உலகத் தமிழ் இலக்கிய மாநாடு
கொழும்புத் தமிழ் சங்கம் தனது 70வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் இலக்கிய மாநாடொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. 2012 ஜூன் மாதம் 1,2,3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் இவ்விலக்கிய மாநாடு நடைபெற உள்ளது. "தமிழ் இலக்கியமும் , சமூகமும் - இன்றும், நாளையும்" என்ற தொனிப் பொருளிலேயே இம்மாநாடு நடை பெற உள்ளது. 2, 3, மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களும் மாநாட்டு தொனிப் பொருளுக்கு அமைவான கருத்தரங்குகள் இடம் பெற உள்ள அதே வேளை முதல் நாள் சென்னை பாரதியார் சங்கத்துடன் இணைந்து "பாரதி விழா" நடத்தப் பட உள்ளது.
மாநாட்டில் பங்கு பற்றுவதற்கான மற்றும் ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் சங்க இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சங்கத்தில் இடம்பெற உள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு" கொழும்பு தமிழ் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. குறித்த மாநாட்டிற்குப் பிறகு நடைபெறும் மாபெரும் விழாவாக இதனைக் கருத முடியும்.
ஜூன் மாதம் நடை பெற உள்ள உலகத் தமிழ் இலக்கிய மாநாடு சிறப்புற அமைய "சிகரம்" தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இவ்விலக்கிய விழாவில் உங்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக இலங்கையில் இவ்வாறான இலக்கிய விழாக்கள் இடம்பெறுவது மிகக் குறைவு. எனினும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது அதற்கு ஆதரவு வழங்க வேண்டியது நமது கடமை அல்லவா? எனவே, அனைவரும் வருக. தமிழ்ச் சுவை பருகிச் செல்க.
#தமிழ் #கொழும்பு_தமிழ்_சங்கம் #சிகரம் #உலகத்_தமிழ்_இலக்கிய_மாநாடு #மாநாடு #இலக்கியம் #பாரதி_விழா #இலங்கை #கொழும்பு
wish u all the best.ungal payanam thodara en manamartha vaalthukkal
ReplyDeleteஉங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Delete