பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 09 | சொல்லுங்க எசமான்!

'வாட்ட கருவாட்' என்னும் குத்துப் பாடலைப் போட்டு போட்டியாளர்களை உசுப்பி விட்டு ஒன்பதாம் நாளுக்காய் தயாராகிறார் பிக் பாஸ். பொன்னம்பலம் பெண் போட்டியாளர்களைப் பார்த்து ஏதோ தகாத வார்த்தை சொல்லிவிட்டதாகக் கூறி பெண் போட்டியாளர்கள் கூடிக் கூடிப் பேசுகின்றனர். இது குறித்து கேட்பதற்காக பொன்னம்பலத்தை மும்தாஜ் சந்தித்துப் பேசுகிறார். 

மதியம் இரண்டு மணிக்கு இரண்டாம் வாரத்திற்கான 'Luxury Budget' டாஸ்க் பற்றிய அறிவிப்பை வீட்டின் தலைவி நித்யா வாசிக்கிறார். இப்போட்டிக்கு 1600 புள்ளிகள் வழங்கப்படும். எட்டாம் நாளில் பொருட் கொள்வனவு போட்டியில் ஆண்கள் அணி வெற்றி பெற்றதால் ஆண்கள் வீட்டின் எஜமானர்களாகவும் பெண்கள் வீட்டின் வேலைக்காரர்களாகவும் இருக்க வேண்டும். பெண்கள் அணி ஆண்கள் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து தர வேண்டும். பெண்களுக்கு சாரி மற்றும் டாஸ்க்குக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

இது போன்ற போட்டிகள் கடந்த பருவத்திலும் நடந்தன. ஒரு அணி அதிக ஆட்டம் போட பிக்பாஸ் அறிவிப்பை அப்படியே அணிகளை மாற்றி செய்ய விட்டு கதற வைத்ததெல்லாம் நமக்கு நினைவிருக்கும். இங்க என்ன ஆகப் போகுதோ? கடந்த பருவத்தைப் போலல்லாமல் பிக்பாஸ் முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்களை 'வைத்து செய்ய' ஆரம்பித்திருக்கிறார். அதன் ஒரு பகுதிதான் நித்யா இந்த வாரத் தலைவியாகியிருப்பதும் இந்தப் போட்டியும். 

ஆண் அணியினர் சொல்லும் வேலைகளை பெண் அணியினர் செய்து கொண்டிருக்கின்றனர். இதுவரை பிரச்சினைகள் இல்லை. உணவு ஊட்டி விடுவது, உடுப்பு அயர்ன் பண்ணி தருவது, படுக்கை மடித்து வைப்பது என பலதரப்பட்ட வேலைகள் நடக்கின்றன. வேலைக்காரர்களான பெண்களுக்கு போட்டிகள் நடத்துவதற்கென ஒதுக்கப்பட்ட அறையை பிக்பாஸ் தயார் செய்து வைத்திருக்கிறார். அங்குள்ள கட்டில்களில் மெத்தைகள் இல்லை. மும்தாஜுக்காக மாத்திரம் சாதாரண மெத்தை ஒன்று போடப்பட்டிருக்கிறது. 

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் வசதிகள் அந்த அறையில் இல்லை. இன்றிரவு பெண் போட்டியாளர்கள் அங்கு தான் தங்க வேண்டும் போல. பிக் பாஸ் வீட்டின் வரவேற்பறையில் நித்யா பாலாஜிக்கும் ஐஸ்வர்யா ஷாரிக்குக்கும் அமுக்கி விடுகின்றனர். மாலையில் மும்தாஜும் மமதியும் டேனியிடம் கை, கால் அமுக்கி விடுவது, உணவு ஊட்டுவது போன்ற விடயங்களை செய்ய முடியாது என மறுக்கின்றனர். 

