மேதகு சிகரம்பாரதி, இலக்கம் 46/1, வலைத்தள வீதி, பிளாக்கர் நகரம், உலக அழிவு.
அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் சிகரம் பாரதியின் மனம் கனிந்த வணக்கங்கள்.
தலைப்பைப் பார்த்ததுமே 'இவனுக்கு கிறுக்கு பிடிச்சுப் போச்சு'ன்னு சிலர்
நெனச்சிருப்பீங்க. இன்னும் சிலர் மண்டையப் போட்டுப்
பிச்சிக்கிட்டிருப்பீங்க. 'இவன் என்ன சொல்ல வர்றான்னே தெரியலையே?'. பெருசா
ஒன்னும் இல்லீங்க. நாமளும் சும்மா ஏதாச்சும் மொக்கைப் பதிவு போடலாமேன்னு
பார்த்தேன். அதோட விபரீத விளைவு தான் இது. என்ன செய்ய? வந்தது
வந்துட்டீங்க, கொஞ்சம் கடைசி வரைக்கும் வாசிச்சிட்டு ஏதாச்சும்
சொல்லிட்டுப் போறது? என்ன நா சொல்றது?
அது சரி, முதல்ல தலைப்புக்கு விளக்கம் சொல்லுன்னு நீங்கல்லாம்
கேப்பீங்கன்னு தெரியும். நானே சொல்லிர்றேன். மேதகு சிகரம் பாரதி அடியேன்
தான். அடுத்து 46/1 வந்து இன்னிக்கு தேதில இருந்து டிசம்பர் -21 க்கு 46
நாள் இருக்கு. அந்த 46 நாளும் போடப்போற பதிவோட முதல் பதிவு இது.
மத்ததெல்லாம் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். ஆனா தொடர்ச்சியா 46 பதிவு
போட முடியுமான்னு தெரியல. பார்க்கலாம். மொக்கைன்னு மட்டும் இல்லாம பயனுள்ள
விஷயங்களையும் இங்க பகிர்ந்துக்கலாம்னு எதிர்பாக்குறேன்.
போகலாமா??????????????
பயணம் - 01
நான் முதல்ல பேச நினைச்ச விஷயம் இலங்கையில் 2012-நவம்பர்-01 முதல்
மேற்கொள்ளப் பட்டிருக்கும் வானொலி அலைவரிசைகளின் மறுசீரமைப்பு நடவடிக்கை
பத்தினது. இது நாள் வரைக்கும் இலங்கையில் ஒரு வானொலிக்கு 5 அலைவரிசைகள் வரை
இருந்தன. அதாவது பிரதேசத்திற்கு பிரதேசம் வானொலி அலைவரிசைகள் வேறுபடும்.
இதனால் புதிய வானொலிகளுக்கு அலைவரிசைகளை ஒதுக்க முடியாமை, அதிகளவான
ஒலிபரப்புக் கோபுரங்களின் பயன்பாடு மற்றும் அலைவரிசைத் தெளிவின்மை போன்ற
பல்வேறு சிக்கல்கள் காணப் பட்டன. இதன் காரணமாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழு ஒவ்வொரு வானொலிக்கும் குறைந்தது ஒரு அலைவரிசை
மற்றும் கூடியது இரு அலைவரிசைகளை நாடு முழுவதும் ஒலிபரப்பாகக் கூடிய
வகையில் முதலாம் திகதியில் இருந்து மாற்றியமைத்தது.
இது பற்றிய பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரை சாதகமான
நடவடிக்கையாகவே அமைந்தது. இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதிற்குமான ஒரே
ஒளிபரப்புக் கோபுரத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மேற்படி ஆணைக்குழு
ஈடுபட்டு வருகிறது. தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கிறதோ இல்லையோ,
இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசு
முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. "இலங்கை - ஆசியாவின் ஆச்சரியம்"
பயணம் - 02
நம்ம பிளாக்கர்ல இப்போ என்ன நடக்குதுன்னே தெரியல. சமீப காலமா எனக்கு தமிழ்ல
ஆக்கங்கள உருவாக்க முடியல. மொழி மாற்றத் தெரிவு முடக்கப் பட்டிருக்கு.
காரணம் தெரியல. அதால நான் http://www.google.com/transliterate/Tamil
இணையத் தளத்துக்கு போய்ட்டு எழுதி பிரதி பண்ணி ஒட்ட வேண்டியிருக்கு.
மேலும், என்னோட வலைப்பதிவு நண்பர் ஒருத்தர் தான் எழுதி சேமிச்சு வச்சிருந்த
ஆக்கம் திடீர்னு மறைஞ்சு போயிருச்சின்னு சொன்னார். ஒரு வேளை இதெல்லாம் உலக
அழிவுக்கான ஒரு அறிகுறியா இருக்குமோ????????????????
பயணம்-03
பயணம், பயணம்னு பேசிக்கிட்டே இருந்ததுல பயணத்தைப் பத்தியும் ஒரு வரி
எழுதிட்டுப் போகலாமேன்னு தோணிச்சு. உங்களுக்கு எதுல பயணம் பண்றது ரொம்பப்
பிடிக்கும்?
எனக்கு ரயில் பயணம் தான் ரொம்பப் பிடிக்கும்.
நகர்ப்புறத்திலிருந்து ஒதுங்கி நல்ல இயற்கையான பிரதேசங்களினூடாக ரயிலில்
பயணம் செய்வதைப் போல மகிழ்ச்சி வேறு ஏதேனும் உண்டா என்ன? ம்ம்ம்ம்.......
என்னதான் மனசுக்குள்ள ஆசைன்னு இருந்தாலும் வருசம் பூராவும் வேலை வேலைன்னு
வாழ்க்கை படுத்துறதால இம்மாதிரியான வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைக்கும்.
கிடைக்கும் நேரங்களில் முழுமையாக அனுபவித்து விடுவோமே? அந்த அனுபவத்தை
மீட்டுப் பாக்குறதே ஒரோ சுகமான அனுபவம் தான் இல்லையா?
இப்படிக்கு,
அன்புடன் சிகரம்பாரதி.
இப்படிக்கு,
அன்புடன் சிகரம்பாரதி.
இன்றுதான் உங்கள் தளம் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கும் படி அருமையாக உள்ளது இனி தொடர்ந்து வருவேன்
ReplyDeleteபதிவை நேற்றே படித்துவிட்டேன், தங்கள் கமென்ட் பாக்ஸ் திறக்காததால் லேட். பார்க்கலாம் உலகம் அழியுமா இல்லையா என்று??? நீங்க என்ன சொல்றீங்க பாரதி.... இது பற்றி. எனக்கு பேருந்து பயணங்களே பிடிக்கும்... ரயில் பயணம் எல்லாம் துணையுடன் செல்ல வேண்டும், தனியா நம்மள மாதிரி ஒன்டிக்கட்டைக்கு பேருந்து தான் சரி...
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டி
பயணங்கள் மனதுக்கு இதமானது இல்லையா...!
ReplyDelete