Posts

Showing posts from 2017

முத்தான கவிதைகள் மூன்று..

Image
முத்தான கவிதைகள் மூன்று..
நமது 'சிகரம்' வாசகர்களுக்காக இணையவெளியில் நாம் கண்டெடுத்த முத்தான மூன்று கவிதைகளை இணைப்புகளுடன் பகிர்ந்துள்ளோம். உங்கள் எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.


நமது வலைத்தளம் : சிகரம் | பதிவர்கள் கவனிக்கவும் ! : முத்தான கவிதைகள் மூன்று..

வாழ்க்கை வாழ்வதற்கே!

Image
எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கைக்கு ஒரு வடிவம் இருக்க வேண்டும். அந்த வடிவத்தை நீங்களே தீர்மானிக்க வேண்டும். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால் அவர்களை நம் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்க அனுமதிப்பது தவறு. நீங்கள் இன்னொருவரைப் பின்பற்றலாம். அல்லது அவரது நல்ல குணங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரைப் போலவே வாழ முயற்சிக்கக் கூடாது. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.


பதிவை முழுமையாக வாசிக்க - TO READ FULL STORY 
வாழ்க்கை வாழ்வதற்கே! - சிகரம் பாரதி - world.sigaram.co

பிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு யாருக்கு?

பிக்பாஸ் மாபெரும் இறுதிப்போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தேர்வாவதற்கான வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார். அதுதான் 'வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு ( Winning Golden Ticket )'.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள 'சிகரம்' இணையத்தளத்தை நாடுங்கள். அல்லது கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்! 
பிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு யாருக்கு?
https://www.sigaram.co/preview.php?n_id=157&code=j1O3wGUl
#BiggBossTamil #BiggBossTamilUpdate

சிகரம் பணிக்கூற்று - 2017.07.01 - 2018.05.31

Image
சிகரம் திருவள்ளுவராண்டு 2048 ஆனி 17, 2017.07.01 - சனிக்கிழமை.
மகுட வாசகம்
தமிழ் கூறும் நல்லுலகு!
தூரநோக்கு
தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்!
எமது இலட்சிய நோக்கு
* தமிழர் வரலாறு, பழந்தமிழ் நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தல், காட்சிப்படுத்தல் மற்றும் எண்ணிமமாக்கல்.
* தமிழில் உலகின் மிகப்பெரிய எண்ணிம நூலகத்தையும் தரவு மையத்தையும் உருவாக்குதலும்  உலகின் முதற்தர தமிழ்ச் செய்திச் சேவையாகத்  தொழிற்படுதலும்.
* உலகின் மொழிகள் அனைத்திலும் தலை சிறந்த படைப்புகள் அனைத்தையும் தமிழில் வழங்குதலும் கடந்தகால மற்றும் தற்கால தமிழ்ப் படைப்புக்களை எண்ணிமமாக்கலும்  படைப்பாளிகளை ஊக்குவித்தல், கௌரவித்தல்.
* அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதல் மற்றும் சகோதர மொழிகளுக்கு மதிப்பளித்தலும் அவர்களின் மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்தை தமிழில…

பிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா!

Image
பிக்பாஸ் நிகழ்ச்சி தனது ஒன்பதாவது வாரத்தையும் நிறைவு செய்துள்ளது. இந்த வாரம் வீட்டுக்குள் பெரிதாக எந்த சிக்கல்களும் இல்லாதிருப்பது கண்டு மனம் நொந்த பிக்பாஸ் கமல் மூலமாக குடும்ப உறுப்பினர்களிடையே பிளவை உண்டு பண்ணினார். குடும்ப உறுப்பினர்களின் மீதான புகார்களை வழக்காடு மன்றத்தின் மூலமாக விசாரிப்பதாக ஒரு பணியைக் கொடுத்து சிக்கல்களை சிறிது இல்லத்திற்குள் அனுப்பி விட்டார். முழுமையான விளைவுகள் திங்கள் ( 28 ) அத்தியாயம் முதல் தெரிய வரும்.
                                               ***************************
பதிவை முழுமையாக வாசிக்க 'சிகரம்' இணையத்தளத்துக்குப் பிரவேசியுங்கள் : 
பிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா!

