இலங்கை சிந்தும் ரத்தம் உண்மையில் யாருக்கானது ? வரலாறு தரும் புதுக்கோணம் ! | கட்டுரை | கலைஞர் செய்திகள் | ராஜசங்கீதன்

இனப்படுகொலையால் சிவந்த மண் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவந்திருக்கிறது. இயேசு மீது சிதறிய ரத்தம் இலங்கையோடு நிற்காமல் இந்தியப்பெருங்கடலுக்கும் பரவும் வாய்ப்பை அலசுகிறது இக்கட்டுரை. ராஜசங்கீதன் மனித வரலாறை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, போர்க்காலம். இரண்டு, போருக்கு தயாராகும் காலம். சமாதானம் என ஒன்றை மனிதன் அறிந்ததே இல்லை (ஓஷோ). உலகப்போர்கள் திடுமென ஒரு நாளில் தொடங்கி விடுவதில்லை. முதல் உலகப்போர் ஆஸ்த்ரிய ஹங்கேரி நாட்டின் இளவரசர் கொல்லப்பட்டதில் தொடங்கியதாக நாம் படித்திருப்போம். ஆனால், அக்கொலைக்கு முன் இருந்த உலகச்சூழலை அலசி பார்த்தால் முக்கியமான உண்மை தெரியும். அத்தகைய சூழல் எப்போதுமே உலகில் இருந்து வருகிறது என்கிற உண்மை! உலகப்போர்களுக்கான காரணங்கள் என்ன? முதல் உலகப்போருக்கு முன், உலக வணிகத்தில் முதன்மையாக இருந்த நாடு பிரிட்டன். உலகின் பெரும்பான்மையான நாடுகளை அடிமையாக்கி காலனிகளாக வைத்திருந்தது. அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, வணிகத்தையும் பெருக்கி படாடோபமாக கல்லா கட்டிக் கொண்டிருந்தது. ‘சூரியன் மறையாத பேரரசு’ என சொல்லி...