நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதியா?

வணக்கம் வாசகர்களே!

இந்த வாரம் புதன் கிழமையன்று [2013-09-11] மாலை மூன்று மணி. எமது தொழிற்சாலையின் தேநீர் இடைவேளை. தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த தருணம். அந்த இடத்தில் தமிழன் என்ற வகையில் நான் மட்டுமே இருக்க, மீதமிருந்த நான்கு பேரும் சிங்களவர்கள். அப்போது அவ்விடத்தில் நவநீதம்பிள்ளை குறித்த பேச்சொன்று எழுந்தது.

 

அப்போது கருத்துரைத்த 60 வயது மதிக்கத்தக்க சக அலுவலர் கூறிய கருத்து "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி" என்பதாகும். மேலும் அவர் கூறுகையில் "நவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதி. அதனால் தான் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். தமிழர்களுக்கு அரசு எத்தனை சலுகைகளை வழங்கியுள்ளது? சொகுசு பேரூந்துகள், தொலைக்காட்சித் திரையுடன் கூடிய புகையிரதம், பாதை, கல்வி என பல விடயங்களை அரசு வழங்கி வருகிறது. புலிகள் காலத்தில் கஷ்டப்பட்ட மக்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இவ்வளவு செய்தும் மக்கள் ஏன் நவநீதம்பிள்ளைக்கு ஆதரவாக பேசுகிறார்கள்? மக்கள் இன்னும் உண்மையை உணராதவர்களாக உள்ளனர்." - என்று குறிப்பிட்டார். நான் பதிலேதும் சொல்லாமல் மௌனம் சாதித்தேன்.

 

இதிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புலனாகிறது. தமிழர்களின் அரசியல் ரீதியான தேவை என்ன என்பதை சிங்கள மக்களில் பெரும்பாலானோர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உட்கட்டமைப்பு வசதிகளால் மட்டும் ஒரு இனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும் என எதிர்பார்க்கின்றனர். அல்லது அரசு வழங்குகின்றவற்றை மட்டும் வாயை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு போக வேண்டும் என நினைக்கின்றனர். சக மக்களின் மனங்களையும் புரிந்து கொள்ளும் போது தான் நாட்டில் சமாதானம் பிறக்கும். நவநீதம்பிள்ளை வருவதாலோ அல்லது ஐ.நா சபைத் தீர்மானங்களாலோ இலங்கையில் ஒரு போதும் சமாதானம் வரப்போவதில்லை.

இதனை சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலக நாடுகளும் சரி, ஐ.நா சபையும் சரி தனக்கு இலாபமில்லாதவிடத்து எந்தவொரு நாட்டுப் பிரச்சினைக்குள்ளும் தலையிடப் போவதில்லை. ஆகவே அவர்களின் தேவைக்காக நமது நாட்டை தாரை வார்த்துக் கொடுக்க முயலாமல் சக மக்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வழி வகைகளை ஆராய வேண்டும். இல்லையேல் இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இலங்கையில் சமாதானம் ஏற்படப் போவதில்லை.

http://www.tea.co.uk/images/sri_lanka_map.jpg 

எனது முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த விடயமொன்றை இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். மேலேயுள்ள வரைபடத்தில் இலங்கையில் தமிழர்கள் பரவலாக வாழும் பிரதேசத்தை மாகாண ரீதியாகக் குறிப்பிட முடியும். வடமாகாணம் (North Province), கிழக்குமாகாணம் (Eastern Province), மத்திய மாகாணம் (Central Province), சப்ரகமுவ மாகாணம் (Sabragamuwa Province) மற்றும் ஊவா மாகாணம் (Uva Province) ஆகியவையே தமிழர்கள் பரவலாக வாழும் மாகாணங்களாகும். 

தமிழர்களுக்கான சுயாட்சி கோரி தமிழீழ விடுதலைப் புலிகள் போராடிய போது வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை மட்டுமே "தமிழீழம்" என்று வரையறுத்தனர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கையில் இருநூறு வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் "மலையக மக்கள்" வாழும் "மலையகம்" என்று அழைக்கப் படக் கூடிய மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களை தங்கள் தமிழீழ எல்லைக்குள் இணைக்கவோ அல்லது அங்கு வாழும் தமது சகோதரத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவோ இல்லை. சர்வதேசமும் சரி, சக தமிழ் மக்களும் சரி, இலங்கை அரசும் சரி மலையக மக்கள் மீது பாராமுகமாகவே இருந்து வருகின்றனர்.

தாங்கள் இணைத்துக் கொள்ளப் படவில்லை என்பதற்காக மலையக மக்கள் ஈழத் தமிழர்களை வெறுக்கவோ எதிர்க்கவோ செய்யவில்லை. காரணம், மனிதாபிமானம். ஆனால் இன்றளவிலும் ஈழத் தமிழர்கள் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த சரித்திரம் எங்குமே இல்லை. மலையக மக்களும் ஈழ மக்களும் ஒன்றிணையும் போது தான் உண்மையான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்பது திண்ணம்.

இப்படிக்கு,
சிகரம்பாரதி.

Comments

 1. Soon after the Independence State Tamil leaders
  asked Tamil Leaders not to bother about them. They said that India will look after their right
  and privileges.They never wish to associate them
  with Srilankan Tamils. This is history you should
  know the facts.
  M.Baraneetharan.

  ReplyDelete
 2. உங்க கட்டுரையில் உள்ள யதார்த்தா உண்மைகள்
  //சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலக நாடுகளும் சரி, ஐ.நா சபையும் சரி தனக்கு இலாபமில்லாதவிடத்து எந்தவொரு நாட்டுப் பிரச்சினைக்குள்ளும் தலையிடப் போவதில்லை. ஆகவே அவர்களின் தேவைக்காக நமது நாட்டை தாரை வார்த்துக் கொடுக்க முயலாமல் சக மக்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வழி வகைகளை ஆராய வேண்டும். இல்லையேல் இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இலங்கையில் சமாதானம் ஏற்படப் போவதில்லை.//
  அவ்வளவும் உண்மைகள்.
  //தமிழர்களுக்கான சுயாட்சி கோரி தமிழீழ விடுதலைப் புலிகள் போராடிய போது வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை மட்டுமே "தமிழீழம்" என்று வரையறுத்தனர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கையில் இருநூறு வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் "மலையக மக்கள்" வாழும் "மலையகம்" என்று அழைக்கப் படக் கூடிய மத்திய மாகாணம்இ சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களை தங்கள் தமிழீழ எல்லைக்குள் இணைக்கவோ அல்லது அங்கு வாழும் தமது சகோதரத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவோ இல்லை. //

  தமிழீழ விடுதலைப் புலிகள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவழி மக்களை இணைக்காமவிட்டது தமிழ்புலிகளதுமனிதாபிமானான நடவடிக்கடையா எடுத்துக்குங்க தப்பினாதாலே நன்றி சொல்லுங்க புலிகள் தாங்கள் சேர்த்துக்கிட்ட தமிழங்களையெல்லாம் எப்படி கொடுமைபடுத்தினாங்க என்று உங்களுக்கு தெரியவில்லை.அந்தவகையில் புலிகளிடம் இருந்து தப்பினோம் என்று சந்தோஷபடுங்க சகோ

  ReplyDelete

Post a comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!

பாஸ் என்கிற பிக்பாஸ் - 002