என்ன மச்சான்? சொல்லு மச்சி! - 02

Image
என்ன மச்சான்?

சொல்லு மச்சி!

என்னத்த சொல்ல? நானே ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சில இருந்து வெளில போன கவலைல இருக்கேன்...

ஏன், ஜூலியும் தானே வெளிய போனாங்க?

ஆமா. ஆனா ஓவியாவுக்காக கவலைப்படறவங்கள்ல ஒரு சிலர் கூட ஜூலிக்காக வருத்தப்படறதில்ல...

இது தப்பில்லையா?

எது தப்பு? ஜூலி பண்ணது தான் தப்பு. ஓவியா சரியாத்தான் இருந்தாங்க.

ஜூலி இந்த நிகழ்ச்சி நடக்குற அந்த நூறு நாள் மட்டுமே தன்னோட வாழ்க்கையை தீர்மானிக்கப் போகுதுன்னு தப்பா நெனச்சிக்கிட்டதுனால தப்பு பண்ணிட்டாங்க. அதையே பெருசு படுத்திப் பேசுறது தப்பில்லையா?

ஜூலி ஒன்னும் சின்னப் பொண்ணு கெடையாதுல்ல?ஆமா. ஆனா அந்த பதினாறு பேருக்குள்ள நடக்குற விசயங்களை மட்டும் வச்சி அவங்கள எடை போடுறது நியாயமா?

பேஸ்புக்ல போய்ப் பாரு புரியும். ஓவியாவுக்காக இளைஞர்கள் அப்படியே உருகுறாங்க.

அதே பேஸ்புக்ல தான் ஜூலியை கீழ்த்தரமா விமர்சிச்சும் எழுதறாங்க.

ஜூலி பண்ணது தப்பே இல்லங்குறியா?

நா அப்படி சொல்லல

பின்ன?

நம்ம எல்லோருக்கும் ஓவியாவை ஏன் பிடிக்குது?

ஏன்னா அவங்க எதைப் பத்தியும் கவலைப்படறதில்ல, அன்பா இருக்காங்க, சந்தோசமா இருக்காங்க.

மிகச்சரி. அவங்கள நேசிக்கிற, கொண்டாடுற நம்மளால ஏ…

பாரா வின் ஒரே ஒரு அறிவுரை

Image
சிலருக்கு அப்பாவைப் பிடிக்கும். பலருக்கு அம்மாவைப் பிடிக்கும். ஒரு சிலருக்கு யாரையுமே பிடிப்பதில்லை. நமக்கு அப்பாக்கள் இருக்கும் வரை அவர்களைப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிவதே இல்லை. ஏனெனில் கண்டிப்புடனேயே கடைசி வரை இருந்துவிடுவது தான். சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி அதிகம் புரியும். இது ஒரு சிறுகதை. அப்பாவை இழந்த ஒரு மகனின் கதை. இருபத்தைந்து வருடங்களாக தன் கூடவே இருந்த தந்தையின் இறுதிக் கிரியை நிகழ்வும் அந்த நிகழ்வின் தாக்கத்தினால் மகனின் எண்ண ஓட்டத்தில் வந்து போகும் சில சம்பவங்களும் தான் கதை. வலிமைமிக்க சொற்களினால் கதையை செதுக்கியுள்ளார் கதாசிரியர் பாரா. ஒவ்வொரு எழுத்துக்களும் நமது இதயத்தின் அடி ஆழத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புகின்றன.
பார்த்தசாரதி ராகவன் என்னும் பாரா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் எனலாம். 'சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துக…

வணக்கம் சிகரம்!

