Share it

Thursday, 28 June 2018

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி!

பிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார். அட.. அட...

பத்தாம் நாள் இரவு பிக் பாஸின் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியோட தொடரும்னு போட்டுட்டாய்ங்க. அப்புறம் இன்னிக்கு இரவு 11.30 காட்சியோட திரை விலக்கப்பட்டது. சென்றாயன் நித்யாவையும் பாலாஜியையும் வச்சு பஞ்சாயத்து பண்ணிட்டிருக்கார். உனக்கு ஏனப்பா இந்த நாரதர் வேலை?

பதினோராம் நாள் காலை 07.30க்கு வேலைக்காரர்களான பெண்கள் அலாரம் வச்சு எழுப்பி விடப்படறாங்க. காலை எட்டு மணிக்கு மும்தாஜ் 'அம்மா.. முடியலையே'ன்னு பொலம்பிக்கிட்டிருக்காங்க. அப்புறம் பதினஞ்சு நிமிசத்துல 'எவன்டி உன்ன பெத்தான்'னு கேள்வி கேட்டு எல்லாரையும் எழுப்பி விடறார் நம்ம பாஸ். முதல்ல உங்கள பெத்தது யாருன்னு சொல்லுங்க பாஸ்...

காலைல பாலாஜி அவரோட உடுப்பை அயர்ன் பண்ணிட்டிருக்கார். அவரோட வேலைக்காரியான நித்யா வந்து குடுங்க நா பண்ணித் தாறேன்னு சொல்றார். ஆனா பாலாஜி நீ பக்கத்துல வந்தா செருப்பால அடிப்பேன்னு சொல்றார். எல்லாம் நம்ம சென்றாயன் பண்ண நாரதர் வேலையோட விளைவு. அதனால டேனி நித்யாவை பொன்னம்பலத்துக்கு உதவியாளரா நியமிக்கிறார். ஜனனி பாலாஜியோட புது உதவியாளரா வாறார். 

காலை 11.30க்கு எல்லாரையும் கூப்பிட்டு மாநாடு போடறார் பிக் பாஸ். அவர் என்ன சொன்னார்னா வேலைக்காரர்கள்ல யாரு நல்லா பண்ணலையோ அவங்க பேரை சொல்லணும். அவங்க அடுத்த வார வெளியேற்றத்துக்கு நேரடியா பரிந்துரைக்கப்படுவாங்க. எஜமானர்கள் நித்யாவோட பேரை சொல்றாங்க. அப்புறம் நல்லா வேலை வாங்கின எஜமானரை தேர்ந்தெடுக்க சொல்றார். டேனியோட பெயரை மஹத் சொல்றார். ஆக டேனி அடுத்தவாரம் தப்பினார். 

அதே கையோட பிக்பாஸ் தன்னோட அடுத்த திருவிளையாடலை ஆரம்பிக்கிறார். இந்த நிமிஷத்துல இருந்து பெண்கள் எஜமானிகளாகவும் ஆண்கள் வேலைக்காரர்களாகவும் மாற வேண்டும் என சபிக்கிறார். இதற்கான புள்ளிகள் அதே 1600. இதிலும் ஒழுங்கா வேலை செய்யாதவுங்க வெளியே, நல்லா வேலை வாங்குற எஜமானியம்மா உள்ளே விதிமுறைதான். வேலைக்கார்களை கடுமையா வேலை வாங்கணும்னு குறிப்பு வேற. செத்தாண்டா சேகரு என்கிறார் டேனி. மாப்பு... வச்சிட்டான்யா ஆப்பு...

மதியம் ஒரு மணியளவில் இருக்கும். காலைல தான் நித்யாகூட பஞ்சாயத்து முடிஞ்சது பாலாஜிக்கு. ஆனா பாருங்க இப்போ நித்யாவுக்கு உதவியாளர் பாலாஜியாம். என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா... தம்பி என்னோட உடுப்பை சாயம் போகாம துவைங்க, தம்பி எனக்கு காபி போடுங்கன்னு வேலை வாங்குகிறார் நித்யா. பாலாஜி கொண்டு வந்த காபி சூடா இல்லைன்னு திருப்பி அனுப்புறார் எஜமானியம்மா. நித்யா தன்னோட உடுப்பை அயர்ன் பண்ணுங்கன்னு பாலாஜிகிட்ட குடுக்குறார். ரித்விகா பாலாஜியை கோவப் படாதீங்கன்னு சாந்தப்படுத்துறாங்க. 

எஜமானிகள் வேலைக்காரர்களை வேலை வாங்கிட்டிருக்காங்க. மாலை பாலாஜி தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாக பிக்பாஸிடம் முறையிடுகிறார் நித்யா. பிரச்சினை தீவிரமாக மற்றவர்கள் இருவரையும் சமாதானப்படுத்துகின்றனர். பிக் பாஸ் வராம இருந்திருந்தா கூட தானா சேர்ந்திருப்பாங்க போல. பிக் பாஸ் விவாகரத்து வாங்கித் தராம விடமாட்டார் போலிருக்கே? 

