திருத்தப்படுமா இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விடயங்களே தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றிருப்பது வேறு ஒரு பிரச்சினை.
அது CAA எனப்படும் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் தான்.
1955ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே தற்போதைய போராட்டங்களுக்குக் காரணமாகியுள்ளன.
![]() |
Image Credit: Respective Owners only |
2019ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
இந்த சட்டத்தின் கீழ், குறித்த நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது.
இதன் அடிப்படையில், இந்திய அடிப்படை அரசியலமைப்புக்கு எதிராக இந்த சட்டம் இருப்பதாகத் தெரிவித்து இந்திய மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக மாநிலத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் புத்துயிர் பெற்றிருக்கின்றன.
கிராம மக்களையே அதிகமாகக் கொண்டிருக்கும் இந்தியாவில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் அல்லது தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனெனில், பிறப்புச் சான்றிதழ் உட்பட முறையான ஆவணங்கள் இன்றிய நிலையில் வசித்துவருபவர்களுக்கு தமது குடியுரிமையை உறுதிப்படுத்தமுடியாத நிலை ஏற்படும்.
தமது அடிப்படை ஆவணங்களையே உறுதிப்படுத்த ஆர்வம் காட்டாத இவர்கள், தமது குடியுரிமையை இழக்க நேர்ந்தால், அதற்கு எதிராக தீர்ப்பாயங்களிலும் நீதிமன்றங்களிலும் முறையிட்டு மீண்டும் எவ்வாறு தமது குடியுரிமையைப் பெற்றுக் கொள்வார்கள் என்கிற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய, அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய நாடுகள் திறமையான வெளிநாட்டு மக்களை தமது மக்களாக ஏற்று தமது நாட்டை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால் ஆசிய, ஆபிரிக்க மற்றும் ஏனைய நாடுகள் இந்தக் கொள்கையை முற்றாக மறுத்து, காலம் காலமாக வாழ்பவர்கள் மட்டுமே தமது பிரஜைகள் என ஏற்றுக் கொள்கின்றன.
எனினும், இந்திய குடியுரிமைச் சட்டம் மதச்சார்பின்மை மற்றும் சமத்துவம் உள்ளிட்ட இந்திய அரசியமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானதாக இருப்பதாக பல தரப்பினராலும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இன, மத, கல்வி, வயது மற்றும் பாலினம் என எந்த பேதமும் இல்லாமல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் களமிறங்கியிருக்கிறார்கள்.
ஆகவே, இந்த இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இந்திய அரசு காலத்திற்கேற்ற திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முக்கிய குறிப்பு:
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: >>> வலை ஓலை
இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
திருத்தப்படுமா இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்?
https://newsigaram.blogspot.com/2020/02/CAA-will-amend-or-not.html
எந்த விசயத்திலும் மக்களின் எதிர்ப்பார்ப்பு போல் நடந்தால் சரி...
ReplyDeleteநிச்சயமாக. அதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
Deleteஅடுத்தடுத்த விளம்பரங்கள் காரணமாக படிக்க சற்று சிரமமாக உள்ளது.
ReplyDeleteதன்னியக்க விளம்பரங்கள் இயக்கப்பட்டுள்ளன. சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள் ஐயா.
Deleteநல்ல பகிர்வு.
ReplyDeleteவலை ஓலை - நல்ல முயற்சி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நன்றி.
Deleteதங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.