Image
வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். 'சிகரம்' இணையத்தளம் ஜூலை முதலாம் திகதி முதல் தமிழ்ப்பணியாற்றிவருவது நாம் அறிந்ததே. தமிழ் கூறும் நல்லுலகின் பங்களிப்போடு வெற்றிகரமாக எமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இதுவரை காலமும் என் வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைவரையும் 'சிகரம்' இணையத்தளத்தை வெற்றிபெறச் செய்ய பங்களிக்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

எமது மகுட வாசகம்:
தமிழ் கூறும் நல்லுலகு!

எமது தூரநோக்கு:
தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்!
அழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்!

உங்கள் திறமைகளை எங்கள் சிகரத்தோ…

என்ன மச்சான்? சொல்லு மச்சி!

Image
"பிக் பாஸ்" பாத்தியா?
யாருடா பிக் பாஸ்?
யாரு இல்ல, நிகழ்ச்சி...
ஓ! நம்ம விஜய் தொலைக்காட்சியா?
ம்ம்...


நல்லதொரு .குடும்பம்... பல கலைக் கலகம்....
எல்லா கெரகமும் சேர்ந்து கலகம் பண்ணிக்கிட்டிருக்கு
பேஸ்புக், யூடியூப் னு நக்கலும் நையாண்டியும் களை கட்டுது
ம்ம். நாம நிகழ்ச்சியை கலாய்ச்சிக்கிட்டிருக்கோம்னு நெனச்சிக்கிட்டிருக்கோம்.
பின்னே?
அதுதான் இல்ல. அவங்க நம்மள கலாய்க்க வச்சிக்கிட்டிருக்காங்க.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முழுப் பதிவையும் படிக்க நமது 'சிகரம்' இணையத்தளத்துக்கு வாருங்கள்!
https://sigaram.co/preview.php?n_id=93&code=ndalbOS6

சிகரம் - குறிக்கோள்கள் ( 2006-2017)

Image
01. எவ்விதமான பக்கச்சார்புமின்றியும் அச்சமுமின்றியும் நீதித்தன்மையுடன் உடனுக்குடன் உண்மையானதும் தெளிவானதும் உறுதியானதுமான செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தல்.


02. தமிழையும் தமிழரையும் பாதுகாத்தலும் சகல துறைகளிலும் முன்னேற்றுதலும்.
03. ஒழுக்கம், நேர்மை, நேரம், கடமை,கட்டுப்பாடு, கல்வி என்று சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக எதிர்கால சட்டபூர்வ நிறுவன முகாமைத்துவக்குழு , ஊழியக் குழு என்பவற்றை அமைத்தல்.
04. மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றுக்கு உடன் தீர்வு காணுதல். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கபடுவதோடு சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் நிறுவனம் குரல் கொடுக்கும்.

05.01. நடுவுநிலைமையுடன் செயற்படுதலும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மக்கள் மத்தியில் நிலை நாட்டுதல்.

05.02. சேவைநோக்குடன் செயற்படும் அதேவேளை அது நிறுவனத்தை பாதிக்காத வகையிலான சேவைகளாக அமைக்கப்படுவதுடன் உச்ச இலாபம் தரக்கூடிய துறைகளையும் முன்னுரிமைப்படுத்தி செயற்படல்.


06. வெளியிடப்படும் நூல் சார்ந்த அல்லது அச்சு சார்ந்த துறையில் (பத்திரிகைகள், புத்தகங்கள்) தகவல் சேகரிப்பு, அச்சிடல், வெளியிடல் என்பவற்றில்…

பதினோராம் வருடப் பூர்த்தியில் சிகரம்!

