Share it

Monday, 9 September 2013

தேன் கிண்ணம் - பாரப்பா பழனியப்பா.......அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

எத்தனை தான் புதிது புதிதாக பாடல்கள் வந்து கொண்டே இருந்தாலும் பழைய பாடல்கள் என்றால் அதற்கு நிகர் சொல்ல ஏதுமில்லை. ஆனாலும் புதிய பாடல்களிலும் பல அருமையான பாடல்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் எப்படியோ நான் அறியேன். ஆனால் நான் பழைய பாடல்களின் பரம ரசிகன்.


இந்தப் பதிவானது தமிழ்த் திரைப்படப் பாடல்களை ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தேடிப்பார்க்கும் ஒரு பதிவாகும். கருப்பொருளாக பின்வரும் பாடலடிகளில் இருந்து ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

                                                                                                 (பாரப்பா )
(திரைப்படம் : பெரிய இடத்துப் பெண் )


ஆம். உள்ளம் பற்றி வெளிவந்துள்ள பாடல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வரிகளை இங்கே பார்க்கப் போகிறோம். பாடல் வரிகளைத் தொடர்ந்து பாடல் வரிகளுக்கான எனது விளக்கமும் இடம்பெறும். முடிந்தவரை பாடல்களுக்கான YOUTUBE இணைப்பை வழங்கியிருக்கிறேன்.

                                                                    (திரைப்படம் : ஆசை முகம்)
அடுத்தவர் எப்படிப் போனால் என்ன நம் வேலை நடந்தால் சரி என்றிருப்பவர்களைத்தான் இன்றைய சமூக சூழலில் நாம் காண்கிறோம். வசதி வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்ட மனமானது மனிதத் தன்மையை இழந்து விடுகிறது. விலங்குகளுக்குள் இருக்கிற ஒற்றுமை கூட நமக்குள் இல்லையே? மனம் போன போக்கிலெல்லாம் போகாது உங்கள் இலட்சியப் பாதையைத் தீர்க்கமாக தெரிந்து கொண்டு அந்த வழியில் சென்றால் என்றும் வெற்றி நிச்சயமே.

[2] "கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
..............................................
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."
                                                                          (திரைப்படம் : பணம் படைத்தவன்)
ஏதோ பிறந்தோம், எப்படியோ வாழ்ந்தோம், காலம் முடிந்ததும் இறந்தோம் என்றில்லாமல் நமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு வாழ வேண்டும். நம்மைப் போல் வாழ்ந்தவர் யாரும் இல்லை என்று ஊர் மெச்சும் வகையில் வாழ்வது தான் உண்மையான வாழ்வு. நம்மில் சிலருக்கு கொஞ்சம் புகழைக் கண்டவுடனேயே கடந்து வந்த பாதை மறந்து போய் விடும். அவ்வாறானவர்கள் இருந்த தடம் தெரியாமல் அழிந்து போன வரலாறுகள் உலகில் நிறையவே உள்ளன. ஆகவே லட்சியப் பிடிப்புடன் வாழ்ந்து இவனல்லவா மனிதன் என்ற புகழோடு மரித்துப் போக வேண்டும். ஒரு மனிதனுக்கு மறுபிறப்பென்று ஒன்று உண்டென்றால் அது சாதனையால் வருவதாக மட்டுமே இருக்க முடியும் என்பது திண்ணம்.

[3] "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா [2]
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா.[அஞ்சி] நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா.ஹேய்.... [நெஞ்சம்] . உண்டு உண்டு என்று நம்பி காலை எடு. இங்கு உன்னை விட்டால் பூமி ஏது , கவலை விடு. [உண்டு] ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து. [ரெண்டில்] அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து......
                                                                        [திரைப்படம் : என் அண்ணன் ]
நம்முடைய செயல்கள் அனைத்திற்குமே உள்ளம் தானே காரணம்? நெஞ்சில் துணிவிருந்தால் எது தான் நடக்காது? நேர்மையான உள்ளம் கொண்டவர்களுக்கு ஆயிரம் சோதனை வரலாம். ஆனால் முடிவில் வெல்லப் போவதும் அவர்களே. உதாரணத்திற்கு ஒரு திருக்குறளை எடுத்துக் கொள்வோம்.
#பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் 
நீங்கா நிலனாள் பவற்கு 
சாலமன் பாப்பையா உரை:
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

இக்குறளானது நாட்டை ஆள்பவர்களுக்கு மட்டுமல்ல, தன்னைத் தானே ஆள்பவர்களுக்கும் பொருந்தும். தன்னை ஆளத் தெரிந்தவன்தானே நாட்டையும் ஆளத் தகுதி உடையவன் ஆகிறான்? உள்ளத்தில் துணிவிருந்தால் உண்மைக்கு அழிவில்லை.

