ஐ.பி.எல் - வாரம் 01 - விறுவிறுப்பு ஆரம்பம்!

வணக்கம் நண்பர்களே! ஐ.பி.எல் பதினோராம் பருவ இருபது-இருபது போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதல் வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் எட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த எட்டுப் போட்டிகளிலும் முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி களத்தடுப்பையே தேர்வு செய்துள்ளது. இந்த எட்டுப் போட்டிகளில் ஏழு போட்டிகளிலும் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றி பெற்றுள்ளது.




மழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒரே ஒரு போட்டியில் மட்டும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணி டக்வர்த் லுவிஸ் முறையில் வெற்றி பெற்றது. இந்த பருவத்தைத் துவக்கி வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியையும் பெற்றுள்ளது.

தமிழகம், சென்னையில் இடம்பெறவிருந்த போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்களே இதன் காரணமாகும்.

இரண்டு மாத கிரிக்கெட் திருவிழாவில் ஒரு வாரம் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு இடம்பெறவுள்ளது.

ஒவ்வொரு போட்டியும் இறுதிப்பந்து வரையில் எல்லையற்ற ரசனையை போட்டி ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. எட்டு அணிகளில் கிண்ணம் யாருக்கு என்பதை இப்போதே முடிவு செய்ய முடியாது. ஆனால் ரசனைக்கு மாபெரும் விருந்து காத்திருப்பது மட்டும் நிச்சயம். 

ஐ.பி.எல்லின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சுமார் பதினேழாயிரம் கோடி இந்திய ரூபாய்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு உரித்தாக்கியுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் HD1 ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஹாட் ஸ்டார் செயலியிலும் hotstar.com இணையத்தளத்திலும் ரசிகர்கள் நேரலையாகக் கண்டு களிக்கலாம்.

இன்னுமின்னும் ஐ.பி.எல் தொடர் குறித்த தகவல்களைத் தொடர்ச்சியாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறோம். இணைந்திருங்கள்.

#IPL #IPL2018 #VIVOIPL #IPLLIVE #STARSPORTS #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!