மழைக்காகத்தான் மேகம்!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இது எம்.எஸ்.வி சிறப்புப் பதிவு.
எம்.எஸ்.வி - இந்த மூன்றெழுத்துக்கு இன்றளவிலும் தமிழ் இசையுலகில் தனி மதிப்பு உண்டு. தமிழ்த் திரையுலகை வளர்த்தெடுத்ததில் இவருக்கு தனிப் பங்குண்டு. இவரது பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவை. இசையமைப்பாளர் , பாடகர் , நடிகர் எனப் பல அவதாரம் எடுத்தவர் எம்.எஸ்.வி.
24.06.1928 இல் கேரளா, பாலக்காடு, எலப்புள்ளி கிராமத்தில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தார் எம்.எஸ்.வி என்னும் மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன். கருப்பு வெள்ளை முதல் கலக்கல் வண்ணத்திரை வரை தன் இசையால் முத்திரை பதித்தவர் எம்.எஸ்.வி. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.
இவரது இசையைப் போலவே கணீரென்ற குரலும் பாடலை மெய்மறந்து ரசிக்க வைத்தது என்றால் மிகையில்லை. 'பாசமலர்' திரைப்படத்தில் துவங்கி பல படங்களில் தன் சொந்தக் குரலில் பாடி அசத்தியுள்ளார் எம்.எஸ்.வி.
'சங்கமம்' திரைப்படத்தில் 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்' என்ற பாடல் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கக் கூடும். அந்தப் பாடலில் மணிவண்னணனின் நடிப்பில் எம்.எஸ்.வி-யை நான் கண்டேன். ஒருவேளை எம்.எஸ்.வி அவர்களே நடித்திருந்தாலும் கூட மணிவண்ணனின் நடிப்பில் கொஞ்சம் கூட மாறாமல் அச்சு அசலாய் அப்படியே தான் நடித்திருப்பார் என்றே நான் நம்புகிறேன்.
அந்தப் பாடலின்
'மழைக்காகத்தான் மேகம்! அட, கலைக்காகத்தான் நீயும்!
உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா . . .
நீ சொந்தக்காலிலே நில்லு! தலை சுற்றும் பூமியை வெல்லு!
இது அப்பன் சொல்லிய சொல்லு! மகனே வா . . . மகனே வா . . .'
என்ற வரிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தவை.
பாடலின் இசையும் குரலும் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காதவை. 'தில்லானா மோகனாம்பாள்' திரைக்கதையை 'சங்கமம்' திரைக்கதை நினைவுபடுத்திச் செல்கிறது. உங்களுக்கு வாய்ப்பமைந்தால் இந்தப் பாடலை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன்!
இதோ பாடல் வரிகள் உங்களுக்காக:
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்!
(மழைத்துளி)
ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க!
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க!
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும்!
(மழைத்துளி)
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி)
மழைக்காகத்தான் மேகம்! அட, கலைக்காகத்தான் நீயும்!
உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா . . .
நீ சொந்தக்காலிலே நில்லு! தலை சுற்றும் பூமியை வெல்லு!
இது அப்பன் சொல்லிய சொல்லு! மகனே வா . . . மகனே வா . . .
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்!
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!
புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது!
போர்க்களம் நீ புகும்போது - முள்
தைப்பது கால் அறியாது!
மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது?
கலைக்கொரு தோல்வி கிடையாது; கிடையாது!
(ஆலாலகண்டா)
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்!
#எம்எஸ்வி #எம்எஸ்விஸ்வநாதன் #சங்கமம் #MSV #MSVISVANATHAN #SANGAMAM #MANIVANNAN #TAMILSONGS
அருமையான பாட்டு...
ReplyDeleteகணீர் குரலுக்கு சொந்தக்காரர். காதல் மன்னனில் அவரது நடிப்பு பிடிக்கும்.
கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய இசைமேதை