Tuesday, 6 November 2012

46/2

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மீண்டும் சிகரம் பாரதியின் மனம் கனிந்த வணக்கங்கள். 

பயணம் - 04


நேற்றைய பதிவின் தொடக்கத்திலேயே இலங்கை வானொலி அலைவரிசைகளின் மறுசீரமைப்பு குறித்துப் பேசியிருந்தோம். அது தொடர்பில் மேலதிகமான - மிக முக்கியமான விடயமொன்றை இங்கு பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கிறேன். இது முக நூலில் பகிரப்பட்ட ஒரு விடயம். இலங்கையின் பிரபல - முன்னணி வானொலிகளுள் ஒன்றான வெற்றி வானொலி தொடர்பான விடயம் இது. முதலில் விடயத்தை வாசியுங்கள். விளக்கத்தை பின்னால் தருகிறேன்.

"வெற்றி ஊழியர்களுக்கு (தமிழ்) 2 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை நிர்வாகம். கொடுக்கின்ற சம்பளத்தையும் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழியர்களுக்காகக் குரல்கொடுத்த லோஷன் அண்ணாவுக்கும் அதே சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்கள். எனவே, உங்கள் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்கமுடியாத நிலை. முழுமையாக தமிழுக்குப் புறக்கணிப்பு நடக்கிறது. 
யாழ்ப்பாணத்துக்கான அலைவரிசை பல மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. ஏன் என்று கேட்ட அறிவிப்பாளர்கள் நிர்வாகத்தால் மோசமாக நடத்ப்பட்டார்கள். இணைய வழி ஒலிபரப்பும் நிறுத்தப்பட்டு தற்போது வெளியில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியோடு அதனைச் செய்கிறார்கள் அறிவிப்பாளர்கள்.
வயிற்றிலடிக்கும் கொடுமை. சம்பளம் கேட்டவர்களை வீட்டுக்குப் போ என்று விரட்டிய கொடூரம் நடந்திருக்கிறது. இதைவிட அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு (அறிவிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்கள் உட்பட) நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லையாம். என்ன ஒரு கொடுமை? தட்டிக்கேட்க ஆளில்லாததால் நடக்கும் கொடுமைகள்! நீங்கள் கேளுங்களேன் இங்கே: +94112303000, +94112304387, +94112304386"
நவம்பர்-01 இலிருந்து, அதாவது வானொலி அலைவரிசைகள் மறுசீரமைக்கப் பட்டதில் இருந்து வெற்றி வானொலியில் நிகழ்ச்சி ஒலிபரப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இன்று வரை நிகழ்ச்சிகள் மீள ஆரம்பிக்கப் படவேயில்லை. மேற்படி பிரச்சினை காரணமாகவே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் படவில்லையோ, என்னவோ? மேலும் இதனை உறுதிப் படுத்தும் விதமாக வெற்றி வானொலியின் பிரபல அறிவிப்பாளரும் இவ்வாரம் வெற்றி வானொலியில் இருந்து தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பவருமான ஹிஷாம் முஹமட் தனது முக நூல் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

"எல்லாம் வழமைக்கு திரும்பி மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது. உங்க மூஞ்சிகள எங்க வைச்சிருப்பீங்கன்னு பார்ப்போம் . காத்திருக்கிறேன் நீங்கள் அன்போடு வழங்கிய பட்டங்களை உரியவர்களுக்கு கொடுத்துவிட்டு கேள்விகளுக்கும் பதில் சொல்ல. இன்னும் ஒரு சில வாரம்தான் முடியுமானவரை முயற்சி செய்யுங்கள். என்னை அவமானப்படுத்தலாம் இழிவுபடுத்தலாம் ஆனால் என்னோட நம்பிக்கையை நெருங்கவும் முடியாது. தயவுசெய்து இனவாதத்தை மட்டும் தூண்டாதீர்கள. #காலத்தின் விளையாட்டு"

விடயம் புரிந்தவர்கள் சரி. புரியாதவர்கள் தானாகப் புரிந்து கொள்ளுங்கள். தீர்ப்பு மக்கள் மற்றும் காலத்தின் கைகளுக்கு ஒப்படைக்கப் படுகிறது.

பயணம் - 05

முக நூலில் படித்த ஒரு சுவாரஷ்யமான கதை.

கடவுளிடமிருந்து ஒரு கால்

அதிகாலை நேரம்
அரைத் தூக்கத்தில்
சிணுங்கியது செல்போன்...

பேசுவது யாரெனப்
பார்க்க விருப்பமின்றி
எடுத்துக் காதில் வைத்தேன்.

