வணக்கம் வலைத்தளம்!
அன்பார்ந்த வலைப்பதிவுலக நண்பர்களே! இன்று முதல் நானும் உங்களோடு வலைப் பதிவுலகில் இணைந்து கொள்ளப் போகிறேன். ஏற்கனவே வலைப் பதிவுலகிற்கு சற்றே அறிமுகமானவன் தான் நான். "தூறல்கள்".இப்படி ஒரு வலைப் பூவின் பெயரை அறிந்தவர்கள் ஒரு சிலராகத்தான் இருக்க முடியும். சிற்சில பிரச்சினைகள் காரணமாக "தூறல்கள்" வலைப் பதிவினை என்னால் தொடர முடிய வில்லை.
எனவே தான் இந்த "சிகரம்" என்ற புதிய வலைப் பதிவினை தொடங்கி உள்ளேன். இப் புதிய வலைப் பதிவினை தொடர்ந்து நடத்திச் செல்ல உங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கிறேன். நிகழ்காலத்தில் பயனுள்ள பல்வேறு விடயங்களையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்க "சிகரம்" தயாராக உள்ளது. வலைப் பூவுலகில் ஆயிரக் கணக்கான வலைப் பூக்கள் வலம் வருகின்றன. அத்தனைக்குள்ளும் எனது வலைப் பூவும் வாசகர்களின் மனம் கவர்ந்த வலைப் பூவாக திகழ வேண்டும் என்பதே எனது பேரவா.
எனது பெயர் சிகரம்பாரதி. இது எனது புனை பெயர் தான். இப் பெயரிலேயே நான் புகழ் பெற வேண்டும் என எண்ணுகிறேன். இலங்கையின் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன் நான். தற்போது கொழும்பில் தொழில் புரிகின்றேன். தொழிலுக்கும் நடுவில் வலைப் பதிவை தொடர்ந்து நடத்திச் செல்வது என்பது மிகக் கடினமான பணி என்ற போதிலும் சவாலை ஏற்றுக் கொண்டு முன் செல்லத் தீர்மானித்திருக்கிறேன். ஆகவே, தொடர்ச்சியான உங்கள் ஆதரவை எதிர் பார்த்து எனது சிகரத்தை தொடங்குகிறேன். நன்றி!
வணக்கம் வலைத்தளம்!
http://newsigaram.blogspot.com/2012/05/blog-post.html
#வணக்கம் #வலைத்தளம் #முதல்பதிவு #சிகரம் #சிகரம்பாரதி #தூறல்கள் #தமிழ் #எழுத்து #பேனா #FirstPost #Blogger #Blog #Blogspot #Sigaram #SigaramBharathi #Thooralgal #Writer
ஆதரவு eppothum undu thodarthu elutha vendum nanba thooral pola sigaramum poga koodathu
ReplyDeleteஅன்பு நண்பரே. உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து முன்னேறுவேன்.
ReplyDeleteBest of luck nanbaa..
ReplyDeleteThx nanba.
Deleteதங்கள் நட்பில் ஏழாவதாக இணைந்து விட்டேன் நண்பா ..... என் ஆதரவு சின்ன மற்றும் ஹாரியின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.... எங்கள் நட்பு வலைக்குள் உங்களுக்கும் ஒரு இடம் கொடுப்பதில் மகிழ்ச்சியே....
ReplyDeleteதங்களின் தாராள மனதுக்கும் நட்பான வருகைக்கும் நன்றி தோழரே. சந்திப்போம்.
Deleteவாங்க... வாங்க... சிகரம் பாரதி மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துகள்...
ReplyDeleteவாங்க திரட்டியாரே. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் ஆசியோடு கண்டிப்பாக நான் முன்னேறுவேன். சந்திப்போம் சொந்தமே.
Deleteவணக்கம் பாரதி.பிந்திய கருத்திற்கு மன்னிக்கவும்.இந்த சிறிய தோழி அதிசயாவின் வாழ்த்துக்கள்....இது வரை தொடர்ந்ததை போல இன்னுமின்னும் அதிகம் சிறப்புகள் பெற்று சிகரம் தொட வேண்டும் நண்பா.உண்மையில் இப்பதிவு தாங்கள் இட்ட தருணம் நான் பதிவுலகிற்கு சிசு.அதனால் தவறிவிட்டேன்.ஆனால் இப்போ நிறைந்த நட்போடும் அன்போடும் வாழ்த்துகிறேன்.வாழ்க நண்பா...!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே. நீங்கள் மட்டுமல்ல. நானும் சிசுவாகத்தான் இருந்தேன். உங்களுக்கு ஒரு வாரம் முன்பு தான் நான் வந்தேன். தங்கள் அன்புக்கு என்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன். சந்திப்போம் உள்ளமே.
Deleteஏனோ அதிசயா ஒன்றும் தெரியாத பிள்ளை போல் பெசியிருக்கிறாள்...
Deleteதாங்கள் வணக்கம் கூறி ஆரம்பித்துள்ளீர், நான் அதையெல்லாம் கூற மறந்துவிட்டேன், காலத்தின் ஓட்டத்தில் ஓட ஆரம்பித்து விட்டதன் அறிகுறி என்று நினைக்கிறேன் நண்பரே...
ReplyDeleteஅதற்கென்ன? வணக்கம் சொல்வது என்பது சம்பிரதாயம் மற்றும் நம்மை அறிமுகம் செய்து கொள்தல் என்பதற்காகவே. சந்திப்போம் உள்ளமே.
Delete