வணக்கம் நண்பர்களே! 2006.06.01 அன்று 'சிகரம்' கையெழுத்து சஞ்சிகையாக தனது பயணத்தைத் துவங்கியது. பதினோரு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பண்ணிரண்டாவது அகவையில் உங்கள் 'சிகரம்' காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஒரு குழந்தை போல் மெல்ல மெல்ல நிதானமாக'சிகரம்' தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. வெற்றிப் பாதையில் மெதுவாகவே பயணித்துக் கொண்டிருந்தாலும் இலக்கை நோக்கித் தெளிவாக பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 'சிகரம்' இணையத்தளத்தின் ஆரம்பம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். 'சிகரம்' இணையத்தள வடிவமைப்பின் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில பணிகளே எஞ்சியுள்ளன. அவையும் முடிவடைந்த பின்னர் இணையத்தளம் தனது தமிழ்ப்பணியைச் செவ்வனே செய்யக் காத்திருக்கிறது. 
மேலும் இம்மாதம் முதல் குரல்ஒலி மற்றும் காணொளி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் 'சிகரம்' உங்களை நாடி வந்து கொண்டிருக்கிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியையும் இச்சந்தர்ப்பத்தில் உங்களுக்கு வழங்கக் கடமைப் பட்டிருக்கிறேன். விரைவில் நிறுவன அமைப்பாக எமது பணியைத் தொடர வேண்டும் என…

சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

என் இனிய நண்பர்கள், அன்பர்கள், வாசகர்கள் மற்றும் சக தமிழர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். தமிழர்களின் புத்தாண்டு எது? இந்தக் கேள்விக்கான தீர்க்கமான விடை இன்னும் யாரிடமும் இல்லை. ஆளும் அரசுகளும் தத்தமது கொள்கைகளுக்கேற்ப ஒவ்வொரு நாளை பின்பற்றி வருகின்றன. 
தை யா? சித்திரை யா? தமிழர் புத்தாண்டு எது? நம் தமிழறிஞர்கள் பலர் பலமுறை ஆராய்ந்து தைத்திருநாளே தமிழர் புத்தாண்டு என அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்த வண்ணமே உள்ளது. சித்திரைத் திருநாள் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒன்றாகவும் மாறிப்போய் இருக்கிறது. தை தான் நமக்கு முதல் மாதம். தமிழில் மாதங்களை சொல்லும் போது தையில் இருந்து தான் ஆரம்பிக்கிறோம். வருடம் முதல் மாதத்தில் இருந்து ஆரம்பிப்பது தானே முறை?
சித்திரையில் நிகழ்வது இராசி மாற்றம். அதாவது சனிப்பெயர்ச்சி போன்ற ஒன்று மட்டுமே. தமிழரின் அடையாளம் விவசாயம். விவசாயிகளின் திருநாளும் தை தான். மேலும் சித்திரை இடைநடுவில் வரும் மாதம். வருடப்ப்பிறப்பு வருடத்தின் நடுப்பகுதியில் நிகழ்வது சாத்தியம் தானா? ஆகவே தைத்திருநாளே தமிழரின் புத்தா…

வாசிப்பை நேசிப்போம்

இக்கட்டுரை இலங்கையின் தேசிய நாளேடான ‘வீரகேசரி’ இல் 24.02.2008 அன்று கதிர் பகுதியின் 04 ஆம் பக்கத்தில் வெளியானது. ‘சிகரம் பாரதி’ என்னும் புனை பெயரில் வெளியானது.
வாசிப்பை நேசிப்போம்
வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். அதிலும் பத்திரிகை வாசித்தல் மனிதனை பல்துறை சார்ந்த அறிவு கொண்டவனாக மாற்றும். இலக்கியம், அரசியல், விளையாட்டு என பல செய்தி வகைகள் பத்திரிகையில் உள்ளன. அத்துடன் நம்முடைய திறமைகளை வெளியிட ஆக்கங்களையும் பிரசுரித்து ஊக்கம் தருகிறது. மேலும் கேள்வி கேட்கும் சுதந்திரம் பத்திரிகைகளிலேயே அதிகம் கிடைக்கிறது.
நூல்கள் எமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாகும். செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வைரத்திலும் உயர்வானவை. புத்தகங்களும் அது போன்றவையே. ‘உனக்கு வரம் வர யாரோ இருந்த தவமல்லவா புத்தகம்’ என்கிறார் வைரமுத்து. மேலும் ‘ஒரு நல்ல புத்தகம் திறந்துகொண்டால் நரகத்தின் வாசல் மூடப்படும். ஒவ்வொரு பக்கம் நகரும் போதும் நீ எதிர்காலத்துள் காலடி வைக்கிறாய் – ஒரு புத்தகம் முடிகிறது மனசின் மர்மப் பிரதேசம் விடிகிறது’ என்றும் கூறியிருக்கிறார் வைரமுத்து.
வாசிப்பதற்கும் மலையக மக்களின் முன்னேற்றத்துக்கும் என்ன …

