Sunday, 2 December 2012

பிரிவொன்றே முடிவல்ல

பிரிவு என்பது முடிவல்ல 
நம் வாழ்க்கை நாவலின் 
இன்னொரு அத்தியாயமே 
சோகங்கள் சுகமாகும் 
இன்பங்கள் வரமாகும் 
நினைவுகளே நம் உறவாகும் 
பிரிவு தரும் அனுபவங்களை 
உறவு தருவதில்லை 


முதன்முதலாய் நீ எழுதி
நான் ரசித்த கவிதை 
முதன்முதலாய் எனக்காய் நீ 
அழுத ஒரு துளி கண்ணீர் 
முதன்முதலாய் நாம் போட்ட 
சின்னச் சண்டை 
முதன்முதலாய் என் வீட்டில் நீ 
கால் வைத்த அந்த மணித்துளிகள் 
இவை எவையுமே என் 
நினைவுகளிலிருந்து 
கடைசிவரை நீங்கப்போவதில்லை 
ஆனால் முதன்முதலாய் 
நமக்கு ஓர் பிரிவு வந்தபோது 
நீ கடைசியாய் பார்த்த அந்த 
ஓராயிரம் அர்த்தமுள்ள 
மௌனப்பார்வை 
என்னுள்ளே பசுமரத்தாணியாய் 
புதைந்து போய்விட்டது 


அந்த ஓரிரு வினாடிகளில் 
எம் கண்கள் 
நமக்கே தெரியாமல் 
ஏதேதோ பேசியதை
நீ அறிவாயா ?
பிரிவுகள் நிரந்தரமல்ல 
இனிமைகளே வாழ்வுமல்ல 
அன்பு என்றும் தீர்வதுமல்ல 
எனக்கு நீ 
தாயாய்...... சகோதரியாய் 
தோழியாய் இருந்த 
அந்த கணங்களை 
எங்கனம் மறப்பேன் 


இனியும் கவி சொல்ல 
நான் விரும்பவில்லை 
ஏனெனில் 
நாம் பூவுலகில் 
எங்கோ ஓர் மூலையில் 
மீண்டும் சந்திக்கும் 
வேளை சிந்தும் வினாடிகளில் 
மௌனிக்கும் தருணங்களை 
ஒளியேற்ற 
வார்த்தைகளை இப்போதிருந்தே 
சேமிக்க வேண்டும் 


பிரிவொன்றே முடிவல்ல - ஆதலால் 
நீயும் நானும் 
வழிமீது விழி வைத்து - நம் 
அன்பு மீது நம்பிக்கை வைத்து 
பிரிவுகள் சந்திப்புக்களாகப் போகும் 
அந்த நாளுக்காய் 
அந்த தருணத்திற்காய் 
இனிமை தரும் கனவுகளோடு 
காத்திருப்போம் தோழி!

இக்கவிதை இலங்கையின் பிரபல வார இதழான "மித்திரன்" வார இதழில் 20.04.2008அன்று வெளியானது. எனது நண்பியின் தளமான "கவீதாவின் பக்கங்கள்" இல் இன்று ஒரு கவிதை வெளியாகியுள்ளது. அதையும் உங்கள் பார்வைக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
சிகரம்பாரதி.

7 comments:

 1. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அழகான கவிதை....
  அந்தப் பருவ நட்புக்கு ஏது இணை....
  ரசித்தேன்

  ReplyDelete
 3. அன்பு உண்மையானால் பிரிவென்பது பொய்யே.அழகான வரிகள் !

  ReplyDelete
 4. நட்பின் ஆழம் குறித்த கவிதை என் நட்பையும் யோசிக்கச் செய்தது. பிரிவு பொய்தான் நண்பரே... எத்தனை தூரத்திலிருந்தாலும் ஆண்டுகளானாலும் மனதின் ஓரத்தில் குடிகொண்டுதான் இருக்கும்.

  ReplyDelete
 5. நட்பிற்கு பிரிவே இல்லை என்பதை
  எவ்வளவு ஆழமாக சொல்லியிருக்கிறீர்கள்.. வியக்கிறேன் பாரதி.

  ReplyDelete
 6. இதுபோன்ற உணர்வை நான் வாழ்வில் உணர்ந்துள்ளேன். நன்றி.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete
 7. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...