இரவு 08.45க்கு ரகசிய அறைக்கு டேனியலை அழைக்கும் பிக்பாஸ் 'இந்த போட்டியில் சரியாக செயல்படாத ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேலைக்காரர்களின் பெயர்களை ரகசிய அறைக்கு முன்னால் உள்ள ஒளிப்படக் கருவிக்கு முன்னால் நின்று சொல்ல வேண்டும்' என சொல்கிறார். ஆண் அணி போட்டியாளர்கள் கலந்துரையாடி மும்தாஜ் மற்றும் மமதி ஆகியோரின் பெயர்களை சொல்கின்றனர். 



இரவு 09.30க்கு பெண் போட்டியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தரையில் அமர்ந்து இரவு உணவை உண்கின்றனர். பின்னர் பெண் போட்டியாளர்கள் தனியாகக் கூடி மும்தாஜின் நடவடிக்கைகள் குறித்துப் பேசுகின்றனர். ஆண் போட்டியாளர்களுடனும் பெண்கள் அவர் குறித்து விவாதிக்கின்றனர். ஆத்தீ.. பேசி முடிங்கப்பா...

இரவு பதினோரு மணிக்கு வீட்டின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. 'எஜமானர்கள் கொடுக்கும் சாதாரண வேலைகளைக் கூட சில வேலைக்காரர்கள் செய்ய மறுக்கின்றனர். இதன் விளைவு என்னவாக இருக்கும்? முடிவு செய்வது போக்பாஸ் என்று முடிக்கிறார் பிக்பாஸ். அதனைத் தொடர்ந்து பத்தாம் நாளுக்கான சிறிய முன்னோட்ட காணொளியும் காண்பிக்கப்படுகிறது. அதில் ஷாரிக் மும்தாஜிடம் 'நீங்கள் வேலை செய்யாமல் இருந்த நேர அளவுக்கு நீச்சல் குளத்தை சுத்தப்படுத்துங்கள்' எனக் கூறுகிறார். ஆனால் மும்தாஜ் தீர்மானமாக 'முடியாது' என்று மறுக்கிறார். 

இன்னும் எஜமானர் - வேலைக்காரர் போட்டி முடிவடையவில்லை. இன்னும் வீட்டின் வேலைகளுக்கான அணிகளும் பிரிக்கப்படவில்லை. நித்யாவின் தலைமைப் பொறுப்பை வரும் மூன்று நாட்களுக்கு மட்டும் சரியாக செய்தால் போதும். ஏனெனில் சனி, ஞாயிறு கமல் வருவதால் போட்டிகளும் பிரச்சினைகளும் இருக்காது. ஆனால் பிக்பாஸின் மனதில் என்ன திட்டம் இருக்கிறது என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் - 02 | வெளியேறப்போவது யார்? 


இந்த வாரம் வெளியேற்றத்திற்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபருக்கு 'BIGG BOSS VOTE' என்று கூகுளில் தேடுவதன் மூலமோ அல்லது அலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமோ வாக்களிக்கலாம். குறைவான வாக்குகளைப் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். 

வாக்களிப்பு முழு விவரம் இங்கே: 


'சிகரம்' இணையத்தள வாசகர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட வாக்களிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளோம். உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் எம்மோடு பகிந்து கொள்ள முடியும். இது உத்தியோக பூர்வ வாக்களிப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிகரத்தில் வாக்களிக்க: 


இந்த வெளியேற்றத்தை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள். இந்த பதினாறு போட்டியாளர்களில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார்? யாராச்சும் கேட்டார்களா? நாம கேப்போம். 

உங்க எண்ணங்களை இங்கே சொல்லுங்க: 


வாழ்க பிக் பாஸ்! வளர்க பிக் பாஸ்!! 

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்வாக்களிப்பு #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #BiggBossOnlineVote #BiggBossVote #VijayTV #KamalHassan #Maiam #Vishwaroopam2 #SIGARAMCO #சிகரம்

Comments

  1. என்னடா இது பொன்னம்லத்துக்கு வந்த சோதனை

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!