பிக் பாஸ் தமிழ் 02 | ஆறாம் நாள் | கமலும் வெங்காயமும்!

இன்றைய நாள் பிக்பாஸ் கமல்ஹாசனின் வருகையுடன் துவங்கியது. 'அகக் கண்ணின்' வழி இவ்வார நிகழ்வுகளை சுருக்கமாக மீட்டிப் பார்த்தார் கமல். ஆறாவது நாள் வீட்டில் நடந்தவைகளை விரிவாகப் பார்க்கின்றனர். 

ஆறாம் நாள் காலை 08.00 மணிக்கு பிக்பாஸ் இல்லம் ஆடல் பாடலுடன் விடிகிறது. காலை உணவு தாமதமாவது குறித்தும் மமதி சமையல் செய்தது குறித்தும் அனந்த் ஜனனியிடம் விவாதிக்கிறார். 



காலை பதினோரு மணிக்கு ஜனனி ஐஸ்வர்யா அணிந்திருக்கும் ஆடை குறித்து கூற அது விவாதமாக மாற ஜனனி அழுகிறார். பின்னர் ஐஸ்வர்யா வந்து ஜனனியிடம் மன்னிப்புக் கேட்கிறார். 

பகல் 12.30க்குப் பின்னர் காட்சி சடாரென்று மாலை ஆறு மணிக்குத் தாவுகிறது. அடுத்த காட்சி இரவு 10 மணியாகிறது. முக்கியக் காட்சிகள் எதுவும் ஆறாம் நாளில் இல்லை. தொலைக்காட்சியில் காட்டப்படாத காட்சிகளின் தொகுப்பு ஹாட்ஸ்டாரில் வேறாகக் காண்பிக்கப்படுகிறது. 

இரவு பதினோரு மணிக்கு விளக்குகள் அணைக்கப்படுகின்றன. ஷாரிக்கும் ஐஸ்வர்யாவும் முற்றத்தில் தனிமையில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அத்துடன் பிக்பாஸ் மேடை காட்ச்சியளிக்கிறது. அங்கு ரசிகர் ஒருவர் 'சென்றாயனைப் பார்க்கும் போது பரணியைப் போல் நடந்து கொள்வதாகத் தெரிகிறதே?' என்று வினவினார். அதற்கு கமல் 'ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. ஆகவே யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம்' எனக் கூறுகிறார். 

அகம் டிவி வழியே போட்டியாளர்களை கமல் சந்திக்கிறார். அனைவரும் வணக்கம் தெரிவிக்கின்றனர். பாலாஜியிடம் பிக் பாஸ் அனுபவத்தை விசாரிக்கிறார். தொடர்ந்து சக போட்டியாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்கின்றனர். தொடர்ந்து செண்ட்ராயனுடன் ஆங்கிலத்தில் உரையாட அவர் திருதிருவென முழிக்கிறார். சென்ட்ராயன் தவறாக ஆங்கிலம் பேசுவதை கிண்டலடிக்கிறார். 

மும்தாஜும் நித்யாவும் அதிகமாக ஆங்கிலத்தில் பேசுவதாகக் கூறுகிறார். ஷாரிக் மும்தாஜை அம்மாவாகவும் பொன்னம்பலத்தை அப்பாவாகவும் பார்ப்பதாக கூறினார். நடந்த விஷயங்களை பற்றிய விமர்சனம் இங்கிருந்து அங்கு வரும் என கமல் கூறி இடைவேளை விடுகிறார். 

பிக் பாஸ் மேடை. அகக்கண் திறக்கிறது. தலைவராக ஜனனி தன் கடமைகளை சரியாக செய்தாரா என வினவுகிறார். வீட்டில் வேலை செய்வதற்கான அணிகளைப் பிரித்ததைப் பற்றி ஜனனியிடம் கேட்கிறார். 'சொன்னபடி கேளு' டாஸ்க் ஐ சரியாக செய்யாததைப் பற்றியும் கமல் கூறுகிறார். 

வெங்காயப் பிரச்சினையை கமல் எழுப்பினார். பெரியார் பயன்படுத்தும் ஒரு வார்த்தையான வெங்காயம் உங்கள் சமையலறையில் பயன்படாமல் போனது குறித்துப் பேச வேண்டும் என கமல் கூறினார். 



சமையல் குழுவின் தலைவி மும்தாஜிடம் சமையல் அனுபவங்களைப் பற்றி கேட்கிறார். கமல் கையோடு ஒரு கேரட்டை கொண்டு வந்திருக்கிறார். கேரட்டில் ஏன் வெங்காயம் போடவில்லை என மும்தாஜிடம் கேட்க நித்யா பாலாஜி சொன்னதால் வேண்டுமென்றே நித்யா போடவில்லை என்று கூறுகிறார். அது குறித்து மஹத்திடமும் வினவுகிறார். பாலாஜியிடம் வெங்காயப் போர் பற்றி கேட்கிறார். அடுத்து நித்யா விளக்கமளிக்கிறார். விவாதம் நீண்ட நேரம் தொடர்ந்தது. நித்யா தவறை ஒத்துக்கொண்டதுடன் திருத்திக் கொள்வதாகவும் வாக்களித்தார். 

பொன்னம்பலம் போட்டியாளர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டார். கமல் கூறிய கருத்தொன்றினால் உணர்ச்சிவசப்பட்டு வைஷ்ணவி அழுக கமல் காரணம் கேட்டு சமாதனப் படுத்தினார். நித்யா தனிமையை உணர்கிறாரா அல்லது தனிமைப்படுத்தப் படுகிறாரா என்று நித்யாவிடமும் சக போட்டியாளர்களிடமும் கமல் உரையாடினார். இக்கருத்தாடலும் நீண்ட நேரத்திற்குத் தொடர்ந்தது. 

மீண்டும் அகம் டிவி வழியே உள்நுழைந்த போது பஞ்சாயத்து முடிந்தபாடில்லை. நித்யா சக போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார், தங்கள் கருத்தை மதிப்பதில்லை என்ற பலவாறாக கருத்துக்கள் வந்தன. கமல் அவற்றைக் கேட்டு ஆராய்ந்தார். பின்னர் மீண்டும் நாளை சந்திப்போம் எனக் கூறி விடைபெற்றார். 

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #நித்யா #பாலாஜி #வெங்காயம் #கமல்ஹாசன் #குறும்படம் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #ஜனனி #சென்றாயன் #BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #Nithya #Balaji #Bhalajie #OnionWar #KamalHassan #VijayTV #Mumtaz #janani #Senrayan #SIGARAMCO #சிகரம் 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!