பாலாஜி கெட்ட வார்த்தையில் திட்டியது தொடர்பாக ரித்விகாவும் வைஷ்ணவியும் நித்யாவுடன் பேசிக்கொண்டிருக்கின்றனர். மாலை வைஷ்ணவி காபி கேட்டுக் கொடுக்கப்படாமல் போக ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கப்போய் விவகாரம் பெரிதாகிறது. பாலாஜி நடுவில் ஒரு கெட்ட வார்த்தை சொல்ல நித்யா பாலாஜி இன்று பேசக்கூடாது என்று தண்டனை கொடுக்கிறார். ஆனால் பாலாஜி அதற்கு பதில் சொல்லப் போக பாலாஜிக்கும் நித்யாவுக்கும் இடையில் சண்டை உருவாகிறது. வைஷ்ணவி இது தொடர்பில் பிக் பாஸிடம் முறைப்பாடு செய்கிறார். பின்னர் ரித்விகாவுடனும் பேசுகிறார். மமதி டேனி மற்றும் பாலாஜியுடன் உரையாடுகிறார். ரித்விகா நாம எஜமானர்களா மாறினா போட்டி கலகலப்பா போகும்னு எதிர்பார்த்தோம். ஆனா இவங்க ஏன் இப்படிக் கோபப் படுறாங்க என்று குறைபட்டுக் கொண்டார். நமக்கும் ஆண்கள் வேலைக்காரர்களா ஒழுங்கா நடந்துக்கிட்டா மாதிரி தெரியலை. 

பாலாஜி - நித்யா பிரச்சினையால் யாருக்கும் நிம்மதி இல்லை என்று கண்ணீர் விட்டு அழுகிறார் ரம்யா. உடன் மஹத் மற்றும் ஜனனி இருக்கின்றனர். நீ ரொம்ப நல்ல பொண்ணா இருக்கியேம்மா... 

நேத்து பெண் வேலைக்காரர்கள் எஜமானர்களை ஆடிப்பாடி மகிழ்விச்சாங்க இல்லையா? அது மாதிரி இன்னிக்கும் நடக்கும்னு அறிவிக்கிறார் பிக்பாஸ். பரிசுகளும் உண்டாம். ஆண்களே ஒழுங்கா ஆடி நம்ம மானத்தைக் காப்பாத்திடுங்கப்பா. இந்த அறிவிப்புக்குப் பின்னர் சமையலறையில் வைத்து நித்யாவுக்கும் பாலாஜிக்கும் இடையில் சண்டை உருவாகிறது. நித்யாவைத் தேற்றுகிறார் மும்தாஜ். 

ஆடலும் பாடலும் போட்டி ஆரம்பமாகிறது. டேனி அறிவிப்பாளராகிறார். பொன்னம்பலம் ஒத்த சொல்லால பாட்டுக்கு நடனமாடுகிறார். அடுத்து சென்றாயன் டண்டணக்கா பாட்டுக்கு ஆடுகிறார். அனந்த் வைத்தியநாதன், மஹத் மற்றும் ஷாரிக் நடனமாடுகின்றனர். ஏனய்யா குரல் வித்துவானே நீங்க பேசாம பாடிட்டு போகாம ஏன் இந்த விபரீத முயற்சி? பரவாயில்ல, சுமாராத்தான் ஆடினாங்க. 

பாலாஜி ஒவ்வொரு போட்டியாளரைப் போலவும் நடித்துக் காட்டுகிறார். உடன் டேனி இருக்கிறார். இறுதியாக மஹத் மற்றும் ஷாரிக் மச்சி ஓபன் தி பாட்டில் பாட்டுக்கு ஆடுகின்றனர். ஐநூறு கோடி போச்சேன்னு மஹத் மங்காத்தா நினைப்புல கலங்கியிருப்பார், பாவம். நித்யா விருதுகளை அறிவிக்கிறார். பொன்னம்பலத்துக்கு பரிசு கிடைக்கிறது. அடுத்த பரிசு சென்றாயனுக்கு. அனந்த்துக்கு விசேட பரிசாம். 

இரவு பதினோரு மணிக்கு விளக்குகள் அணைக்கப்படுகின்றன. நேற்று பெண்கள் தங்கிய வேலைக்காரர்களுக்கான அறையில் இன்று ஆண்கள். இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்வாங்களோ? நேற்று வேலைக்காரர்களாக இருந்த பெண்கள் இன்று எஜமானிகளாக இருக்கின்றனர். இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கேள்வியோடு முடிக்கிறார் பிக் பாஸ். இதுக்கு மேல உங்களுக்கு என்ன நடக்கணும்னு எதிர் பாக்குறீங்க பிக் பாஸ்? அப்போ இதை விடப் பெரிய ஏதோ ஒரு திட்டம் உங்க மனசுல இருக்குன்னு எங்களுக்குப் புரியிது. ம்ம்... நடத்துங்க... நடத்துங்க...

பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் - 02 | வெளியேறப்போவது யார்? 


இந்த வாரம் வெளியேற்றத்திற்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபருக்கு 'BIGG BOSS VOTE' என்று கூகுளில் தேடுவதன் மூலமோ அல்லது அலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமோ வாக்களிக்கலாம். குறைவான வாக்குகளைப் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். 

வாக்களிப்பு முழு விவரம் இங்கே: 


'சிகரம்' இணையத்தள வாசகர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட வாக்களிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளோம். உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் எம்மோடு பகிந்து கொள்ள முடியும். இது உத்தியோக பூர்வ வாக்களிப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிகரத்தில் வாக்களிக்க: இந்த வெளியேற்றத்தை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள். இந்த பதினாறு போட்டியாளர்களில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார்? யாராச்சும் கேட்டார்களா? நாம கேப்போம். 

உங்க எண்ணங்களை இங்கே சொல்லுங்க: 


வாழ்க பிக் பாஸ்! வளர்க பிக் பாஸ்!! 

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்வாக்களிப்பு #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #BiggBossOnlineVote #BiggBossVote #VijayTV #KamalHassan #Maiam #Vishwaroopam2 #SIGARAMCO #சிகரம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts