டுவிட்டரில் மோடிக்கு எதிர்ப்பு - உலக அளவில் பிரபலம் - #GoBackModi - டுவிட்டர் @newsigaram - 10
தமிழகத்தில் தற்போது காவேரிப் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினை ஆகியவற்றுக்கான போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமிருக்கின்றன. இந்த நிலையில் இன்று 12.04.2018 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருந்தார். அவருக்கான எதிர்ப்பு பல்வேறு போராட்ட வடிவங்களில் காட்டப்பட்டாலும் ட்விட்டரில் #GoBackModi என்னும் குறிச்சொல்லில் காட்டப்பட்ட எதிர்ப்பு உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இதுவரை ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான டுவிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில டுவிட்டுகள் உங்களுக்காக இதோ:
போரில் வெல்வதை விட மக்கள் மனங்களை வெல்லவேண்டும் - மோடி— ரஹீம் கஸாலி (@rahimgazali) April 12, 2018
எத்தனை கோடி மக்களின் மனங்களை மோடி வென்றிருக்கிறார் என்று கறுப்புகொடி மூலம் தெரிந்துகொண்டநாள் இன்று.#GoBackModi
மோடிக்கு இப்படி ஒரு வரவேற்பை மோடி சுத்தி பார்த்த எந்த நாடும் குடுத்துருக்காது . இப்ப தெரியுதா இது யார் நாடுன்னு ?? #GobackModi— மோசக்காரன் (@mosakkara) April 12, 2018
எத்தனை கலவரம்! உயிரிழப்பு! அவமானம்!— SKP KARUNA (@skpkaruna) April 12, 2018
40 ஆண்டுகால சட்டப்போராட்டம். குறைபட்ட தீர்ப்பு! எனினும் இறுதித்தீர்ப்பு. நடைமுறைப்படுத்த வேண்டிய பிரதமருக்கோ அப்பட்டமான மாற்றாந்தாய் மனப்பான்மை.
தன்மானத் தமிழகமே! நிமிர்ந்து நில்.
கருப்பை அணி! எதிர்க்கத் துணி. #GoBackModi #TNFight4Cauvery
தமிழக மக்களின் முன்னேற்றத்தை சூரையாடிய மோடியே திருப்பி போ#GoBackCulpritModi #BlackFlagProtest pic.twitter.com/sTKpUJ8Bv9— நித்யா (@nithya_shre) April 12, 2018
வானத்தில் பறப்பது கருப்பு பலூன் அல்ல, காவிகளின் மானம்❤️ #GoBackModi— VASUGI BHASKAR (@bhaskarvasugi) April 12, 2018
சமூகவலைதளங்கள் மூலமாக தன்னை பிரபலபடுத்திக்கொண்ட மோடியை,மோடி அலையை இன்று ஒரேநாளில் அடித்து நொறுக்கி உலக அளவில்,மோடி ஒரு #பாசிசவாதி என்று உலகத்திற்கு உணர்த்திய தமிழர்கள்🔥🔥💪#GoBackModi pic.twitter.com/wHzXHQedgj— *நச்செள்ளை* (@Shankarfocuss) April 12, 2018
— மெத்த வீட்டான் (@HAJAMYDEENNKS) April 12, 2018
இனி தமிழகம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த பிரதமர் மோடி என்று வரலாறு பேசும்#GoBackModi— தமிழினி (@Tamil_Zhinii) April 12, 2018
ஏம்பா! இதுலாம் ஒரு சாதனையாப்பா?! மொமண்ட்
ReplyDelete