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 3

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் மூன்றாம் பகுதி உங்களுக்காக இங்கே:
முதலாம் பகுதி:
தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 1
இரண்டாம் பகுதி:
தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 2
மூன்றாம் பகுதி : 
சிகரம் பாரதி : தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை கண்டறிந்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி அவசியமானவற்றை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மழை இயற்கை. எல்லோருக்கும் பொதுவானது. மொழி செயற்கை. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டது. அதில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதில் தவறில்லை.
முனீஸ்வரன் : நானும் ஏற்கிறேன் ஏற்கனவே கலந்த சொற்களை மாற்ற முயற்சிப்பது முடியாது இனி கலக்காமல் தடுக்க முயல்வதே நன்று.
மாற்றம் என்பதை நிறைய பேர் தவறாக நினைக்கிறார்கள். சொல்லுங்க மாற்றம் என்றால் என்ன?
சிகரம் பாரதி : அம்மா என்பது இலகுவானது. ஆகவே மம்மியை நிராகரித்து விடலாம…

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 2

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் இரண்டாம் பகுதி உங்களுக்காக இங்கே: முதலாம் பகுதி: தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 1
இரண்டாம் பகுதி:
ஜெகஜோதி : குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டிய நிலையில் தமிழ் இல்லை. உலக அரங்குக்கு அதை எடுத்து செல்வது நம் பணி, நமது அரசின் பணி. தூய தமிழ் மற்றும் எளிய தமிழ் வேண்டும் . ஆனால் பிறமொழி கலந்துதான் தமிழ் மொழி நிலை நிறுத்தப் பட வேண்டுமா?.  உலக மொழிகளுக்கெல்லாம் தாய் எம் மொழி .
பாலகுமரன் : பிறமொழி கலந்து என்று பொதுவாகக் கருதாமல் ஆண்டாண்டு காலமாக எம் தமிழ் மக்களின் நாவில், வாழ்வில் உணர்வில் கலந்து விட்ட சொற்களைப் பாருங்கள்... எம் தமிழர் பேசி பழகிவிட்ட  சொற்களை ஏன் ஏற்றுக் கொள்ளத் தயக்கம்? எம் தமிழர் புரிந்து கொள்ள முடியாத சொல்லை பேசுவானேன் ? மொழியே நம் கருத்தைத் தெளிவாகக் கூ…

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 1

Image
வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய தலைப்பின் கீழான விவாதத்தின் தொகுப்பு உங்களுக்காக இங்கே:

தமிழ் கூறும் நல்லுலகம் திருவள்ளுவராண்டு 2048 மாசி மாதம் இருபத்தியோராம் நாள் விவாதத்திற்காக வழங்கப்படும் தலைப்பு : தமிழ் மொழி - இன்றும் - நாளையும்!
சிகரம் பாரதி : தமிழ்மொழியின் பழம்பெரும் பெருமைகள் பற்றி இன்று பேச வேண்டாம். தமிழ்மொழி இன்று எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்காக எதிர்காலத்தில் நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால மென்பொருள் ஆளப்போகும் உலகில் தமிழின் வளர்ச்சிக்கு நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்வோம்.


பாலாஜி : 'உலகவழக்கழிந்தொழிந்து சிதையாத' தமிழின் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து எத்தனைதான் நாம் போற்றி நின்றாலும்,  நமதருமைத் தமிழின் இன்றைய நிலைமையைத் தமிழராகிய நாமன்றி வேறு யார் சிந்திக்க இயலும்?  தமிழின் …

தொடர்பு கொள்ளுங்கள்!