இறுதியாக தலைப்புப் பாடலையும் ஒரு கை பார்த்து விடுவோமே?

[4]
                                                                                                 (பாரப்பா )
(திரைப்படம் : பெரிய இடத்துப் பெண் )
எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான அருமையான பாடல். பெண்களுக்கு அறிவுரை சொல்வது போல அமைந்துள்ளது. நகரமயமாகிப் போன தற்கால வாழ்க்கையில் மேற்கண்ட நான்கு வரிகளும் கச்சிதமாகப் பொருந்துகின்றன.

என்ன வாசகர்களே, தொகுப்பு நன்றாக இருக்கிறதா? மூன்று பாடல்களே ஆனாலும், மூன்றும் முத்துக்கள் என்பதை மறுப்பார் யாருமில்லை. முடிந்தவரை தொகுத்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த வேறு பாடல்கள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் சந்திக்கும் வரை,
அன்புடன்,
சிகரம்பாரதி.

14 comments:

 1. அனைத்து பாடல்களும் கருத்துள்ள அருமையான பாடல்கள்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தனபாலன். முதல் ஆளாக வந்து உற்சாக கருத்து வழங்கியமைக்கு நன்றிகள். இதே போல பல்வேறு கருப்பொருள்களில் தேன்கிண்ணம் எதிர்காலத்தில் வரும். நன்றி வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

   Delete
 2. அனைத்தும் கருத்துள்ள பாடல்கள்... நல்ல தேடல்... வாழ்த்துக்கள் பாரதி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழா. அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. இன்னும் இருக்கிறது, காத்திருங்கள்.

   Delete
 3. இந்த எல்லா பாடல்களும் எனக்கும் பிடித்த பாடல்கள் தான்...

  ReplyDelete
  Replies
  1. எனக்குமே மிகப் பிடித்த பாடல்கள் இவை. உங்கள் விருப்பப் பாடல்களை தொகுத்துத் தரக் கிடைத்தது என் பாக்கியம்.

   Delete
 4. அன்பின் பாரதி

  பழைய திரைப்படப் பாடல்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சீனா. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். உங்கள் ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.மீண்டும் சந்திப்போம்.

   Delete
 5. தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் அனைத்தும்
  தமிழகத்தில் அனைவர் மனத்தையும்
  நிரந்தரமாகக் கொள்ளைகொண்டவை
  பகிர்வுக்கும் அருமையான விளக்கத்திற்கும்
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரமணி. நம்ம பக்கம் உங்களைக் காணோமேன்னு பார்த்தேன். வருகைக்கும் அழகான ரசனைக்கும் நன்றிகள். தமிழகத்தை மட்டுமல்ல, தமிழர்கள் யாவரையும் கவர்ந்த வரிகளல்லவா? மீண்டும் சந்திப்போம்.

   Delete
 6. பழைய பாடல்களில் நல்ல கருத்து இருந்தது;பாடல் வரிகள் புரிந்தன;இனிமையான மெட்டு இருந்தது;இப்போதோ?!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் குட்டன். புதுவரவு நல்வரவாகட்டும். உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. எல்லாம் நாகரீகக் கோலம். மீண்டும் சந்திப்போம்.

   Delete
 7. பழைய பாட்டு கேட்கிறவர்களை வித்தியாசமாக வெறித்துப்பார்க்கும் தலைமுறையில் வாழ்கிறோம் :( இக்கால பாடல்களில் அத்திப்பூத்தாற்போல சிற்சில பாடல்களே நன்றாக உள்ளன..
  நல்ல தொகுப்பு !!
  //எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு? எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு?//
  ஒரு வாரம் முன்பு சாலைப்பயணம் செய்து கொண்டிருந்த போது பார்த்த ஒரு காட்சியை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
  ஒரு குருவி அடி பட்டு கீழே விழுந்து கிடந்தது,எங்கள் கார் அருகே செல்ல செல்ல.. குருவிக்கூட்டம் விரைந்து வந்து அடிப்பட்டு கிடந்த அந்த குருவியை தூக்கிக்கொண்டு பறந்து சென்றன... நான் சிலிர்த்துவிட்டேன் "யாருடா சொன்னது இதுங்களுக்கு 5 அறிவு என்று" என முணுமுணுத்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் விஜயன். அழகான கருத்துக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றிகள். ஆறறிவு என்பதற்குள் எத்தனை எத்தனை பேதங்கள்? மனிதர்கள் என்று தான் உணரப் போகிறார்களோ தெரியவில்லை. கேட்கக் கேட்க இனிப்பவை தானே பழைய பாடல்கள்? மீண்டும் ஒரு தொகுப்புடன் சந்திப்போம் தோழரே.

   Delete

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts