Saturday, 10 November 2012

இன்னும் சொல்வேன் - 02

அனைவருக்கும் வணக்கம்!

அன்பின் வரையரைகளுக்குட்பட்டு நாம் நடப்பது சரியா, தவறா? அவ்வாறு அன்பின் வரையரைகளுக்குட்பட்டு நடப்பதால் நமது சுயம் இழக்கப் படுதல் சரிதானா? இது தான் நாம் 'இன்னும் சொல்வேன் - 01' இல் முன் வைத்த கேள்வி. இது தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. நாம் அன்பு செலுத்துபவருக்காக நாம் எதையும் இழப்பதில் தவறில்லை என்பதே பலரின் பதிலாக இருந்தது. ஆனால் ஒருவர் சற்றே மாறுபட்ட கருத்தொன்றினை முன்வைத்திருந்தார்.

"அடிமைப்படுத்தல் அன்பு கிடையாது. ஆளுமை. உண்மையான அன்பான உள்ளம் அடக்கியாள விருப்பப்படாது. நட்பிலும் நம் குணமே வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கலாம் . அதனை கட்டாயமாக்கக் கூடாது. எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்வதே நல்ல நட்பு. தீய வழிகளில் செல்லாமல் இருக்க நாம் அறிவுரை கூறலாம்.திருத்தலாம்.திருந்தலாம். அதுவே எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போடத்தேவை இல்லை. நண்பர் ஒருவர் முக நூலில் பகிர்ந்து கொண்டது
" உறவுகளுடன் பொருந்திப்போக என்னை மாற்றி அமைத்துக்கொண்டே இருந்ததில் என் சுயம் என்னைக் கடந்து சென்றதைக்கூட கவனிக்க இயலவில்லை."
நாம் மாற்றிக் கொண்ட சுயத்திற்கு யாரும் பின் மதிப்பளிப்பதும் இல்லை" - இக்கருத்தின் சொந்தக்காரர் 'நிகழ்காலம்' வலைப்பதிவர் எழில்.

நம் திருக்குறள் கூட இப்படிச் சொல்கிறதே!

அதிகாரம்: அன்புடைமை, குறள்: 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர். (சாலமன் பாப்பையா உரை)

ஆகவே பொருள், உடல் என அனைத்தையும் நம் அன்புக்குரியவர்க்காய் தந்துவிட்ட பின்பு 'சுயம்' தொலைப்பதில் தவறில்லையே? ஆனால் இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் இன்னொருவருக்காய் மாற வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ அல்லது நிபந்தனைகளின் பேரிலோ 'சுயம்' இழக்கப்படுமாயின் அதில் துளியும் அன்பு இருக்க வாய்ப்பில்லை. உண்மையான அன்பின் பேரில் இன்னொருவருக்காய் 'சுயம்' இழக்கப்படும் போது அங்கே பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை. ஏனெனில் உண்மையான அன்பு என்பதே ஆழமான புரிதலின் வெளிப்பாடு தானே?

ஆழமான புரிதலை விளக்க பின்வரும் குறள் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்.
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் சுயம் என்பது தொலைந்து போக வாய்ப்பில்லை அல்லவா? ஆகவே 'சுயம்' என்பதன் இருப்பில் 'புரிந்துணர்வு' முதன்மை தாக்கம் செலுத்துகிறது.நீங்கள் உங்கள் சுயம் தொலைந்து போவதாக உணர்வீர்களானால் அங்கே புரிதல் அற்றுப்போய்விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் ஆழமான புரிதல் இருக்கும். ஆழமான புரிதல் இருக்கும் இடத்தில் 'சுயம்' வாழும்.

இப்போது சொல்லுங்கள் 'அன்பின் வரையறைகளுக்குட்பட்டு நடப்பது சரியா? தவறா?'

குறிப்பு :
நமது தொடர் பதிவின் ஓர் அங்கமாகவும் விடுபட்டுப் போன கட்டுரைத் தொடரின் தொடர்ச்சியாகவும் இப்பதிவு அமைகிறது. தொடர் பதிவு எண் : 46/6

மீண்டும் நாளை மற்றுமொரு பதிவுடன் சந்திப்போம். அதுவரை உங்கள் பொன்னான கருத்துரைகளை பகிர்ந்து செல்லுங்கள்.

அன்புடன்,
சிகரம்பாரதி.

3 comments:

  1. இரண்டு குறளுக்கும் அருமையாக விளக்கி சொல்லி விட்டீர்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. திருக்குறள் தனபாலனை மிஞ்சுடுவிங்க போல......தொடருங்கள் தொடர்கிறேன்...காமெடி கும்மி மூலம் உங்களை அறிந்து கொண்டேன் (விளம்பரம்தான்)

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் நண்பா...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...