ஸ்டெர்லைட் - தூத்துக்குடி - அரசியல்

பதின்மூன்று உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை. தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் கூட்டு வெறியாட்டத்தை உலகமே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது தமிழகத்தில்? மக்கள் ஏன் இவ்வளவு கொந்தளிப்புடன் இருக்கிறார்கள்? அரசியல் வாதிகள் ஏன் மக்களுக்கு எதிராக இவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள்? தமிழகத்தின் பக்கமே திரும்பிப் பார்க்காத மத்திய அரசு தமிழகத்துக்கு இப்போது மட்டும் ஏன் உதவிக்கரம் நீட்டுகிறது? 

ஸ்டெர்லைட் என்னும் ஆலைக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் பெரிய கதை. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு என்று அரச அமைப்புகளின் கூட்டுக்கு முன்னால் இருக்கும் அரசியல் கதை மிகப் பாரியது. 

ஆனால் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மரணத்தைப் பரிசளிப்பது தான் அரசின் அணுகுமுறையா? முதல் நாள் மக்கள் போராட்டத்தின் போது பதினோரு உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன் அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. மரணமடைந்தவர்களின் உடல்களை மறுநாள் வாங்க மறுத்தவர்களின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தி தனது வெறியாட்டத்தை காவல்துறை தொடர்ந்தது. 

இதன் மூலம் மக்களுக்கு அரசு தெரிவிக்கும் செய்தி என்ன? தமிழக மக்களுக்கு தற்போது ஸ்டெர்லைட் மட்டுமல்ல முக்கியமான பிரச்சினை. நீட், காவிரி, எரிவாயு திட்டம் என நீண்ட பட்டியல் தமிழக மக்களுக்கு முன்னால் கிடக்கிறது. இவற்றுக்கெல்லாம் அரசின் ஒரே பதில் மக்களின் மரணம் தான் என்பதா? இது தான் தமிழக அரசின் உறுதியான இறுதியான பதிலா? 

ஆங்கிலேயனுக்கெதிராக ஒன்றுபட்ட தமிழ்ச்சமூகம் ஸ்டெர்லைட்டுக்காக பிரிந்து நிற்பது ஏன்? வணிக நிறுவனங்களின் கைக்கூலிகளாக அரசியல்வாதிகள் மாறிப்போனதன் மாயம் என்ன? மோடியை பின்வாசல் வழியாக ஓடவிட்ட தமிழக மக்களால் தமிழக அரசை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாததன் காரணம் தான் என்ன? 



மக்களின் இப்போதைய கோபம் இனிவரப்போகும் தேர்தல்களில் பிரதிபலிக்குமா? அல்லது இனியும் இருக்கும் இருபெரும் மக்கள் விரோதக் கட்சிகளிடம் தான் ஆட்சியை ஒப்படைக்கப் போகிறோமா? 

நம் கண்முன்னே ஆயிரமாயிரம் கேள்விகள் பதில்களின்றி காத்துக்கிடக்கின்றன. அவற்றுக்கெல்லாம் மக்களின் பதில் என்ன? மக்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கு எதிராகவும் அரசை எதிர்த்து எதிர்த்து களைப்படைந்து போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? மக்களின் நலனை மதிக்காத எந்த அரசும் மக்களை ஆட்சி செய்ய அருகதையற்றது என்று நாம் பதிலுரைக்க வேண்டாமா? 

மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவர்களின் கைக்கூலிகளுக்கும் மக்கள் தகுந்த பதிலடி வழங்க வேண்டும். மக்கள் வழங்கும் பதிலடி அரசியல்வாதிகளால் காலத்துக்கும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்கும் முன்னுதாரணமாக மக்களின் தீர்ப்பு இருக்க வேண்டும். செய்வீர்களா? மக்களே, செய்வீர்களா?

#ஸ்டெர்லைட் #ஸ்டெர்லைட்டைதடைசெய் #தூத்துக்குடி #பழனிச்சாமிபதவிவிலகு #Sterlite #BanSterlite #SterliteProtest #SaveThoothukudi #BanTNGovernment #EncounterEdappadi #ThoothukudiShooting #ThoothukudiPoliceFiring

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!