ஐ.பி.எல்-2018 | டெல்லியை வென்று முதலிடத்தைப் பிடித்தது பஞ்சாப்!

வணக்கம் நண்பர்களே. ஐபிஎல் 2018 மிக மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்கள் கடந்து மூன்றாவது வாரத்திலும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது. 

நேற்று ஐபிஎல்2018 இன் 22வது போட்டியாக இடம்பெற்ற கிங்ஸ் இலவன் பஞ்சாப் எதிர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி மிக விறுவிறுப்பாக இடம்பெற்றது. 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்வு செய்தது. ட்ரென்ட் போல்ட் 02 விக்கெட்டுகள், அவேஷ் கான் 02 விக்கெட்டுகள் மற்றும் லியாம் ப்ளன்கட் 03 விக்கெட்டுகள் என சிறப்பாகப் பந்து வீசிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி கிங்ஸ் இலவன் பஞ்சாப்பை 143 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. 



லோகேஷ் ராகுல் 23, மாயங்க் அகர்வால் 21, கருண் நாயர் 34 மற்றும் டேவிட் மில்லர் 26 என வீரர்களின் பங்களிப்புடன் 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி பெற்றுக்கொண்டது. 

144 என்னும் இலகுவான ஓட்ட இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் 139 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்தி வெற்றியைத் தனதாக்கியது. 

அங்கித் ராஜ்பூட் 02, சரண் 01, அன்றூ டை 02 மற்றும் முஜிபுர் ரஹ்மான் 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டெல்லி சார்பில் ஷ்ரேயஸ் அய்யர் 57 ஓட்டங்களைப் பெற்றபோதும் அணி தோல்வியைத் தழுவியது. 

இந்த வெற்றியைத் தொடர்ந்து கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 06 போட்டிகளில் 05 வெற்றி 01  தோல்வியுடன் 10 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி 06 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

இன்று (24) மும்பை இந்தியன்ஸ் எதிர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியும் நாளை (25) சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன. 

#ஐபிஎல் #ஐபிஎல்2018 #கிரிக்கெட் #விளையாட்டு #சிகரம் #IPL #IPL2018 #VIVOIPL #CRICKET #DDvKXIP #MIvSRH #CSKvRCB

Comments

Popular posts from this blog

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!