குவியம்
வணக்கம் அன்பு ரசிகர்களே! கிரிக்கெட்டைப் போலவே திரையுலகத்தையும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் - தொடர் நாடகங்கள். ஒரு நாள் கிரிக்கெட் - திரைப்படம். இருபது-20 போட்டி - குறுந்திரைப்படங்கள். இன்று நான் பேசப்போவது ஒரு குறுந்திரைப்படத்தைப் பற்றி. பொதுவாகவே குறுந்திரைப்படங்களைப் பார்ப்பதில் நம்மவர்கள் பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. நானும் தான். அண்மையில் எனக்கு இரண்டு குறுந்திரைப்படங்களை YOUTUBE வாயிலாகப் பார்க்கக் கிடைத்தது. அதில் என்னைக் கவர்ந்தது ஒன்று மட்டுமே.
"குவியம்"
ஒரு காதல் கதை. குறுந்திரைப்படத்திற்கான அம்சங்கள் அழகாய்ப் பொருந்திய ஒரு கதை. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் விறுவிறுப்பு, கொஞ்சம் காதல் - அதுதான் குவியம். ஒரு தொழில்முறை புகைப்படப்பிடிப்பாளனின் கதை. தொய்வில்லாத கதை பலம். பின்னணி இசையும் காட்சியமைப்பும் போதுமான அளவுக்கு இருக்கிறது. கதைச் சுருக்கமெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் சுருக்கமான கதைதானே குறுந்திரைப்படத்தின் பிரதான அம்சமே.
இந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல முனைந்த விடயங்கள் இவை தான்.
01. குறுந்திரைப்படம் என்பது திரைப்படத்திலும் பார்க்க அழகிய கலை. இதை ஊக்குவிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
02. குறுந்திரைப்படத்திற்கென தனியானதொரு அடையாளம் நம் சமூகத்தின் மத்தியில் இல்லை. அந்த அடையாளம் வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
03. திரைப்படங்களைப் போல வணிக நோக்கம் தவிர்த்து வெளியிடப்படுபவை என்பதால் சமூகத்தின் ஆதரவு நிச்சயம் தேவை.
04. முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர்கள் உட்பட வசதி படைத்தவர்கள் எல்லோருமே ஏதேனும் ஒரு குறுந்திரைப்படத் தயாரிப்பதற்கு உதவ முன்வர வேண்டும்.
இன்னும் உங்களால் முடியுமானவரை உதவிகளை நல்குங்கள். நாளைய சமூகம் ஒளிமிக்கதாய் மலரட்டும்!
நல்ல குறும்படம். ரசித்தேன். காதலுக்காக ஒரு பொய் கூடவா சொல்லக்கூடாது... அதானே...
ReplyDeleteஅதானே.... நன்றிங்க.... வருகைக்கும் கருத்துக்கும்.
Delete