வலைப்பதிவு வழிகாட்டி - 03
பிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
![]() |
Image Credit : Google |
பிளாக்கர் வலைப்பதிவு ஒன்றை உருவாக்க ஜிமெயில் (GMail) மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருப்பது அவசியம். ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கு இதுவரை உங்களிடம் இல்லையென்றால் இப்போதே அதனை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்து https://www.blogger.com என்னும் முகவரிக்கு சென்று உங்களுக்கான வலைப்பதிவை உருவாக்க ஆரம்பியுங்கள். உங்களுக்கான பயனர் பெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள். கூகிள் பிளஸ் (Google Plus) சமூக வலைத்தள கணக்கை உருவாக்கவோ அதனை பிளாக்கருடன் இணைக்கவோ இனி முடியாது என்பதைக் கவனிக்கவும்.
வலைப்பதிவை உருவாக்குதல்
இப்போது நாம் படம் - 06இல் காட்டப்பட்டுள்ள திரையில் இருக்கிறோம்.
படம் - 06 |
இப்போது 'CREATE NEW BLOG' என்னும் பொத்தானை சொடுக்குங்கள்.
அடுத்து உங்களுக்கு கீழ் காட்டப்பட்டுள்ள திரை காட்சியளிக்கும்.
படம் - 07 |
இது மிக முக்கியமான இடம். அவசரத்தில் தவறிழைத்துவிடாதீர்கள்!
இங்கு நீங்கள் மூன்று மிக முக்கியமான படிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
படிமுறை 01: வலைப்பதிவுக்கான தலைப்பை (Title) உருவாக்க வேண்டும்.
உங்கள் வலைப்பதிவு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறதோ அதனை மையமாக வைத்து உங்கள் வலைப்பதிவுக்கான தலைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும். எந்த மொழியிலும் வலைப்பதிவு தலைப்பை உருவாக்கலாம்.
வலைப்பதிவின் தலைப்பை எப்போதும் மாற்றிக் கொள்ள முடியும். என்றாலும் உங்கள் வலைப்பதிவை அடையாளப் படுத்தப் போவது இது என்பதால் தீர்க்கமாக சிந்தித்து வலைப்பதிவு தலைப்பை அமைப்பது நல்லது.
படம் - 08 |
படிமுறை 02: உங்கள் வலைப்பதிவுக்கான முகவரியை உருவாக்க வேண்டும்.
வலைப்பதிவின் தலைப்போடு தொடர்புடையதாகவும் சுருக்கமாகவும் அடிக்கடி உங்கள் வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் வலைப்பதிவு முகவரியை உருவாக்குங்கள்.
வலைப்பதிவு முகவரியையும் நீங்கள் பின்னர் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், வலைப்பதிவின் தலைப்பை மாற்றுவது என்பது வீட்டுக்கு வெள்ளையடிப்பது போன்றது. வலைப்பதிவின் முகவரியை மாற்றுவது என்பது வீட்டையே மாற்றுவது போன்றது. பழைய முகவரிக்கான உரிமையை நீங்கள் இழந்து விடுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வலைப்பதிவின் தலைப்பு மற்றும் முகவரி ஆகியன தேடல் இயந்திரங்களில் செல்வாக்கு செலுத்தும் என்பதால் அடிக்கடி மாற்றுவதைத் தவிர்ப்பது நல்லது.
படம் - 09 |
நீங்கள் வழங்கும் தலைப்பு கிடைக்காவிட்டால் எச்சரிக்கை அறிவிப்பு காண்பிக்கப்படும். ஆகவே பொருத்தமான புதிய வலைப்பதிவு முகவரியை உருவாக்குங்கள்.
படம் - 10 |
உங்கள் வலைப்பதிவு முகவரி ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் சரி அடையாளம் காண்பிக்கப்படும். எழுத்துப் பிழைகள் இன்றி உங்கள் வலைப்பதிவு முகவரியை உள்ளிட்டு இருக்கிறீர்களா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். பிழை இருந்தால் சரியாக உள்ளிட்டு மீண்டும் முயற்சியுங்கள்.
படிமுறை 03: உங்கள் வலைப்பதிவுக்கான Theme ஐ தெரிவு செய்ய வேண்டும்.
'Simple' என்னும் Theme ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள். இது உங்கள் வலைப்பதிவு எவ்வாறு வாசகர்களுக்கு காட்சியளிக்கும் என்பதை தீர்மானிக்கும்.
படம் - 11 |
இதனை நீங்கள் பின்னர் உங்கள் தேவைக்கேற்ப மாற்றவும் உங்கள் விருப்பப்படி கட்டமைக்கவும் முடியும்.
இப்போது 'Create blog!' என்னும் பொத்தானை சொடுக்கினால் உங்களுக்கான வலைப்பதிவு தயார்.
இத்தோடு எல்லாம் முடிந்து விட்டதா? இல்லை. இன்னும் பல படிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் நாம் பார்க்கலாம்.
வலைப்பதிவு வழிகாட்டி - 03
https://newsigaram.blogspot.com/2019/04/valaippathivu-valikaatti-03.html
#Blogger #WordPress #Tamil #Guide #பிளாக்கர் #வேர்ட்பிரஸ் #வலைப்பதிவு #வழிகாட்டி #தமிழ் #இணையத்தளம் #வலைத்தளம் #வலைப்பூ
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்