Posts

Showing posts with the label வானொலி

இணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM!

Image
நீங்கள் வானொலிப் பிரியரா? வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயமாகியிருக்கிறது  Style FM !  இலங்கைக்கு பழமையான வானொலி வரலாறு உண்டு. இலங்கை வானொலி என்றால் அந்நாட்களில் தமிழகத்தில் கூட வெகு பிரபலம். இப்போது வரலாறு மட்டுமே இருக்கிறது. வானொலிகள் ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும் என தாங்களாகவே வரையறை செய்துகொண்டு ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகின்றன.  இளம் அறிவிப்பாளர்கள், புதுமையான சிந்தனை என சாதனை படைக்க புறப்பட்டிருக்கிறது  Style FM . இப்போது ஒலித்தெளிவுக்கான பரீட்சார்த்த ஒலிபரப்பு  http://styleno1fm.com/ என்னும் இணைய முகவரி வழியாக இடம்பெற்று வருகிறது.  விரைவில் உத்தியோகபூர்வ ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் புதிய, புதுமையான வானொலிக் கலாச்சாரத்தை Style FM உருவாக்கவுள்ளது.  இது மட்டுமல்ல, Style TVயும் விரைவில் உதயமாகவிருக்கிறது. காதுகளுக்கு மட்டுமல்ல உங்கள் கண்களுக்கும் விருந்தளிக்க Style TV தயாராகி வருகிறது....

சூரியன் பண்பலைக்கு அகவை பதினெட்டு!

Image
வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். இலங்கையின் தமிழ் வானொலிகளில் முக்கியமான இடத்தை வகிக்கும் சூரியன் பண்பலைக்கு ஜூலை-25 இன்று அகவை பதினெட்டு பூர்த்தியாகிறது. எத்தனை போட்டிகள், எத்தனை தடைகள் வந்தாலும் இன்னும் தமிழ் வானொலி ஊடகத் துறையில் நிலைத்திருப்பது ஒரு பெரிய விடயம்தான். நான் கொழும்பில் வானொலிப்பெட்டி ஒன்று வாங்கி மூன்று மாதங்களாகிறது. இதுவரை சூரியன் அலைவரிசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் சூரியன் அளவுக்கு வேறு எந்த வானொலியும் என்னைக் கவர்ந்ததில்லை. 2006 ஆம் ஆண்டு தவறான செய்தியொன்றை ஒலிபரப்பியமைக்காக சூரியன் பண்பலை தடை செய்யப்பட்டு சில மாதங்களுக்குப் பின் தடையில் இருந்து மீண்டது. தடைக்கு முன் மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்த வானொலி தடைக்குப் பின் தன் பொலிவை இழந்தது. பல்வேறு நல்ல நிகழ்ச்சிகள் இல்லாமல் போயின. வெறும் பொழுதுபோக்கு வானொலியாக மாறிப்போனது. தடைக்கு முன் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியாக ஏ.ஆர்.வி.லோஷன் இருந்தார். தடை அமுலில் இருந்த காலத்தில் வெற்றி என்னும் வானொலி உதயமானது. வெற்றி வானொலியின் முகாமையாளராக லோஷன் பொறுப்பேற்றார். லோஷனுக்கு அடுத்த...

உங்கள் உள்ளம் திறந்து நண்பனிடம் சொல்லுங்கள்

Image
இலங்கை மக்களின் மனங் கவர்ந்த "வெற்றி" வானொலியில் திங்கள் - வெள்ளி இரவு 8 மணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகிவரும் 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி பற்றி தான் இந்தப் பதிவு பேசப் போகிறது.  உங்கள் மனதில் கஷ்டமா? துக்கம் தாளாமல் அவதிப் படுகிறீர்களா? என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்வதற்கு நல்ல நண்பன் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா? உடனே 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்படுத்தி உங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சோகத்தை முழுமையாக, சரியாக பகிர்ந்து கொள்வதற்கு இது மிகச்சிறந்ததொரு களமாகத் திகழ்கிறது. ஏனைய வானொலிகளைப் போல ஓரிரு நிமிடங்களுக்குள் உங்கள் துயரங்களை அடக்க வேண்டிய அவசியமில்லை. மனம் திறந்து என்னவெல்லாம் பேச நினைக்கிறீர்களோ அத்தனையையும் பேச  'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி மிகப் பொருத்தமானது. மிக நீண்ட காலமாக ஏராளமான நண்பர்கள் தங்கள் மனதை அடைத்துக் கொண்டிருந்த துக்கங்களைப் பகிர்ந்து ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். நிகழ்ச்சியைக் கேட்டாலோ , தொடர்பு கொண்டு உங்கள் சோகங்களைப் பகிர்ந்து கொண்டாலோ உங்களுக்கும் நிச்சயம் ...