மாண்புமிகு முதலமைச்சர்!
# சிட்டிசன் படம் பார்த்திருக்கிறீர்களா? அதன் இறுதிக்காட்சி நினைவிருக்கிறதா? அதில் மக்களுக்கு துரோகம் இழைத்த அரசியல்வாதிகளுக்கு கதாநாயகன் வழமையான முறையில் அல்லாமல் வித்தியாசமான ஒரு தண்டனையைக் கோருவார். படம் பார்க்கும் பலருக்கும் அது மிகைப்படுத்தப்பட்ட காட்சியாகவே தோன்றியிருக்கும். ஆனால் இன்று அ.இ.அ.தி.மு.க வின் தானைத் தலைவியின் வழக்கையும் அதன் தீர்ப்பை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் அக்கிரமங்களையும் பார்க்கும் போது அந்தக் காட்சி மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்பது புரியும்.
ஜெயலலிதாவை கைது செய்யாமல் இப்படி தண்டனை வழங்கியிருந்தால் என்ன?
* இந்தியாவின் எந்தவொரு தேர்தல்களிலும் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ ஆயுட்காலத்தடை.
* ஊழல் பணம் மற்றும் அதன் மூலம் பெற்ற வருமானம் அதன் மூலம் பயன் பெற்றோரின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
* இந்த ஊழலில் கட்சியினர் சம்பந்தப் பட்டிருந்தால் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஊழலுக்குத் துணை போனவர்களுக்கும் ஆயுட்கால அரசியல் தடை.
* இந்த ஊழலுக்கு துணை போன அரசு அதிகாரிகள், ஊழல் வழக்கை திசை திருப்ப முயன்ற போலி சாட்சிகள், வழக்கை தாமதப்படுத்திய அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு அரசுப் பதவிகளில் இருந்து பணி நீக்கம் ; எதிர்கால ஓய்வூதியம் தடை ; அரசுப் பணிகளில் இணைய ஆயுட்காலத் தடை.
* மக்கள் முன் பகிரங்க மன்னிப்பு கோரல்.
நீங்க என்ன சொல்றீங்க மக்களே?
# ஜெயலலிதாவை எப்படியாவது ஜாமீனில் வெளியே கொண்டுவந்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க துடியாய்த் துடிக்கிறது. ஒரு வேளை ஜெயலலிதா வெளியே வந்துவிட்டால் அவர் முதல்வராக இல்லாவிட்டாலும் அ.தி.மு.க தலைவராக இருந்தேனும் ஆட்சியில் செல்வாக்கு செலுத்துவார். இவ்வாறானதொரு சூழலில் தமிழக அரசு ஊழலுக்கு எதிராகப் போராடும் என்று எவ்விதம் எதிர்பார்க்க இயலும்?
* இவை தமிழகத்தின் 'மாண்புமிகு முதலமைச்சர்' குறித்து முகநூலில் நான் எழுதியவை.....

Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்