சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?
பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை அதகளப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பாரிய சிக்கல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் ஒளிபரப்பைத் தொடர்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (Film Employees Federation of South India - FEFSI) பிக் பாஸ் இரண்டாம் பருவத்தின் ஒளிபரப்பை விஜய் தொலைக்காட்சி நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது. தென்னிந்திய நிகழ்ச்சிப் படப்பிடிப்புகளில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க அங்கத்தவர்கள் 50%மானோர் மட்டுமேனும் படப்பிடிப்புக் குழுவில் உள்வாங்கப்பட வேண்டும் என்பது நியதி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 75%த்துக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த பருவ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இதே சிக்கல் ஏற்பட்டிருந்தது. அப்போது விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் அவர்களுடன் பேசி பிரச்சினையை சமாளித்திருந்தது. ஆனால் இம்முறை பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது. தங்கள் தரப்பில் இருந்து 50%மான தொழிலாளர்கள் பிக் பாஸ் படப்பிடிப்பில் ஈடுபடுத்தப்படாத பட்சத்தில் ஞாயிறு முதல் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (Film Employees Federation of South India - FEFSI) தெரிவித்துள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் "விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 75%த்துக்கும் அதிகமான தொழிலாளர்களை மும்பையில் இருந்து வரவழைத்திருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது எமது சங்கத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. கடந்த முறையும் இதே பிரச்சினை ஏற்பட்ட போது கமல்ஹாசனுடன் பேசி 50%மான தொழிலாளர்களை ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அதே சிக்கல் இம்முறையும் உருவாகியுள்ளது." என்றார்.
சங்கத்தின் தலைவரான ஆர்.கே. செல்வமணி கருத்து வெளியிடுகையில் "நாம் 100 தொழிலாளர்களுடன் பிக் பாஸ் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அவர்கள் ஒத்துவராத பட்சத்தில் அந்த இடத்திலேயே போராட்டம் செய்வோம்" என்றார்.
பிக் பாஸின் முதல் வார இறுதி படப்பிடிப்புக்கு கமல் வந்திருந்த போது இப்பிரச்சினையால் படப்பிடிப்பு சிறிது தாமதமானது. இவ்வாரமும் அதே போல் சிக்கல் நிலை தோன்றக்கூடும். விஜய் தொலைக்காட்சியும் கமலும் இணைந்து இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் - 02 | வெளியேறப்போவது யார்?
இந்த வாரம் வெளியேற்றத்திற்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபருக்கு 'BIGG BOSS VOTE' என்று கூகுளில் தேடுவதன் மூலமோ அல்லது அலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமோ வாக்களிக்கலாம். குறைவான வாக்குகளைப் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.
வாக்களிப்பு முழு விவரம் இங்கே:
'சிகரம்' இணையத்தள வாசகர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட வாக்களிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளோம். உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் எம்மோடு பகிந்து கொள்ள முடியும். இது உத்தியோக பூர்வ வாக்களிப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிகரத்தில் வாக்களிக்க:
இந்த வெளியேற்றத்தை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள். இந்த பதினாறு போட்டியாளர்களில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார்? யாராச்சும் கேட்டார்களா? நாம கேப்போம்.
உங்க எண்ணங்களை இங்கே சொல்லுங்க:
வாழ்க பிக் பாஸ்! வளர்க பிக் பாஸ்!!
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #கமல்ஹாசன் #பெப்சி #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #VijayTV #KamalHassan #FEFSI #SIGARAMCO #சிகரம்
vakkalikka inku vasathi iruppathu happy, but ithuvarai vote panniyathillai.
ReplyDeleteBigg Boss Season 1 Contestants Tamil
ReplyDelete