம் ரசனையில் இருந்து தான் துவங்க வேண்டும். நீங்கள் தயாரா?


மீண்டும் சந்திக்கும் வரை,

அன்புடன்
சிகரம்பாரதி.

2 comments:

  1. வலை இதழ் துவங்கியமைக்கு வாழ்த்துக்கள்! இணைப்புக்கு சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...