வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு....
இது எனது 16வது திரைப்படம். (என்னாது? நீங்க படமெல்லாம் எடுக்குறீங்களா சார்? - இது என்ன உங்க புதுப் பட தலைப்பா? - அப்படின்னெல்லாம் அவசரப்பட்டு கேள்வி கேட்கக் கூடாது. அதாவது நான் திரையரங்கில் பார்க்கும் 16வது படம்னு சொல்ல வந்தேன்.) சினிசிட்டி திரையரங்கு - மருதானை, கொழும்பு-10. நுழைவுச்சீட்டின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. (எந்த விலைதான் கூடாமல் இருக்கிறது?) அரங்கம் நிறைந்த காட்சின்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். முன்வரிசை ஆசனங்கள் அப்படியே கிடந்தன. படம் வந்து ஒரு மாசமாயிருச்சில்ல? (நான் படம் பார்த்தது 2012/05/13 - ஞாயிற்றுக் கிழமை - மாலை 06:30 மணி)
இப்ப எந்த படத்தைப் பத்தி பேசப் போறேன்னு தலைப்பை வச்சே நீங்க புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பத்தி தான் பேசப் போறேன். கதையே இல்லாமல் வெற்றி கரமாக ஓடிய திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. வலுவான திரைக்கதைப் பின்னணி ஏதும் இதற்கு இல்லை.
நகைச்சுவைத் திரைப்படம் என்றாலும் கூட திரைக்கதை மனதில் ஓட்ட வேண்டும். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சற்று ஏமாற்றம் தந்ததாகவே உணர முடிகிறது. சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லை. கதாநாயகன் கதாநாயகியிடம் (+ பார்க்கிற எல்லாப் பெண்களிடமும்) உருகி 'வழியும்' காட்சிகள் தான் இருக்கின்றன. 'வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு' பாடலைத் தவிர வேறு எந்தப் பாடலுமே கதையுடனோ மனதுடனோ ஒட்டவே இல்லை.
சினேகா, ஆர்யா இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். தங்கள் பங்களிப்பை இருவரும் சிறப்பாகவே வழங்கியிருக்கிறார்கள். சாமியார் நகைச்சுவைக் காட்சி, விமானத்தில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சி, இறுதிப் பகுதியில் உதயநிதியும் சந்தானமும் பட்டாம் பூச்சி கதை சொல்லும் காட்சி ஆகியன வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. பார்த்தாவினால் தான் (சந்தானம்) படமே ஓடியது என்று சொன்னால் கூட தவறே இல்லை. கலகலப்பு @ மசாலா cafe என்கிற சுந்தர் சி.யின் புத்தம் புதிய திரைப்படமொன்றிலும் சந்தானம் கலக்கியிருப்பதாக அறிந்தேன். இப்போது 'சந்தான திசை' நடக்கிறது போலும்.
பாடல்கள் விடயத்தில் என்னைப் பொறுத்தவரை ஒரு பாடலைத் தவிர எல்லாமே சொதப்பல் தான். அது 'வேணா மச்சான்' பாடல்தான். படம் வருவதற்கு முன்பே பலராலும் முணுமுணுக்கப் பட்ட ஒரு பாடல். இப்பாடலைக் கேட்கும் போது 'கழுகு' திரைப்படத்தின் 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்' பாடலும் நினைவுக்கு வந்து போகிறது.
மீரா (ஹன்சிகா) அழகுப் பதுமையாக படம் முழுவதும் வலம் வருகிறார். சட்டென்று உணர்ச்சி வசப்படும் கதாபாத்திரம் இவருக்கு. நன்றாகவே நடித்திருக்கிறார். சொதப்பல் என்று சொல்வதற்கில்லை. சரவணனின் (உதயநிதி) அம்மா - அப்பா கதா பாத்திரம் தொடர்பிலும் சொல்லியே ஆக வேண்டும். சரவணனின் அம்மா - அப்பா இருவரும் 20 வருடமாக பேசிக் கொள்வதே இல்லையாம். காரணம் சரவணனின் அம்மா தான் ஒரு பட்டதாரி என்று சொல்லி கல்யாணம் செய்து கொண்டது தான். அதனால் அம்மா என்றைக்கு பட்டம் வாங்குகிறாரோ அன்று தான் அவருடன் பேசுவது என்று வைராக்கியம் பூண்டிருக்கிறார் அப்பா. இதில் எந்தளவு யதார்த்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கணவன் - மனைவி எந்த வகையான ஏற்றத் தாழ்வும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற கருத்தை சமூகத்துக்கு சொல்லிச் செல்கிறது.பெத்தவங்க இப்படி இருந்தா புள்ளைங்க சரவணன் (உதயநிதி) மாதிரி தறுதலைகளாகத் தானே வளரும்?
'தயாரிப்பாளர் உதய நிதி', சந்தானம், நகைச்சுவைத் திரைப்படம் போன்ற வாசகங்கள் ரசிகர்களைத் திரையரங்கிற்கு ஈர்த்திருந்தன. ஆனால் அவர்கள் எதிர் பார்த்த திருப்தியை 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வழங்கியதா என்பதே எமது கேள்வி. எனக்கும் என்னுடன் படம் பார்க்க வந்திருந்த 'ஹரி' என்கிற நண்பருக்கும் 'திருப்தி போதாது' என்ற பதிலே தேர்வாக அமைகிறது. 'பிரியா' என்கிற தோழி ஒருவர் உதயநிதி தன் பங்கை சிறப்பாகவே செய்திருப்பதாகவும் படம் ரசிக்கும் படியாக அமைந்திருப்பதாகவும் கூறினார். ஆனால் கொடுத்த பணத்திற்குரிய பெறுமதி படத்தில் கிட்டவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
படத்தில் என்ன தான் குறைகள் இருந்தாலும் படம் நன்றாகவே ஓடியிருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அக்கறை செலுத்தி இருக்க வேண்டும் என்பதே எமது கருத்தாக அமைகிறது. உதயநிதி இனி தொடர்ந்து நடிப்பாரா என்று தெரியவில்லை. நடித்தால் எமது (ரசிகர்களின்) ஆலோசனையையும் கருத்திற் கொள்வார் என நம்புகிறோம். (நா போன் பண்ணி சொன்னேன். அதுக்கு அவுரு ஓகே ஓகே - னுசொன்னாரு.)
'ஒரு கல் ஒரு கண்ணாடி' - 'சிகரம்' தரப்படுத்தலில் - " பார்க்கலாம்".
'சிகரம்' தரப்படுத்தல் முறை.
* படு மோசம்
* மோசம்
* பரவாயில்லை
* பார்க்கலாம்
* நன்று
* மிக நன்று
* 'சிகரம்' விருது
Punda sunni oll fucking punda olll da super movie
ReplyDelete