வணக்கம். 'சிகரம்' இணையத்தளம் விரைவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. ஆகவே தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பதே எமது கொள்கை. ஆகவே உலகம் முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தளமே 'சிகரம்' ஆகும். இது யாருடையதும் தனிப்பட்ட இணையத்தளமல்ல. மக்களின் பங்களிப்புடன் தமிழ் மொழியை உலகமெல்லாம் கொண்டு செல்லப்போகும் ஒரு ஊடகம். ஆகவே உங்கள் அனைவரினதும் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். பின்வரும் முறைகளில் உங்கள் படைப்புகளை எங்கள் அஞ்சல் பெட்டிக்கு அனுப்பி வையுங்கள். தமிழை வளர்க்க பங்களிப்போம் வாரீர்!
நமது இணையத்தளம் # https://sigaram.co/
நமது வலைத்தளம் # http://sigaramco.blogspot.com/
பேஸ்புக் பக்கம் # https://www.facebook.com/SigaramCo-1879019562334897/
பேஸ்புக் தளம் # https://www.facebook.com/profile.php?id=100015435425786
டுவிட்டர் # https://twitter.com/sigaramco
மின்னஞ்சல் # sigaramco@gmail.com
கூகிள் பிளஸ் # https://p…

சிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு!

"சிகரம்" கையெழுத்துப் பிரதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த நேரத்தில் 75 ஆவது பிரதியை வெளியிடும் வேளையில் தூரநோக்கு, இலட்சிய நோக்கு மற்றும் இலக்கு ஆகியன முதன் முதலில் வரையறை செய்யப்பட்டன. 2006 ஆம் ஆண்டு "சிகரம்" கையெழுத்துப் பத்திரிகை தொடங்கிய போதிருந்தே அதனை நிறுவனமாக்கும் கனவையும் கொண்டிருந்தேன். ஆகவே அதற்கான ஒரு படியாக நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் கீழ்வரும் வாசகங்கள் உருவாக்கப்பட்டன. கையெழுத்துப் பத்திரிகை வலைத்தளமாகி இன்று https://www.sigaram.co/ என்னும் முகவரியில் ஒரு இணையத்தளமாக பரிணமிக்கும் இவ்வேளையில் இவ்வாசகங்களை நினைவு கூர்வது அவசியம் என்பதால் இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம். இவற்றில் காலத்தின் தேவை கருதி சில திருத்தங்கள் 2017.06.01 திகதிக்கு முன்பதாக மேற்கொள்ளப்படும். "சிகரம்" தனது பதினோராவது ஆண்டு நிறைவை ஜூன் மாதத்தில் கொண்டாடும் வேளையில் உலக அரங்கில் தமிழுக்கான தனித்துவமிக்க அடையாளமாக மிளிர்வதற்கான பாதையில் புதிய பரிணாமத்தில் "சிகரம்" பயணிக்கவுள்ளது என்பதையிட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். 
எமது தூர நோக்கு…

நாளைய தமிழக முதல்வர் யார்?

வணக்கம்! இன்றைய தமிழக அரசியல் சூழலில் #tn_sasikala #TamilnaduRevolution #RIPADMK #Enforce_President_Rule_in_TN #TnsaysNotoSasikala #TNneedsReElection போன்ற குறிச்சொற்கள் (Hashtags) சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றன. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டது முதல் தமிழகம் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது. ஜெயலலிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் தமிழக மக்கள் அவருக்கு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் தமிழக முதல்வராகும் வாய்ப்பை அளித்தனர். ஆனால் அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மரணப் படுக்கையில் வீழ்ந்தார் ஜெயலலிதா. அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கருதப்பட்டாலும் எதிர்த்துக் கேட்பாரில்லை. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 75 நாட்களும் என்ன நடந்தது என்பது வெளியுலகுக்கு இன்னமும் தெரியாத வகையில் ரகசியம் பேணப்பட்டு வருகிறது. 
மாண்புமிகு தமிழக முதல்வர் திருமதி சசிகலா நடராஜன் வருகிறார்! பராக்! பராக்!! பராக்!!! - என்று கடந்த சில நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் கூறிக் கொண…

SIGARAM.CO - சிகரம் இணையத்தளம் உருவாகிறது!

