கூகுளிடம் ஆங்கிலம் கற்கலாம் வாங்க!
கூகுள் உலகின் முன்னணி தேடல் தளமாக இருக்கிறது. மைக்ரோசாப்ட்டின் பிங் மற்றும் பிரபல தேடல் தளமான யாஹு என எத்தனை தேடல் இயந்திரங்கள் காலத்துக்குக் காலம் தோன்றினாலும் கூகுளை மிஞச யாராலும் முடியவில்லை.
கணினி இயங்குதள உலகை மைக்ரோசாப்ட் கைப்பற்றியுள்ளது. ஆப்பிள் மற்றும் கூகுள் போட்டியில் இருந்தாலும் வெற்றி மைக்ரோசாப்ட்டுக்குத்தான். திறன்பேசி இயங்கு தள உலகில் கூகுளின் ஆன்ட்ராய்டும் ஆப்பிளும் போட்டியில் உள்ளன. ஏழைகளின் ஆப்பிளான ஆன்ட்ராய்டு தான் இதில் வெற்றியாளர். மைக்ரோசாப்ட் திறன்பேசி உலகில் கால்பதித்து தோற்றுப் போய் திரும்பி விட்டது.
திறன்பேசி தயாரிப்பு உலகிலும் கூகுள் தற்போது களமிறங்கியுள்ளது. ஆன்ட்ராய்டு உலகுக்கு அவசியமான செயலிகளையும் கூகுள் தற்போது வழங்கி வருகிறது. சரி, இதுவெல்லாம் இருக்கட்டும்.
கூகுளின் அடுத்த அறிமுகம் பற்றித்தான் இப்போது பேசப் போகிறோம். நமக்கு பாடசாலைக் காலத்திலும் சரி, தொழில் புரியும் காலத்திலும் சரி நமக்கு கசப்பான ஒரு விடயம் என்றால் அது ஆங்கிலம் தான். ஆங்கிலம் என்றால் எழுதப் பயம், வாசிக்கப் பயம், பேசப் பயம்... எல்லாம் பய மயம்...
இந்த பயத்தைப் போக்க நாம் பெரிதாக எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. நேரமின்மை இதற்கு முக்கியக் காரணம். ஆனால் நமக்கு என்னதான் நேரமில்லாமல் இருந்தாலும் நாம் நமது திறன்பேசியுடன் நேரம் செலவழிக்கத் தவறுவதில்லை. இதைச் சரியாக உணர்ந்து கொண்ட கூகுள் ஆங்கிலம் கற்க எளிமையான வழியை நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
நீங்கள் உங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியைத் திறந்து 'Google word coach' என தேடுங்கள். உடனே உங்கள் தேடல் முடிவுகளுக்கு மேலாக ஆங்கிலத்தில் ஒரு கேள்விகளும் இரண்டு பதில்களும் காண்பிக்கப்படும். இரண்டே இரண்டு பதில்கள் தான். ஆகவே நமக்கு அதிக சிரமம் இருக்கப் போவதில்லை. பதில் தெரியாவிட்டாலும் முடிந்தவரை கேள்வியை விளங்கிக் கொண்டு இரண்டில் ஒரு பதிலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சரி அல்லது பிழையை அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் கேள்விகளுக்கு வழங்கும் பதில்களுக்கு புள்ளிகளும் வழங்கப் படுகின்றன. தொடர்ந்து விளையாடுவதன் மூலம் அடுத்தடுத்த சுற்றுக்களை நோக்கி முன்செல்ல முடியும்.
மேலும் நீங்கள் ஏதேனும் ஆங்கிலச் சொல்லுக்கான பொருளை ஆங்கிலத்திலேயே தேடும் போது அதற்கான கூகுளின் விசேட தேடல் முடிவுக்குக் கீழாக சொல் விளையாட்டு காண்பிக்கப்படுகிறது. நீங்கள் சொல்லுக்கான பொருளைத் தேடிச் செல்லும் போது அந்தச் சொல்லில் இருந்தே கூகுளின் சொல் விளையாட்டு ஆரம்பிப்பது சிறப்பு.
ஆங்கிலம் கற்பதற்காக நீங்கள் விசேடமாக எந்தவொரு செயலியையும் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ரொம்ப மெனக்கெடவும் தேவையில்லை. இலகுவான வழி இது. முக்கியமான தத்துவத்தையும் இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். அது 'தேடினால் கிடைக்கும்' என்பது தான்.
#Google #GoogleWordCoach #Chrome #கூகுள் #கூகிள் #LearnEnglish #ஆங்கிலம்கற்போம் #சிகரம்
நல்லதொரு தகவல் நண்பரே .நான் இதுவரையில் பார்த்ததில்லை .
ReplyDeleteநன்றி
சிறந்த வழிகாட்டல்
ReplyDeleteநம்மாளுங்க பயன்படுத்த வேண்டும்