வலைப்பதிவு வழிகாட்டி - 02

நாம் முதலில் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று பிளாக்கர் (Blogger) வழியாகப் பார்க்கலாம். 

வலைப்பதிவை உருவாக்க உங்களிடம் மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருப்பது அவசியம். இன்றைய காலத்தில் நம்மில் பெரும்பாலானோரின் கைகளில் திறன்பேசிகள் (Smart Phones) இருக்கின்றன. பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தவும் இணைய விளையாட்டுக்களில் பங்கேற்கவும் மற்றும் அலுவலகத் தேவைகளுக்கும் மின்னஞ்சலைப் பயன்படுத்துவதால் நம்மிடம் மின்னஞ்சல் கணக்கொன்று கட்டாயம் இருக்கும். ஆகவே மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி என்று தனியாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை (யாருக்கேனும் அந்த சந்தேகம் இருந்தால் கருத்துரைப் பெட்டியில் பதிந்தால் தனிப்பதிவு வழியாக விளக்குகிறேன்). 

வலைப்பதிவு உருவாக்கம் 

உங்கள் இணைய உலாவியை (Browser) திறந்து கொள்ளுங்கள் (Chrome/ Firefox, Etc). 

முகவரிப் பட்டியில் (Address Bar) பிளாக்கர் முகவரியை உள்ளிடுங்கள். 


உங்களுக்கு இவ்வாறானதொரு திரை கிடைக்கும். 

படம் - 01 


நீங்கள் ஏற்கனவே வலைப்பதிவை உருவாக்கியிருந்தால் உங்கள் கணக்கில் உள்நுழையலாம் (Sign In). 

அல்லது நீங்கள் இப்போது தான் கணக்குத் தொடங்குகிறீர்கள் எனில் Create Your Blog தெரிவைப் பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவை உருவாக்க ஆரம்பிக்கலாம். 

வலைப்பதிவு கணக்கில் உள் நுழைதல் 

குறித்த தெரிவை சொடுக்கியதும் உங்களுக்கு இந்த இரண்டாவது திரை காட்சியளிக்கும். 

படம் - 02 


நீங்கள் உங்கள் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகவரியை இங்கே இட்டு Next பொத்தானை கொடுக்க வேண்டும். உங்கள் Yahoo, Outlook மின்னஞ்சல் கணக்கு முகவரியை இங்கே பயன்படுத்த முடியாது.

இதுவரை மின்னஞ்சல் கணக்கு இல்லையெனில் Create account தெரிவை சொடுக்குவதன் மூலம் Gmail கணக்கு ஒன்றினை சில நிமிடங்களில் உருவாக்கிக் கொள்ளலாம். 

படம் - 03

படம் - 04 
உங்கள் கடவுச் சொல்லை உள்ளிட்டு Next பொத்தானை சொடுக்குங்கள். உங்கள் மின்னஞ்சல் கணக்கின் கடவுச் சொல் மறந்திருந்தால் Forgot password தெரிவை சொடுக்கி உங்கள் கடவுச் சொல்லை மீட்டமைத்துக் கொள்ளுங்கள். 

பிளாக்கர் பயனர் கணக்கை கட்டமைத்தல் 

பிளாக்கர் கணக்கிலும் உங்கள் பிளாக்கர் வலைத்தளத்திலும் உங்கள் பெயர் எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்பதை இங்கே உள்ளிடலாம். உங்களுக்கு விருப்பமான பெயரை உங்களுக்கு விருப்பமான மொழியில் உள்ளிட முடியும். 

படம் - 05 


முக்கிய குறிப்பு: இப்போது கூகிள் பிளஸ் (Google Plus / Google +) சமூக வலைத்தள சேவையை கூகிள் நிறுவனம் மூடிவிட்டது. நீங்கள் புதிய கூகிள் பிளஸ் சமூக வலைத்தள கணக்கை உருவாக்க முடியாது. 

எனவே 'Share your posts with the world of Google+. Switch to a Google+ profile' என்னும் தெரிவை சொடுக்க வேண்டாம். 

ஏற்கனவே கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்துடன் உங்கள் பிளாக்கர் கணக்கை இணைத்திருந்தால் அந்த சுய விவரப் பக்கம் இல்லாமல் போயிருக்கும். எனவே நீங்கள் உங்கள் பிளாக்கர் பயனர் கட்டமைப்பை மீளக் கட்டமைக்க வேண்டியது அவசியம் என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள் (விளக்கம் தேவைப்பட்டால் தனியாக விளக்கப்படும்). 

உங்கள் பிளாக்கர் பயனர் பெயரை உள்ளிட்டு 'Continue to Blogger' தெரிவை சொடுக்குங்கள். 

இப்போது நீங்கள் வலைப்பதிவு உருவாக்குவதற்குத் தயாராகி விட்டீர்கள். 

உங்களுக்கு கீழே உள்ள திரை காட்சி அளிக்கும். 

படம் - 06



இப்போது என்ன செய்ய வேண்டும்? பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ஆக்கப் பொறுத்தவர்கள் ஆற பொறுக்கக் கூடாதா? அடுத்து வரும் படிமுறைகள் மிக முக்கியமானவை என்பதால் தனியாகவே விளக்க எண்ணியுள்ளேன். கொஞ்சம் காத்திருக்கலாமே? 


A Tamil blog creator guide. How to create Blogger site in Tamil? How to create WordPress site in Tamil? How to create Personal Website? Blog creator guide in Tamil.


(வழிகாட்டி வருவான்...)

வலைப்பதிவு வழிகாட்டி - 02  
https://newsigaram.blogspot.com/2019/04/valaippathivu-valikaatti-02.html 
#Blogger #WordPress #Tamil #Guide #பிளாக்கர் #வேர்ட்பிரஸ் #வலைப்பதிவு #வழிகாட்டி #தமிழ் #இணையத்தளம் #வலைத்தளம் #வலைப்பூ 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!