Image
நலம், நலமறிய ஆவல். 'சிகரம்' இணையத்தளம் உதயமாகிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் 'சிகரம்' இணையத்தளம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. வடிவமைப்புப் பணிகள் கடந்த மாதம் (தை 2048) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துர்முகி வருடம் திருவள்ளுவராண்டு 2048 மாசி மாதம் நான்காம் நாள் (2017.02.16) அன்று வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்து எனது கைகளுக்கு இணையத்தளம் ஒப்படைக்கப்படும். மாசி மாதம் ஏழாம் நாள் (2017.02.19) அன்று உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன். வடிவமைப்புப் பணிகளில் ஏதேனும் தாமதங்கள் நேர்ந்தாலோ அல்லது ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள நேர்ந்தாலோ மாசி மாதம் இருபத்தோராம் நாள் (2017.03.05) உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளம் சமர்ப்பிக்கப்படும். பதிவுகள் இடப்பட்டு முழுமையான பாவனைக்குரிய தளம் வைகாசி மாதம் பதினெட்டாம் நாள் (2017.06.01) அன்று உங்கள் எண்ணங்களுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கக் காத்திருக்கிறது. 'சிகரம்' வலைத்தளத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களாக நீங்கள் நல்க…

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்! - 03

Image
வணக்கம். ஏறு தழுவும் உரிமை மீட்க தொடங்கிய இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழக அரசு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ( பிப் 05 - 2017 ) மிகக் கோலாகலமாக, மிக வெற்றிகரமாக இளைஞர்களுக்கு நன்றி கூறி நடாத்தி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் பாலமேடு மற்றும் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் இவ்வாரம் ( பிப் 09, 10 - 2017 ) ஏறு தழுவும் விளையாட்டு இடம்பெறவுள்ளது. எந்தக்காலத்திலும் ஏறு தழுவும் விளையாட்டு நடாத்தப்படும் நேரத்தில் தமிழக இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் உலகத் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. ஜல்லிக்கட்டு அமைப்போ அல்லது தமிழக அரசோ ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் என்னும் இவ்வெற்றிக்கு உரிமை கோர முடியாது. தமிழக அரசு மக்களின் எண்ணத்தை நிறைவேற்றிய கருவி மட்டுமே. இளைஞர்களின் எழுச்சிக்கு தலைவணங்குகிறேன்!

ஏறு தழுவும் உரிமை மீட்க இலட்சக்கணக்கில் திரண்ட இளைஞர் கூட்டத்தைப் பார்த்து உலகமே வியந்து போனது. பயன் தருமா என்ற ஐயம் இ…

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும்!

அண்மையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நிகழ்வொன்றில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியிருந்தார். நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் ஒரு குழுவாக இணைந்து திரைப்படத்தை உருவாக்கினால் தமிழ் ராக்கர்ஸ் அதை இணையத்தில் வெளியிட்டு இன்புறுகிறார்கள். அவர்களை இன்னும் ஆறு மாதத்தில் கண்டுபிடித்து அழிப்பேன் என சூளுரைத்தார். இன்று தொழிநுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் பல்வேறு தொழிநுட்பங்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளும் மக்களுக்கு புது அனுபவத்தை வழங்கி வரும் நிலையில் மக்கள் இறுவட்டுக்களையும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களையும் நாடிச் செல்வது ஏன்? இதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சரி செய்யாமல் இணையத்தளங்களைக் குறை கூறுவது நியாயமில்லை. 

காரணம் திரையரங்கக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. சாமானியன் நெருங்கக் கூடிய இடத்தில் திரையரங்குகள் இல்லை. ஆக இறுவட்டுக்களும் இவ்வாறான இணையத்தளங்களுமே மக்களின் திரைப்படப் பொழுதுபோக்கிற்கு தீனி போடுகின்றன. வாழ்க தமிழ் ராக்கர்ஸ்! இவர்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். திரைத்துறை ஏழை எளிய மக்களுக்கானதாக்கப்பட வேண்டும்.…