யாழில் 'பரசுராம பூமி' நூல் அறிமுக நிகழ்வு

மறுபாதி குழுமம் நடாத்திய வி.மைக்கல் கொலினின் 'பரசுராம பூமி' சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா கடந்த 16-06-2018 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் 128, டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் பிரபல எழுத்தாளர் ஐ.சாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கலைமுகம் பொறுப்பாசிரியர் திரு.கி. செல்மர் எமிலின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்களும் சிறப்பதிதியாக கிளிநொச்சி வலய உதவிக்கல்விப் பணிப்பாளரும் எழுத்தாளருமான திரு.சு. ஸ்ரீ குமரன் (இயல்வாணன்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பிரபல தொழிலதிபரும் கிருபா லேணர்ஸ் அதிபருமான திரு. அ.கிருபாகரன் அவர்கள் கெளரவ அதிதியாக கலந்து கொண்டு நூலின் முதற் பிரதியைப் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். நூல் தொடர்பான கருத்துரைகளை எழுத்தாளர்கள் ச.இராகவன், சி.ரமேஷ் ஆகியோர் வழங்கினர். ஈழத்தின் முக்கிய படைப்பாளிகளான திரு.க.சட்டநாதன், உடுவை எஸ்.தில்லை நடராஜா, வடகோவை வரதராஜன், கலாநிதி கந்தையா ஸ்ரீ கணேசன் ,கி.சு.முரளிதரன், கவிஞர் சித்தாந்தன், வேல் நந்தன், தூண்ட...