’’ஹலோ, யாரு?’’ என்றேன்

எதிர்முனையில் ஒரு புதுக்குரல்!

’‘கடவுள் பேசுகிறேன்’’
என்று பதில் வந்த்து.

’’என்னது, கடவுளா?’’

’’ஆமாம், கடவுள்தான் பேசுகிறேன்”

குழப்பத்தோடு
எண்களைப் பார்த்தேன்
0000000000
என்று அனைத்தும் பூஜ்யமாக
பத்து இலக்கங்கள்!
இது எந்த செல்போன்
நிறுவனத்தின் எண்கள்?

தூக்கம் கலைந்தது...

’’சரி இப்ப உங்களுக்கு
என்ன வேண்டும்?’’

’’ எனக்கு எதுவும் வேண்டாம்.
அவசரமாக ஒரு
நல்ல சேதியைச் சொல்லவே
உன்னை அழைத்தேன்’’

’’சொல்லுங்கள்’’

’’நீ மறுபடி பிறக்கப் போகிறாய்’’

’’என்னது?’’

எனக்குள் மேலும் குழப்பம்.

’’மறுபடி பிறக்க வேண்டுமெனில் நான்
மரணித்திருக்க வேண்டுமே?’’

‘’அதைச் சொல்லவே இந்த அழைப்பு!’’

‘’என்னது?’’

‘’ நீ இறந்து விட்டாய்’’

’’இல்லையே, உங்களோடு
பேசிக்கொண்டுதானே இருக்கிறேன்?’’

‘’இனி என்னோடு மட்டும்தான் நீ
பேசிக் கொண்டிருக்கப் போகிறாய்’’

அடக்கடவுளே,
இது என்ன கொடுமை?

’’எப்போது நான் இறந்தேன்?’’

’’சில நொடிகளுக்கு முன்னால்தான்’’

’’எழுபது வயதுவரை ஆயுள் என்று
என் ஜாகதம் கணிக்கப்பட்டிருந்ததே?
இப்போது நாற்பதுதானே ஆகிறது?’’

’’ அது என்னால் கணிக்கப்படவில்லையே!’’

’’அதுசரி, ஒருபாவமும் செய்யாமல்
எப்படி நிகழ்ந்தது என் மரணம்?
பாவத்தின் சம்பளம்தானே மரணம்?’’

’’அந்த வாசகத்தையும் நான் எழுதவில்லையே!’’

‘’சரி நான் மறுபடி
எங்கே, எப்போது, யாராய்
பிறக்கப் போகிறேன்?’’

’’அதுவும் இன்னும்
முடிவு செய்யப்படவில்லை.’’

’’ பிறகு?’’

‘’காத்திருப்போர் பட்டியலில்
உன் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது’’

’’அதுவரை நான் என்ன செய்வது?’’

‘’என்னோடு பேசிக் கொண்டிரு’’

’’உங்களுக்கு அவ்வளவு நேரமிருக்கிறதா?’’

‘’ நேரமிருக்கும்போது பேசுகிறேன்’’

’’எனக்குப் பேசவேண்டுமென தோன்றினால்?’’

’’ஒரு மிஸ்டு கால் கொடு,
நான் அழைப்பேன்.
இப்போது விடைபெறுகிறேன்’’

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதிகாலைக் குளிரிலும்
வியர்த்துக் கொட்டியது எனக்கு.

தூக்கம் முற்றிலும் கலைய
என் அறையை சுற்றுமுற்றும் பார்க்கிறேன்.

அது கனவும் இல்லை;
கடவுள் சொன்னது போல நான்
சாகவும் இல்லை.

பிறகு எங்கிருந்து அந்த அழைப்பு?
பேசியது யார்?

திரும்ப அதே 0000000000
எண்ணுக்கு நானே
ரீ டயல் செய்தேன்!

’ப்ளீஸ் செக் த நம்பர்’
என்று பதில் வருமென
எதிர்பார்த்தேன்.

ஆனால் -

’பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்’
என்ற பாடல்
காலர் ட்யூனாகக் கேட்டது!

****************************
பயணங்கள் தொடரும். அதுவரை உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்?

3 comments:

  1. நல்ல கதை... முடிவில் நல்ல பாடல்... ரசிக்க வைத்தது...

    ReplyDelete
  2. கவிதை போல அழகான கதை
    அர்த்தங்கள் பல புதைந்துள்ளன கதையில்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்? #BB WEEK 01 NOMINATION

பிக் பாஸ் தமிழ்  பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01  18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...