நுட்பம் - தொழிநுட்பம் - 01
வணக்கம் நண்பர்களே! தொழிநுட்ப உலகில் நொடிக்கு நொடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. அந்த மாற்றங்களை உங்கள் கைவிரல் நுனியில் தொகுத்துத் தருவதே இந்தத் தொடர். வாங்க போகலாம்!
கணினி
மைக்ரோசாப்ட் ஆபிஸ் - 2019 இந்த வருட இறுதியில் வெளியிடப்படவுள்ளது. இந்த பதிப்பானது விண்டோஸ் 10 கணினிகளில் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னமும் உலகிலுள்ள 30 வீதத்திற்கும் அதிகமான கணினிகள் விண்டோஸ் XP பதிப்பிலேயே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 10க்கான பயனாளர்களை அதிகரிக்கவே மைக்ரோசாப்ட் ஆபிஸ் - 2019 செயலி விண்டோஸ் 10இல் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
திறன்பேசி
வாட்ஸப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வாட்ஸப்பில் நீங்கள் தவறுதலாக அழித்த படங்கள், ஒளிப்பதிவுகளை மீண்டும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. வாட்ஸப் பயனாளர்களின் படங்கள், ஒளிப்பதிவுகளை தனது நினைவகத்தில் நிரந்தரமாக சேமிக்கவுள்ளது. இதன் மூலம் அழிக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்க முடியும். இந்த வசதி வாட்ஸப் 2.8.113 பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புது வரவு
புது வரவாக திறன்பேசி சந்தைக்கு வரவுள்ளது எக்ஸியோமி MI 6. தற்போது திறன்பேசி சந்தையில் எக்ஸியோமி முக்கியத்துவமிக்க இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் எக்ஸியோமியின் புது வரவுகள் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையிலேயே எக்ஸியோமி MI 6 வெளியீடு குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எக்ஸியோமியின் MIUI பயனர் இடைமுகத்துடன் வெளியாகவுள்ள MI 6 திறன்பேசி 20MP தற்பட ஒளிப்பட வசதியைக் (Selfie camera) கொண்டிருக்கும். பிங்க், சிவப்பு, கோல்டு, நீலம் மற்றும் கறுப்பு வண்ணங்களில் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 25 இல் MI 6 திறன்பேசி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#சிகரம் #தொழிநுட்பம் #மைக்ரோசாப்ட்ஆபிஸ் #எக்ஸியோமி #வாட்ஸப் #SIGARAM #MSOFFICE2019 #XIAOMI #MI6 #WHATSAPP #TECHSIGARAM
தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDeleteதொடருங்கள்
தொடருங்கள் .. தொடர்கிறேன்
ReplyDeleteவணக்கம்,
ReplyDeletewww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
பயனுள்ள தகவல்கள். நன்றி
ReplyDelete